அறிவியல் களஞ்சியம் தொகுதி- ஐந்து இழை மாற்று வடிவங்கள் செயற்கை இழைத் தயாரிப்பில் ஒவ்வோர் உற்பத்திச் செயல்முறையும் நுட்பமாகக் கட்டுப்படுத்தப்படுவதை அல்லது மூல இழை மாற்று வடிவமாக்கப்படுவதை அதன் சிறப்பு மேம்பாடாகக் கருதலாம். உற்பத்தி யாளர்கள் இழை மாற்று வடிவங்கள் (fibre modifi- cations) குறித்த ஆய்வில் ஈடுபடுகின்றனர். இதனால் இழையில் பொதிந்துள்ள பிற் பண்புகள் வெளிப் படுவதுடன், அவற்றைச் செழுமையாக்குவதால் இழையின் இறுதிப் பயன்கள் மிகுதியாகின்றன. மூல இழை, சரக்கு இழை என விற்பனை செய்யப் படுகிறது. இது தரமான முதல் தலைமுறை இழை என அழைக்கப்படுகிறது. மூல இழையின் மாற்று வடிவங்கள் வணிகப் பெயருடன் விற்கப்படுகின்றன. இவை இரண்டாம் தலைமுறை இழைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இரண்டாம் தலைமுறை இழைகளை மாற்று வடிவங்களாக்கப் பின்வரும் முறைகள் கடைப்பிடிக்கப்படுகின் றன: வெட்டு முகத்தை மாற்றியமைத்தல், தடிப்பாக்கல், மெல்லிய தாக்கல், உள்ளீடாக்கல் போன்ற முறைகளினால் இழையின் உருவத்தை மாற்றி வடிவமாக்கலாம். உயர் இழுவலிமை அடையச் செய்தல், குறைவான பொதிவாக்கல் (pilling). குறைவான நீள் மீட்சி அடையச் செய்தல் ஆகிய முறைகளால் இழையின் மூலக்கூறு அமைப்பையும் படிகமாகும் தன்மையையும் மாற்றியமைக்கலாம். சேர்க்கைப் பொருள்களைப் பல்லுறுப்பி அல்லது இழைக் கரைசலுடன் சேர்க்கும் போது, குறுக்கு வண்ணம், மின்னிலை எதிர்ப்பு, ஒளி எதிர்ப்பு, தீ எதிர்ப்புப் போன்ற பண்புகளை இழை பெறுகிறது. மாற்று வடிவங்களாக்குதல், சுதுக்கம் செய்தல், நிரப்பிழை (filling fibre) சேர்த்தல் ஆகிய முறை களில் நூற்றலை மாற்றி அமைக்கலாம். இரு பல்லுறுப்பிகளைச் சேர்த்தல் அல்லது வெவ்வேறு இனஞ் சேர்ந்த இரு பல்லுறுப்பிகளைச் சேர்த்தல் கலப்பு மாற்று வடிவங்கள் எனக் குறிப்பிடப்படு கிறது. இவை மூன்றாம் தலைமுறை இழை எனப்படுகின்றன. இவை ஈருறுப்பு இழைகள், கள் ஈருட்கூறு இழைகள், கலப்புப் படல நூல் என வகைப்படுத்தப்படுகின்றன. உருவங்களை மாற்று வடிவமாக்குதல் வட்டமற்ற இழை வகைகள். எந்திர,அழகூட்டும் இயல்புகளை மாற்றுவதன் மூலம் இழைகளின் வெட்டு முக அமைப்பை எளிதாக மாற்றியமைக்கலாம். நூற்பியின் துளைகளை மாற்றி அமைப்பதன் மூலம் தட்டை, மூவிணையிதழ் (trilobal) நாலிணையிதழ் (qudralobal), ஐந்திணையிதழ் (pentalobal), s கெலியன் (triskelion), குறுக்கு நெடுக்கு (cruciform), குளாவர் இலை (clover leaf), அகர உருவம் (alpha- bet) ஆகிய உருவ அமைப்புகளைப் பெறமுடியும். முதன் முதலில் இழைகள் தட்டையான உருவத்தில் உருவாக்கப்பட்டன. அசெட்டேட் படிகம், மினு மினுப்பான நைலான் போன்றவை நாடா அமைப் புடைய இழைகள் ஆகும். இவை நீண்ட குறுகலான படம் 1. மூவிணையிதழ் கைலானின் திட்பக் காட்சி அலகிடும் நிழற்படம்
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/21
Appearance