உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரல்‌ கடினமாதல்‌ 199

கள் உருவாவதாலும் ஈரல் கடினமாகிறது. உயிர் வாழும் செல்கள் பெருக்கமடைவதாலும், உள்திசு அமைப்புகளில் மாற்றமேற்படுவதாலும், ஈரல் பொது இரத்த ஓட்ட இணைப்புகள் ஏற்படுகின்றன. இந் நோய் ஈரலின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கு கிறது. இதை, சிறு கணுக்களுள்ள ஈரல் கடினநோய் (micro nodular cirrhosis), பெரிய கணுக்கள் உள்ள ஈரல் கடினநோய் (macro nodular cirrhosis) என்று ரு வகையாகப் பிரிக்கலாம். உ க சிறு கணுக்கள் உள்ள ஈரல் கடின நோயில், இணைப்புத் திசுக்களாலான ஒரே அளவுடைய தடுப்புச் சுவர்களும் புதிதாக வளரும் கணுக்களும் காணப்படும். இவை ஈரலின் அனைத்துப் பகுதியி லும் ஏற்படலாம். இவ்வகை நோய் போர்ட்டல் செப்டல், நியூட்ரிஷனல், னோனோலோபார், வெனக் போன்ற பெயர் கொண்ட ஈரல் கடினமான நோய் என்றும் அழைக்கப்படும். இவற்றில் பாரன்கைமாத் திசுக்கள் தாக்கப்படுவதில்லை. பெரிய கணுக்கள் ள்ள கடின ஈரலில் இணைப்புத்திசு, தடுப்புச் சுவரின் தடிமன் பல வேறுபட்ட அளவுகளில் காணப் படும். கணுக்களும் பல அளவுகளில் இருக்கும். இவ் வகை நோய் போஸ்ட் ஹெப்பட்டிக், போஸ்ட் நெக் ரோட்டிக் போன்ற பெயர் கொண்ட கடின ஈரல் என்றும் அழைக்கப்படும். கலப்புக் கடின ஈரலில். சிறு கணுக்கள் கடின ஈரல், பெரிய கணுக்கள் கடின ஈரல் ஆகியவற்றின் தன்மைகள் ஒருங்கிணைந்து காணப்படும். எந்தவகைக் கடின ஈரல் ஆனாலும் அது நிலையானதன்று. சிறு கணுக்கள் உள்ள சுடின ஈரல், பெரிய கணுக்கள் உள்ள கடின ஈரலாகவும் மாறலாம். காரணி. ஈரல் பல காரணிகளால் கடினமா கிறது. அவற்றுள் முதன்மையானது சாராயமாகும். நாள்தோறும் நூறு கிராம் சாராயத்தை 3-15 ஆண்டுகள் குடித்தால் ஈரல் கடினமாவது திண்ணம். தொற்று நோய்களாலும், இரும்புப்படிவாலும், வில்சன் நோயாலும், மெத்தோடிரக்சேட், மெத்தில் டோப்பா போன்ற மருந்துகளை நீண்டகாலம் உண்பதாலும், பித்தநாளத்தில் அடைப்பு ஏற்படுவ தால் தோன்றும் பித்தத்தேக்கத்தாலும் ஈரல் கடின மாகலாம். புட்சியாரி கூட்டியத்தில் (syndrome) ஈரல் சிரை அடைபடுவதாலும், நாள்பட்ட தய வழுவலாலும் ஈரலுள் இரத்தத்தேக்கம் ஏற்பட ஈரல் கடினமாகலாம். உணவுப்பற்றாக்குறையிலும், ஈரல் நோய் அழற்சியிலும் ஈரல் கடினமாகலாம். சிவசமயம் ஈரல் கடினமாதலின் காரணமே புலப் படாதிருக்கலாம். அறிகுறி நோயாளிகளின் மார்புகள் பெருத்தும் கன்ன உமிழ்நீர்ச் சுரப்பிகள் பெரியவையாகவும் காணப் ஈரல் கடினமாதல் 