உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இழை மாற்று வடிவங்கள்‌

00 இழை மாற்று வடிவங்கள் A நூற்பி B இழை வெட்டுமுகம் நூற்பி 20 A B A இழை வெட்டுமுகம் படம் 10. ஈருறுப்பு இழைகளின் இருபக்க, புறணி- அகணியின் கட்டமைப்பு வுடன், சுதுக்கத்தை மீண்டும் பெறும். இது மறை சுதுக்கம் எனப்படும். ஈருறுப்பின் மறை சுதுக்கத் திலிருந்து, இருபக்க இழைகள் வெப்பப்படுத்துதல் அல்லது ஈரப்படுத்துதல் மூலம் ஏற்படுத்தப்படு கின்றன. இது முப்பரிமாணச் சுருளைச் சுதுக்கம் எனப்படும். இது குறைவான நீளத்தையுடைய பொருளை உட்புறத்தில் கொண்டிருக்கிறது. சுருளைச் சுதுக்கம் மற்ற இழைச் சுதுக்கங்களை விடப்பருமனை யும். இழுத்தலையும் மிகுதியாகக் கொடுக்கும். ஈருறுப்பு இழைகளை நூற்க, குழாயினுள் குழாய் என்னும் செயல்முறை பயன்படுகிறது. இம் முறையில், கட்டமைப்பு புறணி -அகணிக் உரு வாகிறது. ஓர் உட்பொருள் புறணியையும், மற் றோர் உட்பொருள் அகணியையும் உருவாக்கு கின்றன (படம் 10). பல் கால உருவக நூற்றல் முறை. இம்முறை 1959 ஆம் ஆண்டு ஆர்லான் 21 உற்பத்தியில் பயன் படுத்தப்பட்டது (படம் 11). இது முதல் அக்ரிலிக் ஈருறுப்பு இருப்பக்கக் கட்டமைப்புடைய, கம்பளி யைப் போன்று ஈரமாக்கல் காய்தலால் ஏற்படும் சுதுக்கம் கொண்ட இழையாகும். படம் 11. பகுதி மங்கல் ஆர்லான் செயிலியின் ஒளி நுண்வரை, நீள்விட்டம் (மேல்), வெட்டுமுகம் (கீழ்) தோற்றம் T அந்த இழை நேராக நூற்கப்படுவதோடு, கன மான கம்பளி உடைகள் செய்யவும் பயன்படுத்தப்படு கிறது. பிறகு வெப்பத்தைச் செலுத்தினால் இழையில் ஒரு பக்கம் சுருங்கி, இழையில் சுருளைச் சுதுக் கம் ஏற்படுகிறது. நீரில் துவைக்கும்போது இழை நீருக்கிடையே வேதிவினை ஏற்படுகிறது. இழை ஈர மாகும் போது ஒருபக்கம் வீங்குவதால் இழை, சுதுச்க மடைவதில்லை. சுதுக்கம் குறையும்போது, கனமான கம்பளி ஆடையின் அளவு மிகும். கனமான கம்பளி ஆடையில் உள்ள நீர் காய்ந்தவுடன் சுதுக்கம் திரும்பு கிறது. அதைச் சரியான முறையில் கையாளும்போது பழைய அளவை அது மீண்டும் பெறுகிறது. அந்தக் கனமான கம்பளி ஆடையைச் சிறிது சிறிதாகக் காயவைக்கவோ துண்டின் மீது போட்டுக் காய வைக்கவோ கூடாது. ஏனெனில் நீரின் எடையும், துண்டின் எதிர்ப்புத் தன்மையும் கனமான கம்பளி ஆடைகளை அவற்றின் பழைய அளவுக்கு மீள் வதைத் தடுத்துவிடுகின்றன. கனமான கம்பளி ஆடையைக் குறைவான வெப்பநிலையில் எந்திர உலர்த்தல் முறையிலோ, துணியை வழுவழுப்பான தட்டையான பரப்பில் வைத்து அதனுடன் சேர்த்து ஆணி அடித்தோ காயவைக்கலாம். இதனால் சுதுக் கம் மீண்டும் பெறப்படுகிறது. மேலும் இதுவே சரி யான வழி முறையுமாகும். வெளுத்தல் செயல்முறை யில் சுதுக்கமேற்ற, சுதுக்கமற்ற செயல்பாடு நடப்ப தால் இந்த ஆர்லான் ஈருறுப்பு இழை, முன்னிலை மீள் சுதுக்க இழை (reversible crimp fibre) என அழைக்கப்படுகிறது. ஆர்லான் 21 தரமான பொருளாகப் பயன்படும் போது செயிலி என்ற வணிகப் பெயரில் விற்கப்படு கின்றது. ஆர்லான் வகை 27. ஆர்லான் வகை 33, வகை 68, கிரிசலன் அக்ரிலன் வகை 45, கிரிசலன் லகை 83 CF - 5 ஆகிய இழைகள் ஈருறுப்பு அக்ரிலிக் இழைகளாகும். சிவோனோ என்பது ஈருறுப்பு ஆர் லான்; இது முறுக்கி எந்திரத்திற்கு ஏற்றவாறு உரு வாக்கப்பட்டது. இதனால் பின்னப்படும் நூலிழை மெல்லியதாகவும் மெரினோ கம்பளி போன்ற தன்மை கொண்டுமிருக்கும். பை - லாப்ட் என்னும் ஆடைகளுக்காக ஈருறுப்பு அக்ரிலிக், டோவினால் தயாரிக்கப்படுகிறது. மொன்சண் ஈருறுப்பு இழைகள் இரு வகையாகப் பிரிக்கப்படு கின்றன. அவை மறை-சுதுக்கம்-நீர் (விஸ்கோஸ்); மறை - சுதுக்கம் - வெப்ப வகைகள் என்பன. நைலான் ஈருறுப்புகள் இரண்டாம் வகையைச் சார்ந்தவை. நைலான்,தொகுப்புகளில் முதன்மையானது மட்டு மன்றி, ஈருறுப்பு இழைகளைப் போன்றும் ஆக்கப் படவேண்டும். எந்திரப் பின்னலுக்காகத் தயாரிக்கப் படும் ஒரு படல் ஈருறுப்பு இழை (monofilament bicomponent fibre) காண்டிரிஸ் என்ற வணிகப் பெயருடன் டு பாண்டு (Du Pont) என்ற குழுமத்தால்