உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 உட்கனல்‌ பொறி

276 உடகனல் பொறி (6-7), விரிவடைந்த கழிவு வளிமம் வெளியேறு கிறது. அடுத்து, குழல் உருளைக்குள் தூய காற்றுப் செயல்களை புகுந்து, டீசல் இயக்கச் சுழற்சியின் மீண்டும் நடைபெறச் செய்கிறது. இரு வீச்சு இயக்கப் பொறிகளில், மேலே கூறிய வாறே பல்வேறு செயல்களும் வரிசையாக நிகழ்கின் றன. ஆனால், நகரும் அடைப்பாள் கீழ்முனையின் அருகே இருக்கும்போதே, குழல் உருளைக்குள் இருக் கும் விரிவடைந்த கழிவு வளிமம் வெளியேறுவதும் (5-6-7). அவ்வுருளைக்குள் தூய காற்று உட்புகு வதும் (படம்-8) நிகழ்கின்றன. டீசல் இயக்கச் சுழற்சியில் எரிபொருளை எரியச் செய்ய மின் பொறியோ, வேறு பற்றவைக்கும் கருவியோ தேவையில்லை. காற்றின் அழுத்தத்தால் தோன்றும் வெப்பமே எரிபொருளைப் பற்ற வைப்ப தால், இச்சுற்றில் காற்று மிகுதியாக அழுத்தப்பட வேண்டியுள்ளது. இந்த அழுத்த விகிதம் (compres- sion ratio) பதினாறு வரை இருக்கும். ஆட்டோ இயக்கச் சுற்றில் காற்று, எரிபொருள் கலவை அழுத்தப்படுவதால் இவ்வழுத்த விகிதம் ஏழுக்குக் குறைவாகவே இருக்கும். அழுத்த விகிதம் பெருகப்பெருக வெப்ப இயக்கச் சுழற்சியின் வெப்பச் சக்தி மாற்றுத் திறன் மிகும். இந்த அடிப்படையில் டீசல் இயக்கச் சுழற்சி, ஆட்டோ இயக்கச் சுழற்சியைவிடச் சிறப்பாக இருக்கும். சில அழுத்த வெப்பம் பற்றவைக்கும் உட்கனல் டீசல் பொறிகளில் அழுத்த விகிதம் குறை வாக, ஆறு-பத்து வரை இருக்கும். இத்தகைய பொறி களின் இயக்கத்தைத் தொடங்கவும், தொடர்ந்து நடைபெறச் செய்யவும் உருளைக்குள் தெளிக்கப் படும் எரிபொருளை மின்பொறியால் பற்ற வைக் கின்றனர். இத்தகைய பொறிகள் பகுதி டீசல் பொறிகள் (semi diesel engines ) எனப்படும். சில அழுத்த வெப்பம் பற்றவைக்கும் உட்கனல் பொறிகள் நீர்ம எரிபொருளையோ வளிம எரிபொரு ளையோ பயன்படுத்தி இயங்கும் வகையில் அமைக்கப் எரிவளி பட்டிருக்கும். இத்தகைய பொறிகளில் அழுத்தப்பட்டுத் தெளிப்புத் திறப்பானால் (spray valve) குழல் உருளைக்குள் இருக்கும் காற்றினுள் தெளிக்கப்படுகிறது. குழல் உருளைக்குள் மிகுதியாக அழுத்தப்பட்டிருக்கும் காற்றில் தோன்றும் வெப் கொள்கிறது. இவ்வெரிவளி பற்றிக் பொறியின் இயக்கத்தைத் தொடங்கும்போது எரி வளி எரிவதைத் தொடங்கச் சிறிதளவு டீசல் இத் தகைய பொறியின் குழல் உருளைக்குள் தெளிக்கப் படுவதால் பொறிகள் சீராக இயங்கும். பத்தால் சில அழுத்த வெப்பம் பற்ற வைக்கும் உட்கனல் அளவில் எரிவளிமத்தைக் பொறிகளில் குறைந்த அளவில் கொண்டிருக்கும் காற்று எரிபொருள் கலவைக குழல் உருளைக்குள் உறிஞ்சப்பட்டு அழுத்தப்படு கிறது. இவ்வழுத்த இயக்கத்தின் இறுதியில் எரி எண் ணெயை உள்ளே தெளித்து அதன் மூலம் அக்கலவை எரிக்கப்பட்டு வெப்பம் உண்டாக்கப்படும். இதனால் ஆற்றல் வெளிப்படும். இத்தகைய பொறிகளில் உறிஞ்சப்படும் காற்று எரிபொருள் கலவையில் இருக் கும் வளிம எரிபொருள், உள்ளே தெளிக்கப்படும் எரி எண்ணெய் ஆகியவற்றின் விகிதத்தை மாற்றவோ, ஓர் எரிபொருளிலிருந்து மற்றொன்றிற்கு உட்கனல் பொறி இயங்கும்போதே மாற்றவோ இயலும் வகை யில் அப்பொறிகள் அமைக்கப்பட்டிருக்கும். கலப்பு வெப்ப இயக்கச் சுழற்சி. குழல் உருளைக் குள் எரிபொருள் எரிவதால் உண்டாகும் வெப்பத் தின் ஒரு பகுதியை வளிமத்தின் மாறாத பருமனிலும் இன்னொரு பகுதியை வளிமத்தின் மாறாத அழுத்தத் உட்களல் திலும் தோற்றுவிக்கும் முறையும் பொறி இயக்கத்தில் இடம் பெறுகின்றன. இவ் வெப்ப இயக்கச் சுழற்சி, இரட்டைக் கனல் இயக்கச் சுழற்சி (dual combustion cycle) என்றும், கலப்புக் கனல் இயக்கச் சுழற்சி (mixed combustion cycle) என்றும் கூறப்படும். 146 1,8 1-2 காற்று உறிஞ்சப்படுவது 2-3 காற்று அழுத்தப்படுவது 2,7 3-4 மாறாத பருமனில் எரிபொருளின் ஒருபகுதி எரிக்கப்படுவது 4-5 மாறாத அழுத்தத்தில் மிகுந்திருக்கும் எரிபொருள் எரிக்கப் படுவது. 5-6 வெப்ப வளிமங்கள் விரிவடைதல் 6- 7 வெப்ப தளிமங்கள் திடுமென வெளியேறுதல் 7-8 கழிவு வளிமம் வெளியே தளைப்படுவது படம் 10. நான்கு வீச்சுக் கலப்பு வெப்ப இயக்கச் சுழற்சி பெரும்பாலான, மிகுவிரைவு அழுத்தவெப்பம் பற்றவைக்கும் உட்கனல் பொறிகள் (high speed compression ignition engines) நடைமுறையில் இக் கலப்பு இயக்கச் சுழற்சி அடிப்படையிலேயே இயங்கு கின்றன (படம்-10). அழுத்த வெப்பம் பற்ற வைக்கும் உட்கனல் பொறியின் குழல் உருளைக்குள் தெளிக்கப்படும் (எண்ணெய்) எரிபொருள் தெளிக்கப் பட்ட உடனேயே எரிவதில்லை. அவ்வெரிபொருள் காற்றில் இருந்து, வெப்பத்தைப் பெற்று ஆவியாகி, கலந்து, காற்றுடன் வேதியியல் மாற்றங்களில் ஆகின்றது. ஈடுபட்டு எரிவதற்குச் சிறிது காலம்