உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரல்‌ இயக்க ஆய்வு 197

உள்ளதோ அதை மட்டும் அகற்றினால் போது மானது. இடப்புற ஈரல் சிறிதாக இருப்பதால் இடப் புற ஈரல் கட்டி என்பதை அறிந்து நீரை அகற்ற வேண்டும். இந்த நீரை அகற்ற ஊசியைச் சரியான இடத்தில் செலுத்தக் கேளா ஒளியலை பெரிதும் உதவுகிறது. சு.நரேந்திரன் ஈரல் இயக்க ஆய்வு ஈரல் திசுவின் ஒன்றிணைந்த இயக்கத்தையும், இரத்தத்திலிருந்து வரும் பித்தத்தைச் செரிமான வேலைக்கு அனுப்பும் திறனையும், சில பொருள் களைத் தானே உற்பத்தி செய்து இரத்தத்திற்கு அனுப்பும் தன்மையையும் பல ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். ஈரலுக்குப் பல பணிகள் இருப்ப தால் பல ஆய்வுகளைக் கொண்டே நோயால் ஈரல் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய லாம். பித்தப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை தோன்றினாலும், ஈரலின் வேலை பாதிக்கப் படும். அதைக் கண்டறியவும் பல ஆய்வு களுண்டு. இருந் பிலிரூபின். சிவப்பணுக்களிலிருந்து பிரிந்து வரும் இப்பொருள் ஈரலுக்குச் சென்று வேறு வேதிப் பொருளுடன் இணைந்து குடலுக்குள் செலுத்தப் படுகிறது. சிவப்பணுக்கள் மிகு அளவில் தாலோ, மிகு அளவில் அழிக்கப்பட்டாலோ பிலி ரூபின் அளவும் இரத்தத்தில் மிகுதியாகக் காணப் படும். இதனாலும் மஞ்சள் காமாலை வருவதுண்டு. இவ்வகையில் ஆய்வு செய்தால் ஈரலில் மாற்றமடை யாத பிலிரூபின் மிகுந்த அளவிலிருக்கும். ஈரலின் பிற ஆய்வுகள் நன்றாக இருக்கும். சிறுநீரிலும் பிலி ரூபின் இராது. பொதுவாக இரத்தத்தில் பிலிரூபின் 1 மி.கி. அளவிலிருக்கும். ஈரல் திசுவின் பணித்திறன் குறைந்தால் வேதியியல் மாற்றமடைந்த பிலிரூபின் மிகுதியாக இருக்கும். சிறுநீரில் பிலிரூபின் இருக்கும். யூரோபிலினோஜன். இது சிறுநீரில் காணப்படும். மிகு அளவில் பிலிரூபின் உற்பத்தியானால் சிறுநீரில் யூரோபிலினோஜன் மிகு அளவில் காணப்படும். சிவப்பணுக்களைச் சிதைக்கும் நோய்களில் ஈரலில் மாற்றமடையாத பிலிரூபின் மிகுதியாகச் சிறுநீரில் யூரோபிலினோஜனும் மிகும். ஈரல் திசுக்கள் - வைரஸ் அழற்சி,சிர்ரோசிஸ் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டாலும் சிறுநீரில் யூரோபிலினோஜன் மிகும். பித்தவழி அடைப்பு நோய்களில் சிறுநீரில் யூரோபிலினோஜன் இராது. நொதிகள். ஈரல் செல்களில் பல நொதிகள் உள்ளன.. நோயுறும் காலத்தில் இத்தகைய நொதிகள் ஈரல் இயக்க ஆய்வு 197 இரத்தத்தில் கலப்பதால், அவற்றின் அளவறிந்து ஈரல் நோயின் தன்மையை அறியலாம். அமைனோ டிரான்ஸ்ஃபெரேஸ். இதில் அஸ்பர்ட் டேஸ் டிரான்ஸ்ஃபெரேஸ் அலனின் அமைனோடி ரான்ஸ்ஃபெரேஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை, ஈரல் செல் நோயுற்றால், வெளியேறி இரத் தத்தில் கலந்து மிகு அளவைக் காட்டும். முனைப் பான ஈரல் அழற்சி மஞ்சள் காமாலையையும், பித்த அடைப்பு மஞ்சள் காமாலையையும் வேறுபடுத்திக் காட்ட இந்த நொதிகள் உதவும். அல்கலைன் பாஸ்ஃபடேஸ். இந்த நொதி ஈரல் செல் அழியும் நிலையை விட, பித்தப்பாதை அடை படும்போது மிகுதியாக உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. எனவே, இந்த அளலைக் கொண்டு, ஏற் பட்டுள்ள மஞ்சள் காமாலை அழற்சியால் உண்டா னதா அல்லது அடைப்பால் உண்டானதா என்று வேறுபடுத்த முடியும். ஆனால் இந்த நொதி எலும்பு நோய்கள் பலவற்றிலும் மிகுதியாகும். காமாகுளுட்டமைல் டிரான்ஸ்ஃபெரேஸ். இந்த நொதி ஈரல் செல் நோயால் அழிவடையும்போதும். பித்தப்பாதை அடைப்பு உண்டாகும்போதும் பெரு கும். சில மருந்துகளால் ஈரல் பாதித்தாலும் அல்லது மது அருந்துவதால் வரும் ஈரல் நோயாலும் இந்த நொதி பெருகும். பிளாஸ்மா புரதங்கள். அல்புமின் ஈரலிலேயே உற் பத்தி செய்யப்படுகிறது. நாள்பட்ட ஈரல் நோய் களில் குறிப்பாகச் சிர்ரோசிஸ் என்ற ஈரல் சுருக்க நோய் ஏற்பட்டால் ஆல்புமின் உற்பத்தி குறைந்து விடும். குளோப்யுலின் என்ற புரதப்பொருள் ஈரல் நோயில் பெருகும். ஆல்புமினும், குளோப்யுலினும் பொதுவாக 4:3 என்ற விகிதத்தில் இரத்தத்தில் காணப்படும். இது ஈரல் நோயில் மாறி, ஆல்புமின் குறைந்து குளோப்யுலின் பெருகும். குளோப்யுலின் மிகைப்பு உடலின் எதிர்ப்பு ஆற்றலாலும் நோய் எதிர்க்கும் ஆற்றலாலும் உண்டாகும். குளோப்யுலின் ஒரு குறிப்பிடத்தக்க ஆற்றலாக விளங்குகிறது. இரத்த உறைதலுக்கு உதவும் பொருள்கள். ஈரலில் இரத்த உறைதலுக்கு உதவும் காரணிகள் II, VII, X உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, புரோத்தி ராம்பினைத் திராம்பினாக மாற்ற உதவி செய்கின் றன. புரோத்திராம்பின் நேரம் மிகுதியானால் ஈரல் சேதமடைந்துள்ளது என அறியலாம். வைட்டமின் K ஈரலில் இரத்த உறைதல் பொருள்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. ஈரல் நோயிலும், பித்த அடைப் பிலும் இந்த வைட்டமின் குடலிலிருந்து உறிஞ்சப் படுவதில்லை. இதனால் இரத்த உறைதல் தாமதப் படும். புரோம்சல்பாதாலின் வெளியேற்றம். இப்பொருளை