உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ஈர்ப்பு அலைகள்‌

174 ஈர்ப்பு அலைகள் செயற்கை நோயாளிக்குச் பாதிக்கப்படுவதால், மூச்சுப் பொறியின் உதவி இன்றியமையா ததாகும். அ. உமாபதி ஈர்ப்பு அலைகள் சார்பியல் பொதுக்கொள்கையை உருவாக்கிய சில காலத்திற்குள் ஐன்ஸ்ட்டீன் ஈர்ப்பு அலைகள் அல்லது கதிர்வீச்சு பற்றி ஊகித்துக் கூறினார். சார்பியல் பற்றிய அனைத்துக் கொள்கைகளிலும் அவை இப் போது ஒரு கூறாகிவிட்டன. ஈர்ப்பு அலைகள் கால- வெளியின் வளைவில் தோன்றும் சிற்றலைகளாகக் கருதப்படுகின் றன. அவற்றை ஒளியின் வேசுத்துடன் பயணம் செய்யும் ஈர்ப்புப் புலங்களாகவோ, திரிபு களாகவோ கருதலாம். அவை ஆற்றலைச் சுமப்ப துடன் தம் பாதையில் குறுக்கிடும் பருப்பொருள் களின் மேல் விசையையும் செலுத்தக் கூடியவை. அப்பொருள்கள் மீள் தன்மையுடையவையாக இருந் தால் ஈர்ப்பு அலைகள் அவற்றில் மிகச்சிறிய அதிர்வு களை உண்டாக்கும். ஏதோ ஒரு பொருளின் பர வீட்டில் (surface area) ஏற்படும் மாற்றத்தின் காரண மாக ஈர்ப்பு அலை உண்டாக்கப்படுகிறது. ஒரு சுழல் கோளம் ஈர்ப்பு அலையை உண்டாக் காது. ஆனால் கோளத்தைப் போன்று சுழல் அச்சைப் பொறுத்த சமச்சீர்மை இல்லாத ஒரு பொருள் சுழலும் போது ஈர்ப்பு அலை உண்டாகக் கூடும். பல்சார்கள் (pulsars) இவ்வாறு ஈர்ப்பு அலைகளை உண்டாக்கு கின்றன. ஈர்ப்புக் கதிர்வீச்சுக்கும், பருப்பொருளுக்கும் இடையில் தோன்றும் இடைவினை மிகவும் வலிமை குறைந்தது. ஆனாலும் ஈர்ப்புக் கதிர் வீச்சை அள விடுவது தொழில் நுட்ப முறையில் நடைபெறக் கூடும். ஜோசப் வெபர் என்பாரின் முன்னோடி ஆய்வுகள் அறிவியலில் பரபரப்பூட்டும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் சில ஐயப்பாடுகளும் உறுதியற்ற தன்மைகளும் உள்ளன. ஆனால் ஈர்ப்பு அலைகள் மூலம் விண்பொருள்களை ஆராய்வது வானியல் துறையின் ஒரு பகுதியாகும் அண்டத் தைப் பார்வையிடப் புதிய முயற்சி தொடங்கப் பட்டுள்ளது. தம் மையத்தின் வழியாகச் செங்குத்தாக அமைந்த ஓர் அச்சைச் சுற்றிச்சுழலும் ஒரு கோளிலிருந்து வெளிப்படும் ஈர்ப்பு அலைகளைப் பற்றிய முக்கிய சிக்கலுக்கு ஐன்ஸ்டீன் விடை கண்டார். கோளின் நிறை M கிலோ கிராம்; நீளம் 2d மீட்டர் எனில், சுழல் அச்சைப் பற்றிய அதன் நிலைமத் திருப்பு திறன் 1 = Md2/3; அதன் கோணத் திசைவேகம் எனில், அதிலிருந்து வரும் கதிர் வீச்சின் P=32G1'*/5C® = 1.73 × 10-32 = திறன் ய வாட் ஆகும். G என்பது ஈர்ப்புமாறிலி;C என்பது ஒளியின் திசைவேகம். 4.9 × 10' கிலோ கிராம் நிறையும் 20 மீட்டர் நீளமும் கொண்ட ஓர் எஃகுத் தண்டை 28 ரேடியன்/விநாடி என்ற கோணத் திசை வேகத்துடன் சுழற்றுவதாக வைத்துக்கொண்டால், மைய விலக்கு விசைக்கும் இழுப்புத்திறனுக்கும் இடையிலான சம நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்ட பிறகு அத்தண்டிலிருந்து வெளிப்படும் ஈர்ப்பு அலையின் ஆற்றலைக் கணக்கிட்டால் அது 2.2× 10-29 வாட் என்ற நுண்ணிய அளவில் இருக்கும். இந்த அளவு ஆற்றலை அளக்கக்கூடிய உணர்வு நுட்பமுள்ள கருவிகள் எந்த ஆய்வகத்திலும் இல்லை. எனவே ஆய்வகத்தில் ஈர்ப்பு அலைகளை உண்டாக்குவதோ கண்டுபிடிப்பதோ இயலாததாகும். மின்காந்தக் கொள்கையில் மின் இருமுனைக் கதிர் வீச்சு முதன்மை பெற்றுள்ளது. மின் இரு முனைக்கு ஒப்பாக ஈர்ப்பு நிலை இருமுனைத் திருப்புத் திறன் உள்ளது. அது நேரத்துடன் மாறும் வீதம் அமைப்பின் மொத்த உந்தத்தை ஒத்ததாகும். இது ஒரு மாறிலியாக உள்ளதால் ஈர்ப்பிலும் இரு முனைக் கதிர் வீச்சு ஏற்படுவதில்லை. நான்கு முனைக் கதிர் வீச்சில்தான் முதன்மையான திறன் அடங்கியுள்ளது. இக்கதிர் வீச்சுக்கு விரிவான முனைவாக்கப் பண்புகள் உண்டு. இரட்டை அமைப்புகள். m; mg என்னும் நிறைகள் கொண்ட இரட்டை விண்மீன் அமைப்பு T மணிக்கு பாதையில் முறை வட்டமான ஒரு சுழல m,+mz M எனவும் m mg/M= எனவும் கொண் டால், அதிலிருந்து வெளிப்படும் வெளிப்படும் ஈர்ப்புக் கதிர் வீச்சின் திறன் பின்வரும் சமன்பாட்டால் பெறப் படும். P = 10/3 (MS)" (M) "P-10 Ms 26

  • 3x10 வாட்

இதில் Ms என்பது சூரியனின் நிறையாகும். புவி சூரியனைச் சுற்றி வரும்போது ஏறத்தாழ இருநூறு வாட் ஈர்ப்புக் கதிர் ஆற்றல் வெளிப்படுகிறது. ஈர்ப்புக் கதிர் வீச்சு, அமைப்பின் ஆற்றலி லிருந்து தன் ஆற்றலைப் பெறுகிறது. இரட்டை அமைப்பு ஒரு நீள்வட்டச்சார்பியக்கத்தைப் பெற்றி ருக்குமானால், அவை ஒன்றுக்கொன்று மிக நெருக்க மாக வரும்போது பெரும்பாலான ஆற்றல் வெளிப் படும். அப்போது ஓடுபாதை ஏறக்குறைய வட்டமாக் அமையும். அதன் பிறகு ஓடு பாதை படிப்படியாகச் 50% 20* சுருங்கி To = என்ற நேரத் 256G³ M2 ஒன்றோடொன்று X திற்குப் பிறகு பொருள்கள் மோதிக் கொள்ளும்.