156 ஈயம் (காரீயம்)
156 ஈயம் (காரீயம்) மாசுகள் தூய்மையாக்கல். பிரித்தெடுக்கப்படும் ஈயத்தில் Bi, Sb, Sn, Fe, Za, Ag, Cu போன்ற உலோகங்கள் சிறிதளவு கலந்திருக்கும். எனவே இந்த மாசு கலந்த ஈயத்தை உலையிலிட்டுக் காற்றுப்பட உருக்கினால் கசடாக மிதக்கின்றன. பின்னர் இவை வெள்ளியைப் பார்க் வெளியேற்றப்படுகின்றன. முறைப்படி நீக்கி, ஈய வெள்ளிக்கலவையுடன் உருகிய துத்தநாகத்தைச் சேர்த்தால் மிகுந்த வெள்ளி, துத்த நாகத்தில் கரைந்துவிடுகிறது. பாட்டிசன் முறையில் ஈயமும் வெள்ளியும் கலந்த கலவையை உருக்கிப் பின்னர் மெதுவாகக் குளிர்விக்க முதலில் பிரிந்து விடுகின்றது. பின்னர் தூய ஈயம் மின்னாற் பகுத்தல் முறையில் பிரித்தெடுக்கப்படுகின்றது. ஈயம் இயற்பண்புகள். இது சாம்பல் கலந்த நீலநிறமான, மிருதுவான உலோகம். காற்றில் வைத்திருக்கும் போது இவ்வுலோகத்தின் மீது ஆக்சைடு, கார்ப னேட்டுப் படலங்கள் படிவதால் இது நிறம் மங்கி வெளிறிக் காணப்படும். நகத்தால் கூட இவ்வுலோ கத்தின் மீது கீறலாம். காகிதத்தில் இவ்வுலோகத் தால் எழுதினால் கறுப்புக் கோடு அமையும். ஈயத் துடன் ஆன்டிமனியைச் சேர்த்து உருக்கிக் கிடைக்கும் உலோகக் கலவையைத் தகடுகளாக அடிக்கலாம்; கம்பியாகவும் நீட்டலாம். ஆனால் இவ்வுலோகக் கம்பிகள் வலிவற்றவை. ஈயத்தை எளிதில் வீழ்படி வாக்கல் முறையில் படிக வடிவில் பெறலாம். வீரியம் குன்றிய ஈய அசெட்டேட் கரைசலுள் துத்தநாகத் தண்டைத் தொங்க விட்டிருந்தால் ஈய உலோகம் மரம் போன்ற படிகங்களாக வீழ்படிவாகிறது. இதன் வேறு சில இயல்புகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. உ உருகுநிலை கொதிநிலை அடர்த்தி (20°C) ஆக்சிஜனேற்ற நிலைகள் எலெக்ட்ரான் அமைப்பு வேதிப்பண்புகள் 327.5°C 1,744°C 11.29 கி/க.செமீ +2, +4 2,8,18,32,18,4 உயர்ந்த காற்று ஈயத்தைப் பாதிப்பதில்லை; ஆனால் ஈரமான காற்று ஈயத்தின் மேற்புறத்தில் ஒரு வெள்ளை உண்டாக்குகிறது. நிறப்படிவை ஆக்சிஐன் அல்லது காற்றில் வெப்பப்படுத்தும் போது இது மெதுவாக ஆக்சிஜனேற்றம் அடைந்து முதலில் லித்தார்ஜ் (litharge) எனப்படும் லெட் மோனோ ஆக்சைடாகவும் (PbO, பின்னர் ஈயச்செந் தூரம் (red lead) எனப்படும் லெட் டை ஆக்சைடாக வும் மாறுகிறது. கரைந்த நிலையில் காற்று அல்லது ஆக்சிஜன் உள்ள நீரினால் ஈயம் அரிக்கப்பட்டு லெட் ஹைட் ராக்சைடு உண்டாகிறது. இது