ஈரலழற்சி 229
காமாலையைக் தொண்டை வலி, இருமல், நீர்க்கோவை முதலிய அறிகுறிகள் தோன்றிவிடும். பசியின்மை, வாந்தி, மூக்கில் மணம் மாற்றம், நாக்கில் சுவைமாற்றம் இவற்றுடன் இந்நோயாளிகள் காணப்படுவர். கல்லீரல் அழற்சி A-யில், B-அழற்சியை விடக் காய்ச்சல் 100°பா - 102°பா வரை தோன்றும். ஆனால் அரிதாகத் தொற்றுக் கல்லீரல் அழற்சி B இல் 103°பா - 104°ாபவரை காய்ச்சல் பிற அறிகுறிகளுடன் தோன்றும், மஞ்சள்காமாலை தோன்றுவதற்கு ஐந்து நாள் முன்னரே சிறுநீர் ஆழ்ந்த மஞ்சள் நிறத்துடனும் மலம் வெளிர் நிறத்துடனும் வெளியேறும். மஞ்சள் கண்ணால் பார்த்தறியும்போது உடலில் பிற அறிகுறிகள் குறையத் தொடங்கும். உடல் எடை ஏறத்தாழ ரண்டிலிருந்து கிலோ குறைந்து காணப்படும். வலப்புற வயிற்றுவலியுடன் கல்லீரல் பெருத்து, தொட்டால் வலியுடன் காணப்படும். மண்ணீரல் வீக்கத்துடன் கழுத்துக் கழலை வீக்கமும் ஏறத்தாழப் பத்திலிருந்து இருபது விழுக்காடு தோன்றும். மஞ்சள்காமாலை குறைந்தாலும் ஈரல் வீக்கமும், ஆய்வு மாறுபாடு களும் தொடர்ச்சியாக ஏறத்தாழ இரண்டிலிருந்து பன்னிரண்டு வாரங்கள் வரை காணப்படும். கல்லீரலில், B வகை அழற்சி A வகை அழற்சியை விடச் சற்றுக் கூடுதலாகவே ஏற்படுகிறது. ஐந்து மேல் ஆய்வு. கல்லீரல் அழற்சியின்போது சீரம் பிலிரூபின் உயர்வதற்கு முன்பாகவே சீரத்தில் டிரான்ஸ்அமினேஸ் அளவு கூடுதலாகக் காணப்படும். டிரான்ஸ் அமினேஸ் அளவு ஈரல் திசு அழிவைக் குறிப்பதற்கான அளவு அன்று என்றாலும் மஞ்சள் காமாலை உள்ளபோது நானூறிலிருந்து நான் காயீரம் அலகு உயர்ந்து காணப்படும். நோய் குண மாகத் தொடங்கிய நிலையில் இதன் அளவு குறையத் தொடங்கும். மஞ்சள்காமாலை விழி வெண்பட லத்தில் வெளிப்படையாகத் தோன்ற இரத்தத்தில் பிலிரூபின் 2.5 மி.கி. 100 க. செ. தேவைப்படும். கல்லீரல் அழற்சியின்போது பிலிரூபின் 5-20 மி.கி வரை உயர்ந்து காணப்படும். கல்லீரல் தொற்றழற்சி யின்போது பிலிரூபின் அளவு இருபது மில்லி கிராமுக்கு மேல் தொடர்ந்து இருப்பின் நோய் மிகவும் முனைப்பாக உள்ளது என்பது பொருள். வெள்ளையணுக்களான நியூட்ரோஃபில்லும் லிம்ஃ போசைட்டும் குறைந்து காணப்படும். புரோத்தி ராம்பின் அளவு கூடுதலாக இருப்பின் ஈரல் செல் களின் அழிவு மிகுதியாக இருக்கும். இந்நிலையில் இவர்களின் உடல் தேறுவது மிகவும் கடினம்.