ஈரப்பதக் கட்டுப்பாடு 183
களின் உடலில் இருந்தும் குறிப்பிட்ட அளவு நீர் ஆவியாகிக் கொண்டிருக்கிறது. இந்த ஆவி வளி மண்டலக் காற்றில் கலந்து தெவிட்டிய நிலையடை கிறது. வளிமண்டல வெப்ப நிலை குறையும்போது காற்று மண்டலத்தில் கலந்துள்ள நீராவி உயர்ந்து குளிர்ந்த பொருள்களின் மீது நீர்த் திவலைகளாகப் படிகிறது. நீராவி, தூசுத் துகள்கள் மீது பனித் திவலைகளாகப் படிகிறது. இது மூடுபனி எனப்படும். பனித் திவலைகளின் தொகுதி வானவெளியில் முகி லாகும் போது அவை மழை முகில் எனப்படும். மழைப் பொழிவு வளிமண்டலத்தில் உள்ள நீராவி தெவிட்டும் நிலையில் இருந்து எவ்வளவு வேறுபட்டு உள்ளது என்பதைப் பொறுத்தது. காற்றில் உள்ள நீராவி தெவிட்டும் நிலையில் இருக்குமானால் உட லில் வியர்வை பெருகிப் புழுக்க உணர்ச்சி ஏற்படும். காற்றில், நீராவியின் அளவு குறைவாக இருப்பின் உடல் வியர்வை ஆவியாகிப் புழுக்க நிலை குறையும். இக்காரணங்களால் காற்றில் உள்ள நீராவி அதன் தெவிட்டும் நிலையிலிருந்து எவ்வளவு மாறுபட்டு உள்ளது என்பதை வானிலையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக, இந்நிலையே ஈரப்பதன் எனப்படுகிறது. ஓரலகு பருமன் உள்ள காற்றில் நீராலியின் நிறைக்கும், அதே வெப்பநிலையில் காற்று தெவிட் டிய நிலையில் இருக்கும்போது அதன் ஓரலகு பருமனில் உள்ள நீராவியின் நிறைக்கும், இடையே உள்ள தகவு ஒப்பு ஈரப்பதன் என்று வரையறுக்கப் படும். மாறா வெப்பநிலையில் ஓரலகு பருமனுள்ள நீராவியின் நிறை, அதன் அழுத்தத்திற்கு நேர் விகிதத்தில் இருப்பதால் காற்றில் உள்ள நீராவியின் அழுத்தத்திற்கும் அதே வெப்ப நிலையில் தெவிட்டிய நீராவி அழுத்தத்திற்கும் இடையேயுள்ள தகவு, ஒப்பு ஈரப்பதன் என்று வேறு சொற்களால் கூறப்படும். எனவே, ஒப்பு ஈரப்பதன் என்பது பனி நிலைக்குரிய தெவிட்டிய நீராவி அழுத்தத்திற்கும், காற்றின் வெப்ப நிலைக்குரிய தெவிட்டிய நீராவி அழுத்தத்திற்கும் உள்ள தகவு ஆகும். இந்த ஒப்பு ஈரப்பதனைக் காண ரேனால்ட்டு ஈரமானி, ஈர வறட்சி குமிழ் ஈர மானி, வேதியியல் ஈரமானி, டேனியல்ஸ் ஈரமானி போன்றவை பயன்படுகின்றன. மனித உடல் இயல்பாக இருப்பதற்குக் காற்றில் உள்ள ஈரப்பதனே காரணமாகும். அந்த ஈரப் பதன் 50-60% வரை இருக்கும்போது இயல்பாகவும், வேலைத் திறனுடனும் இருக்கமுடியும். ஈரப்பதன் குறையும்போது காற்று வெப்பமாக உணரப்படும். அப்போது நீரை நேரடியாகச் சிறுதிவலைகளாகக் காற்றில் தெளிப்பதன் மூலம் ஈரப்பதனைக் கூட்ட