உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிப்பு உணவுகளும்‌ இனிப்பூட்டிகளும்‌ 129

கொழுப்புச்சத்து எரிபொருளாகச் செலவிடப்படு கிறது. இந்த வேதி மாற்றம் இந்நிலையில் முழுமை யாக நடைபெற முடியாமல் மாற்றுவழியில் அசி டோசிஸ் என்ற அமில நிலை ஏற்படுகிறது (இரத் தம் பொதுவாக, சிறிதளவே காரத் தன்மை கொண்டு ஏறத்தாழ நடுநிலையிலேயே பராமரிக்கப் படுகிறது). மேலும் இந்த அமிலங்களுடன் சோடியம் சேர்ந்து சோடியம் உப்புகளாகச் சிறுநீரில் வெளி யேறுகின்றன. எனவே மிகுதியான சோடியம் இழப்பு ஏற்படுகிறது. கல்லீரலில் குளுகோஸ் வளர்சிதைமாற்றம் அடையும்போது கிடைக்கும் குளுகுரோனிக் அமிலம், நச்சு நீக்கும் தன்மை கொண்டது; உட்கொள்ளப் பட்ட வேதிப் பொருள்களும் நுண்ணுயிரிகளும் ஏற் படுத்தும் நச்சுத் தன்மையைப் போக்கி உடலிலிருந்து வெளியேற்றத்தக்க கழிவுப் கழிவுப் பொருளாக மாற்று கின்றது. நரம்புத் திசுக்களின் ஒருங்கிணைந்த செயல் பாட்டிற்குக் குளுகோஸ் இன்றியமையாததாகும். குளுகோஸ் மூளைக்கு வலிமை தருகிறது. தொடர்ச்சி யாகச் சீரான அளவு இரத்தத்தில் குளுகோஸ் இல்லாதபோது மூளை நிலையான சிதைவுக்கு உட் படுகிறது. குடல் பகுதியைக் கடக்கும்போது லேக்டோஸ் மற்ற மாவுப் பொருள்களைவிட மிகுந்த நேரம் தங்கி இருக்கிறது. இதனால் வைட்டமின் B, வைட்ட மின் K ஆகியவற்றைத் தயாரிக்கும் நுண்ணுயிரிகள் ஊக்கம் உண்டாகிறது. மேலும் இது மல மிளக்கியாகவும் செயல்படுகிறது. மாவுச் சத்து அல்லது அதன் விளைபொருள்கள் நியூக்ளிக் அமிலமும், இணைப்புத் திசுக்களும், நரம்புத் திசுக்களும் உருவாவதற்கான முன்னோடி களாகும். மாவுச்சத்தும் சர்க்கரையும் கிடைக்கும் உணவுப் பொருள்கள். தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பால், இனிப்புப் பண்டங்கள் ஆகியவை மாவுச் சத்து அளிக்கும் சிறப்பு உணவு வகைகளாகும். தூய்மையாக்கப்பட்ட சர்க்கரைப் பாகுகள், கிழங்கு வகைகள், மாவுப்பொருள் மட்டுமே கிடைக்கும் உணவிற்கு எடுத்துக்காட்டுகளாகும். தேன், மிட்டாய், ஜெல்லி, குளிர்பானம், சர்க் கரைப்பாகு ஆகியவை சர்க்கரையால் மட்டுமே ஆன உணவு வகைகள் ஆகும். இவை ஆற்றல் அளிப் பதைத் தவிர வேறு எந்தவித ஊட்டச்சத்து வகையையும் அளிக்காமையால் வெற்றுக்கலோர்? என்று அழைக்கப்படுகின்றன. இவை உடல் நலத்தைப் பாதுகாக்கும் மற்ற உணவுப் பொருள்களைக் கூட உண்ணமுடியாமல் பசியைத் தடுத்து விடுகின்றன. அ.க. 5.g சில இனிப்பு உணவுகளும் இனிப்பூட்டிகளும் 129 உணவுப் பொருள்கள் முதன்மையான மாவுச்சத்தை அளிக்கவல்லனவாக இருந்தபோதிலும் புரதம், வைட்டமின், தாதுக்கள் போன்ற மற்ற ஊட்ட வகைகளையும் தரக் கூடியவையாகும். எடுத் துக்காட்டு: பழம், கீரை வகைகள். பால் குறிப் பாகப் புரதத்திற்காக ஏற்கப்பட்டாலும், விலங்கு லேக்டோஸ் என்கின்ற மாவுச்சத்து மிகுதியாகக் கிடைக்கும் உணவு வகை இதுவேயாகும். காய்கறிகளில் பல்வேறு அளவுகளில் குளுகோஸ் கிடைக்கிறது. கீரைகளில் நீர்ச்சத்தும், செல்லு லோசும் மிகுந்திருப்பதோடு தாதுப் பொருள்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளன. கிழங்கு வகை கள், கடலை, அவரை போன்ற விதைகளில் மிகுதியான மாவுச்சத்து உள்ளது. இவற்றில் மேலும் புரதம், தாதுக்கள், வைட்டமின், செல்லுலோஸ் போன்றவை யும் பல்வேறு அளவுகளில் அடங்கியுள்ளன. லெக்யூம்ஸ் எனப்படும் அவரை, மொச்சை போன்றவை குறிப்பிடத்தக்க அளவு தாது உப்புகள், புரதம், வைட்டமின் ஆகியவற்றைப் பெற்றுள்ளன. சோயாமொச்சை, கொட்டை வகைகளிலும் சிறந்த புரதமும், கொழுப்பும் உள்ளன. செறிவூட்டப்பட்ட இனிப்புணவுகள். எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நன்கு தூய்மை செய்யப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட, தேர்ந்தெடுக் கப்பட்ட உணவு தானியங்களில் குறைந்த அளவே ஊட்ட உணவைப் பெறமுடிகிறது. காரணம், தூய்மை செய்யும்போது இவை உடல் நலப் பாது காப்பிற்கு இன்றியமையாத அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவற்றை இழந்து விடுகின்றன. எனவே, இவை சிறந்த உணவுத் தரம் பெறுவதற்காகச் செறிவூட்டப்பட வேண்டும். தென்னிந்தியர்களின் சிறப்பு உணவான அரிசி எந்திரத்தில் தீட்டப்படும்போது வைட்டமின் B பெரிதும் இழக்கிறது. நாகரிக வாழ்வில் எந் திரங்களின் பயன் தவிர்க்க முடியாமல் போய் விட்ட தால், செறிவூட்டப்படுதல் மிகவும் தேவையாகிறது. எடுத்துக்காட்டாக அமெரிக்க தேசிய மருத்துவ ஊட்ட உணவுக்கழகம், ரொட்டி, மாவு, தானிய வகைகளில் செறிவூட்டுதல் இன்றியமையாதது எனப் பரிந்துரைக்கிறது. அரிசியில் ஏற்படும் இழப்பு பச்சை அரிசியில் மிகுதியாக ஏற்படுகிறது. புழுங்கள் அரிசிபயன்படுத்து வதால் இதை ஓரளவு தவிர்க்கலாம். ஊறவைத்து அரைக்கும்போது தோல் பகுதியில் உள்ள சத்து கள் அரிசியின் உட்பகுதிக்குள் ஊடுருவுகின்றன. மிகுதி யாக எந்திரத்தில் தீட்டாமல் இருப்பதும் ஓரளவுக்கு வைட்டமின் இழப்பைத் தடுக்கும் முறையாகும். சில நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைவினால் ஏற்படும்