நீரில் சிறிதளவு கரையக் கூடியது. நைட்ரேட்டுகள், அம்மோனியம் உப்புகள், கரிம அமிலங்கள் போன்றவை கரைந்த நீர்க் கரைசல் ஈயத்தை வெகுவாகப் பாதிக்கின்றன. ஆனால் ஃபாஸ்ஃபேட்டுகள், சல்ஃபேட்டுகள், பை கார்பனேட்டுகள் ஆகியன கரைந்திருந்தால் ஈயத் தைப் பாதிப்பதில்லை. எனவே கடின நீர் ஈயத்தைப் பாதிப்பதில்லை எனலாம். நீர்த்த அமிலங்களுடன் ஈயம் வினைப்படுவ தில்லை. அடாஹைட்ரோகுளோரிக் அமிலம் ஈயத் துடன் வினைபுரிந்து ஈயகுளோரைடு, ஹைட்ரஜனை யும் கொடுக்கிறது. அடர் சல்ஃப்யூரிக் அமிலத்துடன் வினைபுரிகையில் சல்ஃபர் டை ஆக்சைடு உண்டா கிறது. இது ஈயத்தின் மேல் கரையாத ஈய சல்ஃபேட் படிவை உண்டாக்குவதால் வினை தடைப்படுகிறது. நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் ஈயம் வினைபுரியும் போது நைட்ரிக் ஆக்சைடும் அடர் நைட்ரிக் அமிலத் துடன் நைட்ரஜன் பெராக்சைடும் உண்டாகின்றன. ஈயச் சேர்மங்கள். வெள்ளீயத்தைப் போலவே ஈய மும் பிளம்பஸ் சேர்மங்கள் (ஆக்சிஜனேற்றநிலை + 2), பிளம்பிக் சேர்மங்கள் (ஆக்சிஜனேற்ற நிலை + 4) என இரு வகையான சேர்மங்களைக் கொடுக்கிறது. PbCl,, Pb(NO,), போன்ற சேர்மங்கள் நிலைத்தவை யாகவும், பிளம்பிக் சேர்மங்கள் குறைந்த நிலைப்புத் தன்மை கொண்டவையாகவும் உள்ளன. ஈயம் ஆக்சிஜனுடன் வினைப்பட்டு லெட் சப் ஆக்சைடு (Pb,0), லெட் மோனோ ஆக்சைடு (PbO), ஈயச் செந்தூரம் (Pb,0,), லெட் செஸ்கியி ஆக்சைடு (Pb,O,), லெட் பெராச்சைடு (PbO,) போன்ற ஆக் சைடுகளைக் கொடுக்கின்றது. இவற்றுள் PbO Pb,0,, Pb0, ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஈய ஒற்றைஆக்சைடு. இது லித்தார்ஜ் எனவும், மாசிகாட் (massicot) என்றும் கூறப்படும். இது ஈயம் அல்லது கலினாவைக் காற்றில் உயர் வெப்பத்தில் சூடுபடுத்தும்போது உண்டாகிறது. இது செந்நிற மஞ்சள் நிறப்பொடியாகும். ஈரியல்புத்தன்மை கொண் டிருப்பதால் அமிலங்களுடனும் காரங்களுடனும் வினைப்படுகிறது. இதை 350C வெப்பநிலைக்கு மேல் சூடேற்றினால் ஈயச்சிவப்பு அல்லது செந்தூரம் உண்டாகிறது. கரியுடன் சேர்த்து ஒடுக்கும்போது கண்ணாடி, பீங்கான், ஈயம் உண்டாகிறது. வண்ணப்பூச்சுகள், ஈய உப்புகள் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. ஈயச்செந்தூரம். லெட்மோனோ ஆக்சைடை எதிர் வெப்பஉலையில் 350-460°C வெப்பப்படுத்துவதால் ஈயச்செந்தூரம் உண்டாகிறது. இது ஒளிரும் நீரில்