ஈ.டி.ட்டிஏ, 139
ஈ.டி.ட்டி.ஏ. 139 ஈட்டி மரங்கள் மர தாவரவியல் பண்புகள். இதில் ஐந்து- ஏழு சிற் றிலைகள் கொண்ட கூட்டிலை காணப்படும். பூக் களின் நீள் முட்டை வடிவ உருவமைப்பும், ரெசீம் வகைக் கிளைத்தலும் நீண்ட பூக்காம்புகளும் குறிப் பிடத்தக்கவை. புல்லிவட்டத்தைப் போல் இரு பங்கு நீளமுடைய வெண்மை நிற அல்லி வட்டமும் ஒன்பது மகரந்தத் தாள்களும் ஒன்றிரண்டு விதைகள் கொண்ட வெடிக்கும் காய்களும் காணப்படுகின்றன. இந்தியாவின் மிக முதன்மையான கட்டுமான மாக இருந்த போதும் இதன் உற்பத்தி வளர்ச்சி ஆகியவை போதிய அளவு இல்லை. ஆனால், இதனுடன் நெருங்கிய தொடர்புடைய புங்கமரம் போன்றவை விரைவில் வளரும் தன்மை கொண்டவை. அவற்றின் தளிர்விடும் தன்மையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈட்டிமரத்தின் முன்னேற்றம் கலப்பின முறையாலும், வீரிய வகைகளைத் திசு வளர்ச்சி முறையில் வளர்ப்பதாலும் நிறைவேறக்கூடும். ஈட்டி மரத்தின் இலைகளைக் கால்நடைத்தீவன மாகப் பயன்படுத்துவர். காபி பயிருக்கு நிழல் தரும் மரங்களாக இவற்றை வளர்க்கின்றனர். மரப்பட்டை யில் டானின் என்ற வேதி பொருள் இருப்பதால் தோல்பதனிடுவதிலும் இதைப் பயன்படுத்துகின்ற னர். இம்மரத்தின் சில பகுதிகள் மருந்தாகவும் பயன்படுகின்றன. அ. மணவாளன் ஈ.டி.ட்டி.ஏ. எத்திலீன் டை அமீன் டெட்ரா அசெட்டிக் அமிலம் என்ற வேதிப்பொருளின் சுருக்கமே ஈ.டி.ட்டி.ஏ (EDTA) ஆகும். இது உலோகங்களுடன் சேர்ந்து தொடுக்கிணைப்பை (chelation) உண்டாக்குகிறது. பொதுவாக ஈ.டி.ட்டி.ஏ. டெட்ரா சோடியம், இரும்பு. துத்தநாகம், கால்சியம் ஆகிய உலோகக் கொடுக்கிணைப்புச் சேர்மங்களாகப் புழக்கத்தில் உள்ளது. டெட்ரா சோடியம் ஈ.டி.ட்டி.ஏ என்ற