116 இனங்காணா விண்வெளிப் பொருள்கள்
116 இனங்காணா விண்வெளிப் பொருள்கள் காண உவர் உலர் தாவரக் கூடமாக இருப்பதால் அங்கு அனுப் பியோ, நேரில் சென்றோ கண்டறியலாம். அவ்விடத் திலும் இயலாவிடில் இங்கிலாந்து கியூ தோட்டத்தில் உள்ள தாவரக்கூடத்திலோ உலகத் தாவரவியல் வல்லுநர்கள் மூலமோ தாவரம் எதுவென்பதைக் கண்டறியலாம். மேலும் உலகில் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தியும், உலகத்தில் உள்ள தாவரக் குடும்பங் களைப் பற்றி ஆழ்ந்து ஆய்வு செய்தும் வெளியிட் டிருக்கும் அறிவியல் கட்டுரைகளின் உதவியாலும் தாவரத்தைக் கண்டறியலாம். தாவரம் எந்த வழியிலும் ஒப்பிட முடியாமல் இருக்குமேயானால், அதன் தனித் தன்மைகளை எத் தாவரத்துடன் ஒப்பிட இயலும் என்று எழுதி, இலத் தீன் மொழியில் மொழி பெயர்த்து, அத்தாவர உறுப்புகளின் வரைபடங்களை எழுதி, முறைப் படி (ICBN படி), அறிவியல் வெளியீட்டில் வெளி யிட்டுத் தாவர இயலுக்குப் புதிய தாவரங்களைப் டக்கலாம். கா. இராமமூர்த்தி படை இனங்காணா விண்வெளிப் பொருள்கள் பறக்கும் தட்டு என்று அழைக்கப்படும் இனங் காணா விண்வெளிப் பொருள்களைப் பார்த்ததாகப் பழங்காலந்தொட்டே பலர் கூறி வந்த போதும், இது இன்னும் ஐயத்திற்கு அப்பாற்பட்ட அறிவியல் கருத்தாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இனங் காணா விண்வெளிப் பொருள்களைப் பார்த்ததாக. இந்த நூற்றாண்டில் உலகில் அங்குமிங்குமாகப் பலர் தொடர்ந்து கூறுவதிலிருந்தும், சிலர் ஒளிப்பட மெடுத்து, தங்களின் கூற்றுக்குத் தக்க சான்றுகளைக் காட்டுவதிலிருந்தும், இனங் காணா விண்வெளிப் பொருள்களைப் பற்றிய செய்திகளை அறிவிய லுக்கு அப்பாற்பட்டவை என்று ஒதுக்கிவிடவும் முடியாது. 1965இல் அமெரிக்க விமானப் படையினர் இனங் காணா விண்வெளிப் பொருள்கள் பற்றிய செய்தி கள் அனைத்தையும் முறையாகத் தொகுத்து நுணுகி ஆராய்ந்தனர். அவர்களுடைய முடிவு, தனி மனிதர் கள் அல்லது தனிக் குழுக்களால் இனங்காணா விண்வெளிப் பொருள்களைக் கண்டதாக விவரிக்கப் பட்ட செய்திகளில் பெரும்பாலானவை, இயற்கையில் நடைபெறக்கூடிய வாய்ப்புள்ள வேறு சில இயற் பியல் நிகழ்வுகளால் விளக்கப்படக் கூடியனவாக இருப்பதால், இதுவரை கண்ட இனங்காணா விண் வெளிப்பொருள்கள், வேற்றுலக உயிரினங்களின் படைப்புகளாக இருக்க முடியா என்பதை உறுதி செய்தன. ஆயினும் இப்பேரண்டத்தில் கோடிக் கணக்கான மண்டலங்களும், ஒரு மண்டலத்தில் கோடிக் கணக்கான விண்மீன்களும் ஒரு விண்மீனில் சராசரியாக மூன்று அல்லது நான்கு கோள்களும் உள்ளன என்று வானியலார் ஆராய்ந்து அறிந்துள்ளனர். அண்டமெங்கும் சிதறிக் கிடக்கும் கோடிக்கணக் கான கோள்கள், அனைத்திலும் இல்லாவிட்டா லும், பூமியைப் போல ஒரு சில கோள்களிலாவது உயிர் வாழ்க்கையும், படி மலர்ச்சியும் ஏற்பட்டி ருக்கலாம் என்றும், இவற்றில் சிலவற்றில் அறிவுக் கூர்மை மிக்க உயிரினங்கள் வாழலாம் என்றும் கருதுவதற்கு இடமுண்டு. இதை வெறும் நினை வோட்டமாக முடிவு செய்த கருத்தென்று ஒதுக்கி விடுவதற்கில்லை. வாய்ப்புகளைப் பற்றித் தெரிவிக்கும் புள்ளியியல் கோட்பாடுகள் இக்கருத்தை உறுதி செய்யாவிட்டாலும், தவறு என்று சுட்டிக் காட்டவில்லை. இந்த அடிப்படையில் இனம் காணா விண் வெளிப் பொருள்கள், சிந்தனையைக் கவரக் கூடியனவாக இருக்கின்றன. கூட அமெரிக்காவில் பொழுதுபோக்காகத் தொலை நோக்கிகளைப் பயன்படுத்தி வானத்தை ஆராய் வோர் பலர் இருப்பதால், இனங்காணா விண் வெளிப் பொருள்கள் பற்றிய செய்திகள் அந்நாட்டு மக்களிடையே மிகுதியாகக் கிடைப்பதுடன் இப் பொருள்கள் இருக்கக்கூடும் என்ற எண்ணமும் அவர் களிடம் மிகுதியாகப் பரவியுள்ளது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் கிடைத்த செய்தி களைத் தொகுத்தபோது, இனங்காணா விண் வெளிப் பொருள்கள் உருளை, நீள்வட்டசும், தட்டு கோணம் போன்ற பல வடிவங்களிலும், பரிமாணங் களிலும் தோன்றியிருக்கின்றன என்பதும், அவை பெரும்பாலும் மிகவும் மிளிர்வுடன் ஒளிரும் பொருள் களாகக் காட்சியளித்திருக்கின்றன என்பதும் தெரி கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இனம் காணா விண்வெளிப் பொருள்கள் மிகுதியாகத் தென்படுகின்றன என்பதும், அவை பகல் நேரங் களைவிட இரவு நேரங்களிலும், நகர்ப்புறங்களை விடக் கிராமப்புறம் அல்லது தனித்த இடங்களிலும் அடிக்கடித் தோன்றுகின்றன என்பதும் செய்தித் திரட்டுகளிலிருந்து தெரிய வருகின்றன. இவற்றின் இயக்கங்களைப் பற்றிக் கண்டோர் களால் கூறப்படும் செய்திகள் பெரும் வியப்பிற் குரியனவாக உள்ளன. ஏனெனில் அக்கருத்துகள், இன்றைக்கு உறுதியாக நிறுவப்பட்ட இயற்பியல், வானியக்கவியல் விதிகளுக்கும், நெறிகளுக்கும் முற் றிலும் முரண்பட்டவையாகத் தோன்றுகின்றன. விண்வெளியில் பறக்கும்போது இனங்காணா விண் வெளிப் பொருள்கள் நொடிப் பொழுதில் தம் இயக் கத்தை நிறுத்திக்கொண்டுவிட்டு ஓய்வு நிலையை