199 படும். இது மது குடிப்பவர்களிடத்தே மிகுதியாகக் காணப்படும். இந்நோயின் முதல் நிலையில் ஈரல் பெருக்கமடையும். பின்னர் ஈரல் செல்கள் அழிக்கப் படுவதாலும், நார்த்திசு உருவாவதாலும் ஈரலின் அளவு குறையும். நோயாளி தளர்ந்து சோர்வுற்று எடை குறைந்து காணப்படுவார். பசியின்மை, குமட்டல், வாந்தி, மேல் வயிற்றில் நலக்குறைவு போன்றவை ஏற்படலாம். பிற அறிகுறிகள் ஈரல் புற வாய்ச்சிரை அழுத்தத்தாலோ, ஈரல் இரத்தக் குறை வாலோ, இரண்டும் சேர்ந்தோ ஏற்படும். கல்லீரல் வாயிற்சிரை அழுத்தம். இது ஈரல் இரத்த நாளத் திசுக்கள் அழிவதாலும் உருவில் மாற்றமேற் படுவதாலும், இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவ தாலும் ஏற்படுகிறது. மேலும் தமனியிலுள்ள அழுத்தம் ஈரல் வாயிற்சிரையுள் செல்வதாலும் ஏற் படுகிறது. இந்த இரத்த அழுத்தமேற்படப் பல காரணங்கள் உண்டு, அவற்றுள் முதன்மையானது ஈரல் கடினமாதல் ஆகும். மண்ணீரல் பெருக்கமடைதல். புற வாயிற்சிரை அழுத்தத்தால் அகப்படை வலைச் செல்கள் (reticulo- endothelium) பெருக்கமடைவதால் மண்ணீரல் வீங்கு கிறது. இப்பெருக்கம் குழந்தைகளிடம் நன்கு தெரியும். இரத்தத்தில் மாற்றம். இரத்த வெள்ளையணுக் களும், நுண்தட்டுகளும் குறைந்து காணப்படும். செரி மான உறுப்புகளிலிருந்து இரத்தம் கசிந்தால் இரத்தச் சோகை ஏற்படும். இரத்தத்தில் மேக்குரோசைட் களும், டார்ஜெட் செல்களும் காணப்படும். ஆனால் எலும்பு மஜ்ஜைகளில் எந்த மாற்றமும் இருப்ப தில்லை. வைட்டமின் பற்றாக்குறையாலும் இரத்தச் சோகை ஏற்படலாம். பக்க இரத்தச் சுற்றோட்டம். புறவாயிற் பொது இரத்த ஓட்ட இணைப்பால் பக்க இரத்தச் சுற் றோட்டம் ஏற்படுகிறது. இது உணவுக்குழலின் கீழ்ப்பகுதி, வயிற்றின் மேற் பகுதி, மலக்குடல், குதக் குடல்,பால்சிபார்ம் இழை, பெருங்குடல், உதரமடிப்பு, மண்ணீரல் உதரஉறையின் பின்புறம் ஆகியவற்றில் காணப்படும் சிரைகளுக்கு இடையே ஏற்படும். பக்கச் சுற்றோட்ட நாளங்கள் முன்வயிற்றுச் சுவரில் நன்கு தெரியும். சிலசமயம் கொப்பூழைச் சுற்றிலும் பூக்கூடை வடிவில் காணப்படும். உணவுக்குழல் இரைப்பைப் பக்கச் சுற்றோட்ட நாளங்களிலிருந்து இரத்தக் கசிவு ஏற்படும். தனிப்பட்ட முறையில் எடுக்கப்படும் கதிர் வீச்சுப் படங்கள், மண்ணீரல், புறவாயிற் சிரைகளையும் பக்கச் சுற்றோட்டத்தை யும் காண்பிக்கும். இதன்வழி, புறவாயில் இரத்த அழுத்தத்தையும் அளக்கலாம். மகோதரம் (ascitis). பல நீரிலிருந்து உப்பும், நீரும் காரணிகளால் சிறு மீண்டும் உறிஞ்சப்