இரத் தத்தில் அல்கலைன் பாஸ்ஃபட்டேஸ் அளவு உயராது. ஆனால் காமாகுளோபுலின் அளவு சற்று உயர்ந்து காணப்படும். மனித ஆஸ்ட்ரேலியன் எதிர்செனி, கல்லீரல் அழற்சி-B நோயில் காணப்படும். கல்லீரல் அழற்சியிலிருந்து வேறுபடுத்தி அறிய இந்த ஆய்வு மிகவும் உதவும். ஈரலழற்சி 229 தொற்றுக் கல்லீரல் அழற்சி-A முதன்முறையாகத் தாக்கப்பட்டு இருப்பின் நோயாளி முழுமையாக நலம் பெறுவார். இதேபோல் கல்லீரல் அழற்சி-B நோயிலும் நலம் பெறுவார். முதியோருக்கு இதயப் பழுது, இரத்தச்சோகை, நீரிழிவுப் புற்று ஆகிய நோய் களுடன் இவ்வழற்சியும் காணப்படும்போது இதுவே முனைப்பான கல்லீரல் அழற்சியாக மாறக்கூடும். வயிற்றில் நீர், கை காலில் வீக்கம், மூளை அழற்சி ஆகியவை இந்நோயுடன் சேர்ந்து காணப்படின் உடல் நலமடைவது கடினம். க பக்க விளைவு. இந்நோயின் பக்கவிளைவுகளாக மூட்டு வலி, உடலில் தடிப்பு, சிறுநீரில் இரத்தம், புரதம் போன்றவை தோன்றக்கூடும். மூளை தாக்கப் பட்ட நிலையில் ஆழ்ந்த மயக்கத்திற்குள்ளாவர், தடுமாற்றம், நினைவிழப்பு, வயிற்றில் நீர், கால் வீக்கம் இருப்பின் ஈரல் பழுதுடன் மூளைப்பழுது ஏற்பட்டுள்ளது என்று கருதலாம். மூளை வீக்கம். செரிமான உறுப்புகளில் இரத்த ஒழுக்கு, மூச்சுப் பழுது, இதயப் பழுது முதலியவற்றுடன் சிறுநீர்ப் பழுதும் ஏற்படுவது நோய் முற்றிய நிலையைக் குறிக்கும். இவ்வறிகுறிகள் தோன்றிய பிறகு ஏறத் தாழ எண்பது விழுக்காட்டினர் மரணமடைகின் றனர். முனைப்பான தொற்றுக் கல்லீரல் அழற்சி - B யினால் தாக்குண்டவர்களில் மூன்றிலிருந்து ஐந்து விழுக்காடு நோயாளிகள் கல்லீரல் நாள்பட்ட அழற்சிக்கு ஆளாகின்றனர். தொற்றும் மோனோ நியூக்கிளியோசிஸ், எர்பிஸ் சிம்ப்ளக்ஸ், காகசாகி நச்சுயிரி, டாக்சோபிளோஸ்மோசிஸ், மது அருந்து போன்றவை வதால் ஏற்படும் கல்லீரல் அழற்சி தொற்றுக் கல்லீரல் அழற்சியைப்போல் தோன்றும். ஆகவே மருத்துவத்திற்குமுன் மேற்கூறிய நோய் களைக் கல்வீரல் வேறுபடுத்தி அறிய வேண்டும். அழற்சியிலிருந்து மருத்துவம். முனைப்பான கல்லீரல் அழற்சிக்குக் குறிப்பிட்ட மருத்துவம் எதுவும் இல்லை. இருப்பி னும் நோயைச் சரிவரக் கண்டறியும் பொருட்டு நோயின் அறிகுறிகள் கூடுதலாக உள்ளவர்களையும் முதியவர்களையும் ஆய்வு செய்ய மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். நோய் உள்ளபோது ஓய்வெடுக்க வேண்டும். இவர்களுக்குக் குமட்டல் இருப்பதால் உயர் கலோரிச் சத்துமிக்க உணவு வகைகளை அளிக்க வேண்டும். வாய் வழியாக உணவருந்த முடியாத போது சிரைவழியாகச் சில நேரங்களில் மிகுதியான உணவைச் செலுத்த வேண்டும். கல்லீரலைத் தாக் கும் மருந்துகளைக் கொடுக்கக் கூடாது. உடல் அரிப்பு இருப்பின் கொலஸ்ட்டிரிமின், டெஸ்ட் டோஸ்ட்டீரோன் என்ற மருந்துகள் உதவும். கார்ட்டி சோன் மருந்து இவ்வகை நோய்க்கு ஏற்றதன்று. கல்லீரல் அழற்சி Bயின் போது ஆய்வுக்காக இரத்