இனப்பெருக்கத் துணை உறுப்புகள் 103
சிறு நீர்ப்பை இவைவசரி பியூடல் கோர்ப்பஸ் ன்கேவர்னோசம் கார்ப்பக் ஸ்போலிஜியோசம் Glansen விதை இனப்பெருக்கத் துணை உறுப்புகள் 103 டக்டன் டிஃபரன்ஸ் விதைமேலி விகைப்பை விந்துச் சிமிழ் வெளியேற்ற நாளம் வித்தகம் குதம் கெளன்பர் சுரப்பி படம் 3. புறக் குழாயுள் திறக்கிறது. இவ்விடத்திலிருந்து சிறு நீர்ப் புறக்குழாய் இனப்பெருக்கப் பொது உறுப்பாக அமைகிறது. விந்துச் சிமிழ். அகல் நாளத்தின் இறுதிப்பகுதி யில் இருபுறமும் பக்கத்திற்கொன்றாகக் குழாய் போன்ற நீட்சி உள்ளது. இது மஞ்சள் நிற நீர்மத்தை விந்து நீரோடு சேர்க்கிறது. சுக்கிலச் சுரப்பி. இது சிறுநீர்ப் புறக்குழாயின் தொடக்கத்தில் அதைச் சுற்றி அமைந்துள்ளது. சுரப்பியாகவும், தசையாகவும், நார்த்திசுவாகவும் உள்ளது. இது சிறுநீர்ப்புறக் குழாயுள் ஊடுருவும் சளியற்ற நீரைச் சுரக்கிறது. கவுபர் சுரப்பிகள். சிறுநீர்ப்புறக் குழாயினுள் திறக்கும் இச்சுரப்பிகள் அதன் பக்கத்திற்கொன்றாகப் பட்டாணி அளவிலிருக்கும். இதன குழாய்கள் ஏறத் தாழ 2-3 செ.மீ. நீளத்திலிருக்கும். இது சளிபோன்ற நீரைச் சுரக்கிறது. மேலும் பல சுரப்புகளும் இனப் பெருக்கத்திற்குத் தேவையான சுரப்பு நீரைச் சுரக் கின்றன. ஆண்குறி உள்பியூடன்டல் தமனியின் பல கிளைகள் மூலம் இரத்தத்தைப் பெறுகிறது. இதன் சிரைகள் உள்பியூடன்டல் சிரையோடும், சிறுநீர்ப் பைச் சிரைப்பின்னலோடும் இணைகின்றன. சுக்கி லச் சுரப்பி, உட்பியூடன்டல்,கீழ் குளுட்டியல் தமனிகள் மூலம் இரத்தத்தைப் பெறுகிறது. இதன் சிரைகள் சிறுநீர்ப்பைச் சிரைப்பின்னலோடு இணை யும் சுக்கிலச்சுரப்பிச் சிரைப்பின்னலை உருவாக்கி முடிவில் உள் இடுப்புச் சிரைகள் திறக்கின்றன. பியூடன்டல், ஈர்ப்பகத்தொடைச்சந்து நரம்புகள் ஆண்குறிக்கு நரம்புகளைத் தருகின்றன. கீழ் அடி வயிற்று நரம்பிலிருந்து சுக்கிலச்சுரப்பி நரம்பிழைகள் வருகின்றன. ஆண்குறியிலிருந்து நிணநீர் வெளித் தொடைச்சந்து நிணநீர்ச் சுரப்பிகளுக்குச் சென்று சுக்கிலச்சுரப்பி, நிணநீர் விந்துச் சிமிழ், சிறு நீர்ப்பை ஆகிய உறுப்புகளின் நிணநீரோடு செல்கிறது. ஆண் இனப்பெருக்கத்துணை உறுப்புகள் விரை யில் உற்பத்தியான விந்து நீரைச் சுமந்து வந்து கலவி யின்போது யோனியினுள் செலுத்த உதவுகின்றன. பெண் இனப்பெருக்கத் துணை உறுப்புகள் பெற்ற விந்துநீரை மேல் நோக்கிச் செலுத்திச் சினைப்பையி லிருந்து வரும் முட்டையோடு கலந்து கருவுற உதவி செய்கின்றன. ஆ. வாசுகிநாதன்