உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ஈரல்‌

192 ஈரல் மானி காட்டும் t,°C குறித்துக் கொள்ளப்படுகிறது. உடன் காற்றோட்டம் நிறுத்தப்பட்டுக் குழாய் வெது வெதுப்பாகுமாறு விட்டு வைக்கப்படுகிறது. வெள்ளி உறை தெளிந்து பளபளப்பாகும்போது மீண்டும் வெப்பமானி காட்டும் அளவீடு t,°C குறித்துக் கொள்ளப்படுகின்றது. பனிநிலையிலிருந்து ஈரப் பதனை அளவிடலாம். [t₁ t₂ ] = 1°C ஃ வளி மண்டலத்தின் பனிநிலை - ( 1+t,) = 9 வழக்கமாக வெள்ளி உறையோடு கூடிய இரண் டாவதோர் ஆய்வுக் குழாயும் அடுத்துப் பொருத்தப் பட்டிருக்கும். ஆனால் இதில் ஈதர் இருப்பதில்லை. ஈதர் வழியாகக் காற்றுப் புகுந்து செல்வதும் இல்லை. ஒரு வெப்பமானி மட்டுமே செருகப்பட்டிருக்கும் ஆய்வில் ஈதர் இருந்து ஆவியாகும் குழாயின் உறை மீது பனிப்படிவதை நுட்பமாக ஒப்பிட்டுக் காண்ப தற்கு உதவும் வகையிலேயே வெப்பமானியையும், பளபளப்பான வெள்ளி உறையையும் கொண்ட இந்த இரண்டாம் குழாய் வைக்கப்படுகின்றது. தேவையானால் ஆய்வு தொடங்கும்போது வெப்ப நிலைகாண இரண்டாம் குழாயில் உள்ள வெப்ப மானியையும் பயன்படுத்திக்கொள்ளலாம். காண்க, ஈரப்பதன். ஈரல் கொ.சு. மகாதேவன் வரை நடுக்குடலில் காணப்படும் சுரப்பிகளில் மிகப் பெரிய தாகவும், வயிற்றுப் பகுதியில் உதரவிதானத்திற்கு கீழே, வலப்புற மேற்பகுதி முழுமையும் நிறைந்த தாகவும், இடப்புறம் வரை நீண்டதாகவும் ஈரல் காணப்படுகிறது. ஆண்களில் 1.2-1.6 கி.கி. எடையுடன் காணப்படும். இவ்வுறுப்பு, பெண்களில் 1.2-1.4 கி.கி வரை காணப்படும். குழந்தைகளிடம் இதன் அளவு முதியோரை விடக் மிகுந்திருக்கும். கருஞ்சிவப்பு நிறமும், அழுத்தினால் இறுகியும் காணப் படும் முக்கோண வடிவமுடைய ஈரல், எளிதில் கிழிந்தும் சிதைந்து உடையும் தன்மையும் பெற்றது. எனவே ஈரல் காயங்களை இறுக்கமாகத் தைக்கக் கூடாது. இரத்த ஓட்டம் நிறைந்து இருப்பதால் ஈரல் காயங்கள் குருதிப்போக்குடன் காணப்படும். உதரப் பையுறை நார்த் திசுக்களாலேயே ஈரல் அதன் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கீழ்ப் பெருஞ் சிரையுடன் இணையும், ஈரல் சிரைகளுக்கும் இதில் பங்குண்டு. உதரப்பையுறை அல்லது பெரிடோனியம் ஈரல் மேற்புறத்தில் இரு இதழ்களாக மடிந்த பால்சி பார்ம் இணையம் என அழைக்கப்படும். இது ஈரலை வல் இட மடலாகப் பிரிக்கிறது. உடற்கூற்றியலின் படி ஈரல் காடேட் மடல் (caudate lobe) குலாட்ரேட் மடல் எனவும் பிரிக்கப்படும். அமைப்பு. ஈரவ் செல்களின் நடுவே ஈரல் சிரையின் கிளையாகிய மத்திய சிரையைச் சுற்றிலும் பல்வேறு திசைகளில் செல்கள் சூரியக் கதிர் போல் அமைக்கப் பட்டுள்ள செல்கள் பல்வேறு நுண்வளைகளால் ஆனவை. இந்நுண்வளை இணையும் இடத்தில் போர்ட்டல் சிரையின் கிளை, பித்த நீர் வடிகுழாய், ஈரல் தமனியின் கிளை ஆகிய மூன்றும் இணைந்த போர்ட்டல் கால்வாய் காணப்படும். ஈரலுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களும் நரம்பு களும். இரத்தம் ஈரல் தமனி, போர்ட்டல் சிரை ஆகியவற்றின் மூலம் ஈரலுக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. ஈரல் தமனியின் மூலம் ஆக்சிஜனும் போர்ட்டல் சிரை மூலம் குடல்களிலிருந்து செரித்த உணவைச் சேமிப்பதற்காகவும் மாற்றங்களை அடை யவும் ஈரலை வந்தடைகின்றன. ஈரலிலிருந்து ஈரல் சிரைகளின் மூலம் இரத்தத்தைக் கீழ்ப் பெருஞ் சிரைக்கு எடுத்துச் சென்று பொது இரத்த ஓட்டத் துடன் கலக்கிறது. ஈரல் பழுதாகும்போது போர்ட் டல் சிரையில் ஏற்படும் தடையால் அழுத்தம் கூடிய இரத்தம், ஈரல் வழியே செல்ல முடியாமல் உணவுக் குழல், கொப்பூழ் குதம் இவற்றை அடுத்துள்ள சிரை கள் மூலம் பொது இரத்த ஓட்டத்தை அடைய முயலுகிறது. நிணநீர் நாளங்கள் ஈரலிலிருந்து மார்பு நாளத்திற்குச் செல்கின்றன. பத்தாம் சிரசு நரம்பாகிய வேகஸ் கிளைகளைப் போர்ட்டல் நுழை வாயில் மூலம் அனுப்புகிறது. பித்தப்பையும் பித்த நீர் வடிகுழாயும். ஈரல் செரிப்ப தற்கு உதவும் பித்த நீரைச் சுரந்து வல இடப் பித்த வடிகுழாய் மூலம் பித்தப்பைக்கு அனுப்புகிறது. இங்கு பித்தநீர் சேமித்து வைக்கப்பட்டு தேவை யானபோது பொது பித்தவடிகுழாய் மூலம் சிறுகுட லுள் செலுத்தப்படுகிறது. ஈரல் கருவியல். குடல் பகுதி இளஞ்சூல் பருவத்தில் வளரத்தொடங்கும்போது முன், இடை, பின்குடல் எனப் பிரிக்கப்படும். முன் குடலில் இரைப்பை விரிவையடுத்து முன்பகுதியில் உண்டாகும் மொட்டு உள்தோல் திசுவினால் ஆனது. பின் கிளைகளாகப் பிரிந்து இடைத்தோல் திசுவுடன் இணைந்து ஈரல் மற்றும் பித்தப்பையாக உருவெடுக் கிறது. பல் பணி. செரித்த சர்க்கரைச் சத்தைச் சேமிப்ப துடன் தேவைப்படும்போது சர்க்கரைச் சத்தை உண்டாக்கவும் செய்கிறது. நச்சு மற்றும் மருந்துப் பொருள்களைச் சமநிலைப்படுத்தி வெளியேற்ற உதவுவதுடன் தொற்றுக் கிருமிகளை அழிக்கிறது. குழந்தைப் பருவத்தில் இரத்த அணு உற்பத்தி