உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈப்பிடிப்பான்‌ குருவி 149

மேற்புறம் வெளிர் பழுப்பு நிறமானது. தொண்டை, மார்பு ஆகிய பகுதிகள் செம்பழுப்பு நிறமாக உள்ளமையால் செம்மார்பு ஈப்பிடிப்பான் எனப் பெயர் பெற்றது. மேற்கு இமயமலை அடிவாரப்பகுதி களிலிருந்து குளிர்காலத்தில் தென்னிந்தியாவிற்கு வலசை வருகிறது. காடுகளிலும் பழத்தோட்டங் களிலும் உள்ள மரங்களில் இதனைக் காணலாம். கிழக்கு ஐரோப்பியப் பகுதியிலும் ரஷ்யா, தெற்குக் காஸ்பியன் பகுதிகளிலும் இனப்பெருக்கம் செய் கின்றது. கிழக்குப் பகுதி செம்மார்பு ஈப்பிடிப்பான். இது சிவப்பு நெஞ்சுக்குருவி என அழைக்கப்படுகிறது இதன் உடல் பதின்மூன்று செண்டிமீட்டர் நீளமுடை யது. தொண்டைப்பகுதி மட்டும் செம்பழுப்பு நிற மானது குளிர் காலத்தில் இந்தியாவில் பழத் தோட்டங்களிலும், புதர்க் காடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. கிழக்காசியப் பகுதிகளில் இனப் பெருக்கம் செய்கிறது. பாறைகளுக்கிடையில் பாசி களைக்கொண்டு சிறு கூட்டை அமைக்கிறது. முட்டை செளிர்பச்சை நிறமாகவோ வெளிர் சிவப்பு நிற மாகவோ இருக்கும். மான கறுப்பு, ஆரஞ்சு ஈப்பிடிப்பாள். கறுப்பும் ஆரஞ்சு பளிச்சென்ற நிறமுடைய இப்பறவையின் உடல் பதின்மூன்று செண்டிமீட்டர் நீளமுடையது. தலையின் பக்கங்கள் உச்சிச் சிறகுகள் ஆகிய பகுதி கள் கருஞ்சாம்பல் நிறமானவை. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் குறிப்பாக வயநாடு, நீலகிரி, பழநி, ஆனைமலைப் பகுதிகளில் 700-1500 மீட்டர் உயர முள்ள இடங்களில் தனித்தும் இணையாகவும் காணப்படுகின்றது. மார்ச் - ஜுலையில் இனப் பெருக்கம் செய்கின்றது. இது சருகு, புற்களைக் கொண்டு புதர்களில் கூடுகட்டும். பெண்பறவை இரு முட்டை இடுகிறது. ஈப்பிடிப்பான் குருவி 149 வெண் வயிற்று நீலநிற ஈப்பிடிப்பான். இது கருநீலநிற உடலும் வெண்ணிற வயிற்றுப் பகுதியும் கொண்ட தால் வெண் வயிற்று நீலநிற ஈப்பிடிப்பான் எனப் பெயர் பெற்றது. உடல் பதினைந்து செண்டிமீட்டர் நீளமானது. மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப் பாக நீலகிரி, ஆனைமலைப் பகுதிகளில் 1500-1700 மீட்டர் உயரத்தில் தனித்தோ இணையாகவோ காணப்படுகின்றது. பிப்ரவரி-செப்டம்பரில் இனப் பெருக்கம் செய்கின்றது. பாசி, புல், வேர்களைக் கொண்டு பாசிபடிந்த பாறைகளிலும் பட்டுப்போன மரங்களிலுள்ள பொந்துகளிலும் கூடுகட்டிப் பெண் பறவை நான்கு முட்டைகளை இடுகிறது. நீலத் தொண்டை ஈப்பிடிப்பான். இது வெளிர்நீல நிறமும், செம்பழுப்பு நிறமார்பும் பதினான்கு செண்டிமீட்டர் நீள உடலும் கொண்ட து. தொண்டைப் பகுதி அடர்ந்த நீல நிறமாக இருப்ப தால் இது நீலத்தொண்டை ஈப்பிடிப்பான் எனப் படுகிறது. பெண்பறவை பசுமை தோய்ந்த பழுப்பு நிறமானது. உடலின் அடிப்புறத்தில் பெரும்பாலான பகுதிகள் வெண்ணிறமானவை. குளிர் காலத்தில் தென்னிந்தியப் பகுதிகளில் பரவலாக மரங்களடர்ந்த காடுகளிலும் மூங்கில் காடுகளிலும், கோடையில் இமயமலைப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. இது ஏப்ரல் - ஆகஸ்டில் இனப்பெருக்கம் செய் கின்றது. அருவிக்கரைகளின் பாசி படர்ந்த பாறை இடுக்குகளிலும், மரப் பொந்துகளிலும் மூங்கில் குழாய்களிலும் பாசி, சருகு, புல், வேர்களைக் கொண்டு கூடுகள் அமைத்து மூன்று-ஐந்து முட்டை கள் இடுகின்றது. அடைகாக்கும் காலம் பதினோரு அல்லது பன்னிரண்டு நாள் ஆகும். ஆண், பெண் ஆகிய இரண்டுமே அடை காப்பதிலும். சேய்க்காப்பிலும் பங்கேற்கின்றன. வெண் வயிற்று நீலநிற ஈப்பிடிப்பான் நீலத்தொண்டை ஈப்பிடிப்பான்