4 இழை மாற்று வடிவங்கள்
இழை மாற்று வடிவங்கள் வளைவை பாலிஎஸ்ட்டர்கள் பருத்திக் கலப்புக்கு உறுதியூட்டு வதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை நிலைத்து நிற்கும் அழுத்தியாகப் பயன்படுகின்றன. பாலிஎஸ்ட்டரின் தகைவு - திரிபு வளைவு (stress strain curve) பருத்தியின் தகைவு-திரிபு யொத்து இருப்பதால் அவை சமநிலைப்புத் தன்மை யைக்கொடுக்கின்றன. உயர் இழுவலிமையுள்ள பாலி எஸ்ட்டர் வட்டத் திரியாகப் பயன்படுகிறது. பெட்டி மற்றும் கார், விமானம் ஆகியவற்றின் இருக்கை அடுக்கு கள் செய்ய நைலான் பயன்படுகின்றது. பியானிட்ஸ் (beaunits) பாலிஎஸ்ட்டரிலிருந்து விரிப்பு, நிலைத்து நிற்கும் அழுத்தி (durable press) ஆகியன செய்யப்படு கின்றன குறை பொதிப்பு இழை வகைகள். குறை பொதிப்பு இழை வகைகளில் மூலக்கூறு எடையைக் குறைப்பதன் மூலம் சணற்புரியின் நெடுநாளைய பயன்பாடு குறைக்கப்படுகின்றது. மூலக்கூறு எடை, இயல்பு பிசுப் புமை மூலம் அளக்கப்படுகிறது. சணற்புரியின் சிராய்ப்பு எதிர்ப்புக் குறையும்போது, உடனடியாகப் பெரும்பான்மையான இழைப்பந்துகள் அவை உரு வாகும்போதே உடைந்து விடுகின்றன. இதனால் ஆடைகள் அழகிய தோற்றத்தை மீண்டும் பெறுகின் றன. இந்தக் குறைபொதிப்பு இழைகள் பிற இழை களை விட வலிகுன்றியவையாக இருப்பினும் நெடு நாள் நிலைத்து நிற்கும் ஆடைக்குப் பயன்படுகின்றன. இவ்வகை இழைகள் மெது பின்னல் நூல்களுக்கு (soft knitting yarns ) மிகவும் ஏற்றவை. டெக்ரான் வகை 35 என்பது உயர் மட்டு, குறை பொதிப்புடைய பொதியிழையாகும். இவை பருத்திக் கலப்பிற்குப் பயன்படுகின்றன. டெக்ரான் வகை 65 என்பது மிகக குறைவான பொதிப்பும், அடிப்படை வண்ணப்பொதி யும் கொண்ட ஆடைப் பின்னலில் பயன்படுகிறது. டெக்ரான் 107, திரிவிரா வகை 350 போன்றவை ஒளியி னால் பளபளப்பும் பொதிப்பு எதிர்ப்பும் உடைய பொதிகளாகும். இவை பருத்தி அல்லது பாலிஎஸ்ட்டர் கலப்பிற்குப் பயன்படுகின்றன. இவ்வகைக் கலப்பி லிருந்து உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுப்பிணைப்பி. இது பாதி மங்கலான, குறைந்த உருகுநிலை உடைய சுதுக்கமான பாலிஎஸ்ட்டர் ஆகும். பொதுப்பிணைப்பி இழைகள் (binder staple) வெப்பத்திலும், அழுத்தத்திலும் பிற இழைகளுடன் சேர்ந்து வெப்ப நெகிழ் பிணைப்புகளை ஏற்படுத்து மாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 165° F இல் இவ் விழைகள் ஒட்டிக் கொண்டு, 200° F இல் 55-70% வரை சுருங்குகின்றன. ஃபோர்டிரல் வகை 450 என்பது இவ்வகையைச் சேர்ந்த இழையாகும். குறை நீள் - மீட்சியுள்ள இழை வகைகள், உறுதியூட்டும் இழைகளைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் பருத்தி, செல்லுலோசாலான ஆடைகளின் வலிமையும், சிராய்ப்பு எதிர்ப்பும் மிகுதியாக்கப்படு கின்றன. இவ்வகையில் முதன்முதலில் நைலான் 420 தயாரிக்கப்பட்டது. இது பருத்தியைப் போன்று குறைவான நீள்மீட்சியும், மிகுந்த வலிமையும் உடைய இழையாகும். குறை நீள்மீட்சி என்பது இழுவலிமைக்கும், நீட்சிக்கும் இடையேயான ஒத்த நிலையை மாற்றுவதால் கிடைக்கும். மிகுந்த இழு வலிமையுடைய இழைகள் குறைவான நீள்மீட்சி இயல்புகளைப் பெற்றிருக்கும். இதனைக் கீழே உள்ள அட்டவணையின் மூலம் அறியலாம். நைலான், பருத்தியின் நீள்மீட்சி இயல்புகள் இழை இழுவலிமை கிராம்/டினையர் நைலான் வகை 200 (ஒழுங்கான} பருத்தி 1 உடையும் போ நீள்மீட்சி ாது விழுக்காடு 4. O 40 (1- - அங்குலம்) 3.0 16 நைலான் வகை 420 6. 5 8 23 நைலான் 420, சாதாரண நைலானைவிட மிகுந்த விலை மதிப்புள்ளது. ஆகையால் இவ்வகை நைலான் பாவு நூலை வலிமையூட்டப் பயன்படுகின்றது. பாவு டன் 25% நைலான் 480ஐச் சேர்ப்பதால், 201% வலிமை மிகுதியாக்கப்படுகிறது. இது பணி செய்யும் போது அணியும் கடினமான ஆடைக்குப் பயன்படு கிறது. கோடல் 421 என்பது குறைவான நீள்மீட்சி யுடைய இழையாகும். இது பருத்திக் கலப்பிற்குப் பயன்படுகின்றது. FORTIVED I DU PONT 420 NYLON FOR EXTRA WEAR டுபாண்ட் 430 கைலான் படம் 5. நைலான் 420 முகப்பு வரிச்சீட்டில் காணப் படுகிறது. நிலைத்து நிற்கும் அழுத்து காற் சட்டை படத்தில் காணப்படுகிறது.