உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரல்‌ புற்றுநோய்‌ 221

சஜிட்டேரியா, ட்ராப்பா போன்ற தாவரங்களின் கீழ்ப்பகுதி நீரில் மூழ்கியும், மற்ற பகுதி காற்று வெளியிலும் அமைந்திருப்பதால் நிலத்தில் வேரூன்றி நீரில் மிதக்கும் தாவர வகைக்கும் ஈரூடகத் தாவர வகைக்கும் (amphibious plants) இடைப்பட்ட வகை யைச் சார்ந்திருக்கின்றன. சில தாவரவியல் வல்லுநர் கள் இவ்வகைத் தாவரங்களையும், ஈரம் நாடும் தாவர வகையில் சேர்த்துள்ளனர். ஈரம் நாடும் தாவரங்களில் வேர்த்தொகுதி செறி வற்றும், தண்டு மென்மையாகவும் மிகுதியான காற் றறைகளைக் கொண்டும் காணப்படும். இவற்றில் வலிவூட்டு திசு, கடத்து திசு ஆகியவை மிகக் குறை வாகவே காணப்படுகின்றன. எனவே இத்தகைய தாவரங்கள் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டி ருக்கும். இலைகள் பெரியவாகவும், மிக அகன்றும், மெலிந்தும், பளபளப்புடனும் காணப்படும். நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்த இலைகளில் புறத்தோல் வளரிகள் (epidermal hairs) காணப்படுகின்றன. இலைகளின் முனைகளில் நீர்த்துளைகள் அமைந் துள்ளன. தண்டு பெரும்பாலும் மட்ட நிலத்தண்டாக உள்ளது. ஈரம் நாடும் தாவரங்களுக்கு எடுத்துக் காட்டாகப் பெரணிகள் பெகோனியா வகைகள் ஆகியவற்றைக் கூறலாம். ஈரல் புற்றுநோய் சிலபுல் நா.வெங்கடேசன் வகையாகப் இந்நோய் ஈரலில் தோன்றும் புற்றுநோய் ஈரலுக்குப் பரவும் புற்று நோய் என இருவகைப்படும். ஈரலில் தோன்றும் புற்றுநோயை மேலும் பல பிரிக்கலாம். ஈரல் திசுப்புற்றுநோய், பித்தநாளப் புற்றுநோய், குழந்தைப் பருவ ஈரல் புற்றுநோய் ஆகிய இம்மூன்றும் எபிதீலியல் செல்களில் உருவாகக் கூடியவை. சார்க்கோமா. இயக்கு தசைத் திசுப் புற்றுநோய், இரத்தக் குழாய்ப் புற்றுநோய் ஆகியவை இணைப்புத்திசுக்களில் உண்ட டாகும் புற்றுநோய் ஆகும்.. ஈரல் திசுப் புற்றுநோய் இந்நோய் உலகம் முழுதும் பரவலாகக் காணப் பட்டாலும், ஆப்பிரிக்காவில் வாழும் நீக்ரோகளிட மும், சீன மக்களிடமும்தான் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றது. இந்தியாவில் இந்நோய் அண்மைக் காலத்தில் மிகுந்திருப்பதாகக் தெரிய வருகிறது. நோய் பலரைத் தாக்குவதும் நோய்க் கண்டுபிடிப்பு பெருகியிருப்பதும் அறியப்படவில்லை. ஈரல் திசுப்புற்றுநோய்க்குப் பல காரணங்கள் கூறப் படுகின்றன. அவை: ஈரல் புற்றுநோய் 221 ஈரல் அழற்சி பி. வைரஸ். ஈரல் திசுப்புற்றுநோய் பெரும்பான்மையாகக் காணப்படும் இடங்களில். ஈரல் அழற்சி உண்டாக்கும் பி.வைரஸும் பெருகிக் காணப்படுகிறது. இக்கிருமியின் தாக்குதலால் நாட் பட்ட ஈரல் அழற்சியும் பின்னர் ஈரல் சுருக்கமும் ஏற்படும். இதில் புற்றுநோய் உண்டாக வழியேற் படுகிறது. இக்கிருமி, தாயிடமிருந்து கருவிலிருக்கும் சிசுவிற்கும் சென்று வளரும் தன்மையுடையது. இக் கிருமி தொற்றுபவர்களுக்குப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. ஆப்லோடாக்சின். இந்த நச்சுத்தன்மை ஆஸ்பெர் ஜில்லஸ் ஃபிளேவஸ் என்ற காளான் வகையினால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வெப்பமும் ஈரமும் கலந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வேர்க்கடலை. தானியங்களில் வளரும் தன்மை பெற் றது. ஆஃப்லோடாக்சின் ஈரல் புற்றுநோயை உண் டாக்கும் திறன் பெற்றதாகக் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. ஈரல் புற்றுநோய் மிகுந்துள்ள ஆப்பிரிக்கா விலும் சீனா, கிழக்கு நாடுகளிலும் ஆஸ்பெர்ஜில்லஸ் ஃபிளேவஸ் காளான் மிகுதியாகக் காணப்படுகிறது. ஈரல் கடினமாதல். சரிவிகித உணவுப் பற்றாக் குறை, மது அருந்துதல், வைரஸ் கிருமித் தாக்கு தலுக்குப் பின் உண்டாகும் ஈரல் திசு அழிப்பு ஆகிய நிலைகளில் இந்நோய் உண்டாகிறது. இது நாட்பட்ட அளவில் புற்று நோய்க்கு அடிப்படையாகிறது. ஹீமோகுரோமட்டோசிஸ். பித்தநாள அடைப்பு, ஆல்ஃபா-1 ஆன்ட்டிட்ரிப்சின் குறைபாடு ஆகியவற் றால் ஈரல் கடினமாகிப் புற்றுநோய் உண்டாகும். அறிகுறி. குறுகிய காலத்தில் எடை குறைதல், வயிற்றின் மேல் பகுதியில் வலி உண்டாகுதல்,பசி யின்மை, களைப்புறுதல், வாந்தி எடுத்தல், காய்ச்சல் முதலியன தோன்றும். ஆய்வின்போது ஈரல் பெருத் தும் கடினமாகவும் மேற்பரப்பு கட்டியாகவும் இருக் கும்; வயிற்றில் நீர் சேரும்; மஞ்சள்காமாலை, மண் ணீரல் பெருக்கம், போர்ட்டல் இரத்த அழுத்தம். அதனால் உண்டாகும் இரத்தக்கசிவு முதலியவையும் இருக்கும். ஆய்வு. ரேடியோ ஐசோடோப் நுண்ணலை எதிரொலி குழல் வரைவியல் கணிப்பொறி வெட்டு வரைவு (computerised tomography) உதரத்துள் காணல் (laproscopy) முதலியவற்றால் கட்டியிருப் பதையும் அறுவை மருத்துவத்திற்கு உட்படுவதையும் அறியலாம். ஈரல் துணித்தாய்வு செய்து நோயின் தன்மையை உறுதிப்படுத்தலாம். ஈரல் வேலை ஆய்வு. ஹெபடைட்டில் பி-வைரஸ் ஆண்ட்டிஜென் ஆல்ஃபாஃபீட்டா புரதம் என்பன வற்றையும் கண்டறிய வேண்டும்; ஆல்ஃபாபீட்டா