உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 உட்கனல்‌ பொறி

272 உட்கனல் பொறி ஒன் கீழ்நோக்கித் தள்ளப்பட்ட நகரும் உந்து, மேலே கூறப்பட்ட வகையில் வெளியேற்றும் துளையையும். உட்செலுத்தும் துளையையும் ஒன்றன்பின் றாகத் திறந்து பின்னர் மேல்நோக்கி நகரும்போது அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக மூடும். இத்தகைய இயக்க முறையில் இப்பொறி தொடர்ந்து வேலை செய்கிறது. இப்பொறியில், நான்கு வீச்சு இயக்கப் பொறி யில் நகரும் உந்தினால் நிகழ்த்தப்படும் உறிஞ்சு இயக்கமும் வெளியேற்று இயக்கமும் தவிர்க்கப்படு கின்றன. இத்தகைய அமைப்பில், நான்கு வீச்சு இயக்கங்களின் இயக்கப் பொறியில் மேற்கண்ட போது நிகழும் செயல்களை ஒரு கழிவு நீக்கி வளிம எக்கி (scavenge pump) செய்கின்றது. இக்கழிவு நீக்கி வளிம எக்கி புதிய வளிமத்தைச் சிறிதளவு உரிய சமயத்தில் அழுத்தி, குழல் உருளைக்குள் செலுத்தப் செலுத்துகின்றது. இவ்வாறு உள்ளே பட்ட புதிய வளிமம், குழல் உருளைக்குள் எஞ்சி வெளியேற்றுகிறது இருக்கும் கழிவு வளிமத்தை (படம்-4). கழிவு நீக்கி வளிம எக்கி வெளியேற்றும் திறப்பான் உட்செலுத்தும் துளைகள் சிறிய இருவீச்சு உட்கனல் பொறிகளில் குழல் உருளையில் மூன்று துளைகள் இருக்கின்றன (படம்-3). நகரும் உந்து இயக்கமற்ற மேல் முனை யின் அருகில் இருக்கும்போது அவ்வுந்தின் கீழ்ப் பகுதி, குழல் உருளையின் அடிப்பகுதியில் இருக்கும் உட்செலுத்தும் துளையைத் திறந்துவிடும். இப்போது புதிய வளிமம், சுழல் தண்டு பொருத்தப்பட்டிருக்கும் அறைக்கும் (crank case) செல்கிறது. நகரும் உந்து கீழே செல்லும்போது இந்த வளிமம் அழுத்தப் படுகிறது. நகரும் உந்து கீழ்முனையை அடையும் போது அதன் மேல் மட்டம் வெளியேற்றும் மாற்றும் துளையை முதலிலும், அடுத்துத் (transfer port) திறந்துவிடும். வெளியேற்றும் துளை வழியாகக் கழிவு வளிமம் வெளியேறும். மாற்றும் துளை வழியாகச் சுழல் தண்டு இருக்கும் அறையில் முன்னதாக அழுத்தப்பட்ட வளிமம் குழல் உருளைக்குள் செல்லும். இவ்வாறு உட்புகும் புதிய வளிமம் குழல் உருளைக்குள் எஞ்சியிருக்கும் கழிவு வளிமத்தை வெளியேற்றும். துளையை இருவீச்சு இயக்கப் பொறியில் எரிபொருள் வீணா வதைத் தடுக்கும் முறைகள். இருதூர இயக்கப் பொறி யில் குழல் உருளைக்குள் வரும் புதிய வளிமத்தைக் கழிவு வளிமத்துடன் கலக்காமல் தனித்து இருக்கச் செய்வது கடினம். உள்ளே வரும் புதிய வளிமத்தில் ஒரு பகுதியை வெளியேற்றும் துளையின் வழியாக நேரடியாக வெளியேறிவிடாமல் தடுக்க வேண்டும். இதற்கு மூன்று வழிகள் கையாளப்படுகின்றன. நகரும் உந்தின் மேல் மட்டம் வளைவாக மேடான வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது (படம்-3). இதனால் உள்ளே நுழையும் புதிய வளிமம் குழல் உருளை படம் 4. கழிவு நீக்கி வளிம எக்கி, இருவீச்சு இயக்க உட்கனல் பொறி படம் 5. (அ ) எதிரெதிராக நகரும் உந்துகளைக் கொண்ட இருவீச்சு இயக்க உட்கனல் பொறி