உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈதர்‌ 141

The Merck Index, Merck & Co., Inc., N.J. Tenth Edition, 1983. ஈதர் கரிம வேதிச் சேர்மங்களில் ரு ஹைட்ரோ கார்பன் தொகுதிகள் ஆக்சிஜன் அணுவினால் பிணைக்கப்பட்டிருந்தால் அவை ஈதர்கள் என்று வழங்கப்படுகின்றன. இவற்றின் பொதுவாய்பாடு CnHgn+,0. ஆல்கஹால்கள் எவ்வாறு நீரின் மோனோ அல்க்கைல் பெறுதிகளாகக் கருதப்படுகின் றனவோ அவ்வாறே ஈதர்களை நீரின் இரட்டை அல்க்கைல் பெறுதிகளாகக் கருதலாம். R-O-H ஆல்கஹால் H-O-H நீர் R-O-R ஈதர் ஈதர்கள் பொதுவாக, கரைப்பான்களாக ஆய்வுக் கூடங்களிலும், தொழிலகங்களிலும் பயன்படுகின் றன. இவற்றில் குறிப்பிடத்தக்கது டைஎத்தில் ஈதர் அல்லது எத்தில் ஈதர் ((C,H,),O) என்பதாகும். ஈதரில் இரு சுரிமத் தொகுதிகளும் ஒரே தொகுதி யாகவோ வேறு வேறு தொகுதியாகவோ இருக்கலாம். இவை அரோமாட்டிக் தொகுதியாகவோ அலிஃபாட் டிக் தொகுதியாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டு கள்: மெதில் ஈதர், ஃபீனைல் மெத்தில் ஈதர் ஒரே மாதிரியான அல்க்கைல் தொகுதிகள் ஆக்சிஜன் அணுவுடன் இணைந்திருந்தால் அவை சமச்சீரான ஈதர் என்றும் (எ.கா. டைஎத்தில் ஈதர்) வேறு வேறு தொகுதிகள் இணைந்திருந்தால் சமச்சீரற்ற அல்லது கலவை ஈதர் என்றும் வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: எத்தில் மெத்தில் ஈதர். பெயரிடும் முறை. சமச்சீரான ஈதர்களுக்குப் பெய ரிடும்போது பெயருக்கு முன்னால் எழுதப்படும் டை (di) என்ற முன்னொட்டைத் தற்காலத்தில் பயன்படுத்துவதில்லை. CH-O-CH, மெத்தில் ஈதர் (இருமெத்தில் ஈதர்) CH,--C,H, எத்தில் ஈதர் (இரு எத்தில் ஈதர்) கலவை ஈதர்களுக்குப் பெயரிடும்போது அவற்றிலிருக் கும் அல்க்கைல் தொகுதிகளைக் குறிப்பிட்டுப் பின் னொட்டாக ஈதரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். CH-O-C.H. மெத்தில்எத்தில் ஈதர் CH-O-CH CH CH, மெத்தில்ஐசோ புரோப்பைல் ஈதர் ஈதர் 141 IUPAC முறையில் பெயரிடும்போது ஈதர்கள் வைஹட் ரோகார்பன்களில் உள்ள ஹைட்ரஜனுக்கு மாற்றாக அல்க்காக்சி தொகுதி (-OR) பதிலீடு செய்யப்பட்ட பெறுதிகளாகக் கருதப்பட்டு அதன்படி நீள்தொடர் அல்க்கேன் தொகுதி இனம் பெயரிடப்படுகிறது. CH-O-CH, CH, CH, PC,H, CH,-CH-CH,-(H,-CH; I-மெத்தாக்சி புரோப்பேன் 2-எத்தாக்சி பென்ட்டேன் பெறும் முறைகள். ஆல்கஹாலுடன் அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்த்துச் சூடுபடுத்தும் போது ஈதர் உண்டாகிறது. 2C,H OH = (C,H,),O + H,O ஆல்கஹாலை நீர் நீக்கம் செய்தும் ஈதரைப் பெற லாம். ஆல்கஹால் ஆவியைச் சூடாக்கப்பட்ட அலு மினா அலுமினியம் பாஸ்ஃபேட் போன்றவற்றின் மேல் செலுத்தி ஈதரைப் பெறலாம். B வில்லியம்சன் தொகுப்பு. இம்முறை பெரிதும் கல்வை ஈதர்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. சோடியம் அல்லது பொட்டாசியம் அல்க்காக்சைடை அல்க்கைல் ஹாலைடுடன் சேர்த்துச் சூடுபடுத்தும் போது ஈதர்கள் உண்டாகின்றன. 2C,H,OH + 2 Na → 2 C,H,ONa + H, C,H,ONa + CHI C₂H,OCH, + Nal அல்க்கைல் ஹாலைடுகளை வெள்ளி ஆக்சைடுடன் சேர்த்து வெப்பப்படுத்தி, குறைந்த மூலக்கூறு எடை கொண்ட ஈதர்களைத் தயாரிக்கலாம். 2C,H,I+Ag, O (C,H,),0 + 2 Agl பொதுப்பண்புகள். குறைந்த மூலக்கூறு எடை கொண்ட ஈதர்கள் வளிமங்கள் அல்லது எளிதில் ஆவியாகும் நீர்மங்கள் ஆகும். இவற்றின் ஆவி எளி தில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மையுடையது. இவற் றின் கொதிநிலைகள் அதே அளவு கரியணுக்களைக் கொண்ட ஆல்கஹால்களின் கொதிநிலைகளை விடக் குறைவாகும். ஈதரில் ஆல்கஹாலில் இருப்பது போல ஆக்சிஜன் அணுவுடன் ஹைட்ரஜன் அணு இணைந் திருப்பதில்லை. எனவே இவை ஹைட்ரஜன் பிணைப்பு களை உண்டாக்குவதில்லை. நீரில் ஈதர்கள் கரையா ததற்கு இதுவே காரணமாகும். இவை நீரைவிடக் குறைந்த அடர்த்தி கொண்டவை. எனவே நீருடன் சேர்த்துக் கலக்கும்போது நீரின்மேல் தனிப்படலமாக