லாம். சிறு திவலைகள் காற்றில் எளிதில் ஆவியாகும். தொழிலகங்களிலும், பஞ்சு ஆலைகளிலும் ஈரப் பதனைச் சரியான நிலையில் கட்டுப்படுத்தி வைப்பது ஒரு சிறப்புப் பணியாகும். பஞ்சாலைகளிலும், புகை ஈரப்பதக் கட்டுப்பாடு 183 யிலைத் தொழிலகங்களிலும் ஈரப்பதத்தை மிகுதி யாக்குவது சிறந்தது. ஆனால் தொழிலாளர்களைப் பாதிக்காதவாறு அதை அமைக்க வேண்டும். ஈரப் பதன் குறைந்தால் நூலிழைகள் உராய்வால் மின் ஊட்டம் பெற்றுச் சரியாக முறுக்கேறா. கப்பல் களில் உணவுப் பொருள்களைக் காக்கவும் ஈரப்பதன் கட்டுப்படுத்தல் தேவைப்படுகிறது. காண்க, ஈரமானி. எஸ். செல்லப்பன் ஈரப்பதம் காற்றிலுள்ள நீரின் அளவைப் பல வகை அளவீடு களாலும் குறிப்பிடலாம். சார்பு அல்லது ஒப்பு ஈரப் பதம், தனி ஈரப்பதம், ஈரப்பதம் - கலவை விகிதம், ஈரப்பத எண் முதலிய அளவீடுகள் குறிப்பிடத் தக்கன. காற்றின் பனி நிலை, ஆவி அழுத்தம், ஈரக் குமிழ் - உலர் குமிழ் வெப்ப நிலைகள் முதலியவற்றை அளவிடுவதன் மூலமும், சைக்ரோமெட்ரிக் அட்ட வணை மூலமும் ஆவி நிலையிலுள்ள நீரின் அளவை அறியலாம். காற்றில் ஆவி நிலையிலுள்ள நீர் எந்த அளவில் கலந்துள்ளது என்பதற்கும் அக்காற்று அதே வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும் எந்த அளவு ஆவி நிலை யிலுள்ள நீரைத் தெவிட்டுமளவு ஏற்றுக்கொள்கிறது என்பதற்கும் உள்ள விழுக்காடே சார்பு ஈரப்பதம் ஆகும். நீர்த் திவலைகளை எந்த அளவுக்குக் காற்று உட்கொள்ளும் அல்லது வெளியேற்றும் என அறிவதற் கான உலர் நிலை அல்லது ஈர நிலையைக் காட்டும் அளவே சார்பு ஈரப்பதம் ஆகும். வேனில் காலத்தில் மனிதனுக்குக் காற்றினால் இதம் (pleasantness ) கிடைப்பதும் கிடைக்காது இருப்பதும் சார்பு ஈரப் பதத்தைப் பொறுத்தது. சார்பு ஈரப்பதம் மிகுதியாக இருக்கும்போது புழுக்கம் மிகுந்தும் சார்பு ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது தாங்கும் அளவுக்கும் இருக்கும். வெப்பநிலை மிகுதியாக இருக்கும்போது சார்பு ஈரப்பதம் பெருகுவதால் இதம் பாதிக்கப்படும். குளிர் காலத்தில் வீட்டினுள் குறைந்த சார்பு ஈரப் பதம் காணப்படுவதால் தோலும் தொண்டையும் வறட்சியுற்றுச் சுவாசக் குழாயில் ஊறு விளைகிறது. எஸ். செல்லப்பன் ஈரப்பதக் கட்டுப்பாடு ஈரப்பதத்தைச் சீராக்கும் முறை ஈரப்பதக் கட்டுப் பாடு எனப்படும். ஈரப்பதம் என்பது காற்றின் ஒரு பண்பு எனத் தவறாகக் கருதப்படுகிறது.நீர்,பனிக்