10 இழை மாற்று வடிவங்கள்
10 இழை மாற்று வடிவங்கள் ரோட்டோஃபில் நூலிழைகள். வை போது மான யாப்பையும் துணிகளைக் கையாளுவதற்கு ஏற்ற தன்மையையும் கொடுக்கின்றன. பருத்த மென் இழைகள் உறுதிக்காகவும், மெலிமையான உடைந்த மென் இழைகள் மென்மைக்காகவும் பயன்படுகின் றன. அவை சுதுக்கம், திரித்தல் ஆகிய முறைகளைக் கையாளுவதன் மூலம் கிடைக்கின்றன. திரிவிரா டான் என் பது பாலிஎஸ்ட்டர் ரோட்டோஃபில் நூலிழையாகும். விரிப்பு இழைகள். விரிப்புகளுக்கு உயர் பரிமாண முள்ள இழை அல்லது நூலிழை தேவைப்படுகிறது. விரிப்புகள் செய்வதில், நிறைவான தோற்றத்திற்கும் செயல்திறனுக்கும் சில சிறப்பு இழை இயல்புகளை ஒன்று சேர்த்தல் இன்றியமையாததாகும். ஒரு செறி வான விரிப்பு நிலைத்து நிற்கும் தன்மையையும், நீள்மீட்சியையும், மண் எதிர்ப்புத் தன்மையையும், எளிதில் தூய்மைப்படுத்தும் தன்மையையும் கொண் டிருக்கும். விரிப்புகளின் பெரும்பாலான பகுதி இழை களைக் கொண்டிருப்பதால் அவை உருவத்தை ஏற் படுத்துகின்றன. மிகுந்த சிராய்ப்பு எதிர்ப்புடைய இழைகள் நீண்ட நாள் நிலைத்து நிற்கும் விரிப்பு களைக் கொடுக்கின்றன. ஆனால் விரிப்புகளின் வாழ் நாள் இழை உதிர்தல், வெளுத்தல், தேய்மானப் பகுதிகள், பொதிப்பு, மண் எதிர்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தது. சில விரிப்புகளைக் கிழிவதற்கு முன்பே மாற்ற வேண்டியுள்ளது. கம்பளி ஒரு நிலையான விரிப்பு இழையாக ஒரு காலக்கட்டத்தில் இருந்தது. ஆனால், உலகில் விரிப்புக் கம்பளியின் உற்பத்தி குறைந்ததால், விரிப்பு இழையின் தேவை விரைந்து பெருகியது. சிராய்ப்பு எதிர்ப்பு. இப்பண்பு தேய்மானச் செய் லாற்றம் அல்லது நிலைத்து நிற்கும் தன்மைக்கு முதன்மைக் கூறாகின்றது. இழையின் நிலைத்து நிற்கும் தன்மை என்பது இழைப்பகுதிகளை முழுது மாகத் தேய்ப்பதற்குத் தேவைப்படும் நேரமே ஆகும். நிலைத்து நிற்கும் தன்மைக்கு, நூல் குஞ்சத்தின் தடி மனும் குஞ்சத்தின் அடர்த்தியும் இழையின் வகையும் சிறப்புக் கூறுகளாகின்றன. சிராய்ப்பைப் பொறுத்து விரிப்பு இழைகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. அமுக்க நீள் மீட்சி. விரிப்பு இழைகளை வளைத் தாலும் அவை தம் தொடக்க நிலையைச் சுருள்வில் போன்று மீண்டும் பெறுவது விரிப்பு இழைகளின் அமுக்க நீள்மீட்சி எனப்படும். இது இழைகளின் போக்கினால் ஏற்படுகிறது. இது மிகுந்த நெரிச லான பகுதியிலும், மிகுந்த எடையுள்ள மரச்சாமான் களின் கால்களுக்குக் கீழேயுள்ள உடைக்கும் விசைப் பகுதியிலும் பயன்படுகின்றது. நைலான் சிறப்பாக மீட்புறும் தன்மை உடையது. சும்பளி, அக்ரிலிக் குகள், பாலிஎஸ்ட்டர்கள் நிறைவாகவும் உடனடி யாகவும், செல்லுலோஸ் இழை மெதுவாகவும் மீட் புறுகின்றன. 1970 ஆம் ஆண்டு முடிவில் மெலிமை யானடினையர் இழைகள் மென்மையாகக் கையாளப் பயன்பட்டமையால், இந்த மெலிமையான நூலிழை களில் ஒப்பிடும் நீள்மீட்சியை உண்டாக்க அழுத்தக் கலனில் வெப்பம் இருக்குமாறு செயல்படுத்தப்படு கிறது. விரிப்பு இழைகளின் விட்டம் ஆடை இழை களின் விட்டத்தைவிடப் பெரியது (படம் 15). இழை களின் இப்பெரும அளவு வளைப்பதற்கும் உடைப்ப தற்கும் மிகுந்த எதிர்ப்பைக் கொடுக்கிறது. விரிப்பு களில் வெவ்வேறு டினையர்களை ஒன்று சேர்க்கும் முறை அடிக்கடி பயன்படுகிறது. செயற்கை இழை கள் கம்பள விரிப்புகளிலும் பெருமளவில் பயன்படு கின் ன்றன. இடம் விரிப்புக் கம்பளி, வலம் விரிப்பு ரேயான் படம் 15. மண்ணேற்றம். மண்ணேற்றம் என்பது இழை யைப் பொறுத்த இயல்பாகும். இயல்பாகவோ தெளி வாகப் பார்க்கக் கூடியதாகவோ இது இருக்கலாம். மண்ணை நிலை நிறுத்தல் இழை வெட்டுமுக உரு வத்தின் சிறப்புப் பணியாகும். தெளிவாகத் தெரியக் கூடிய மண்ணேற்றம் இழை வண்ணம், ஒளியியல் இயல்புகள் அதாவது ஊடுருவுந் தன்மை அல்லது ஊடுருவாத் தன்மை, இழை உருவமைப்பு ஆகியவற் றின் சிறப்புப் பணியாகும். வழவழப்பான வட்ட மான இழைகள் குறைந்த அளவு மண்ணைத் தக்க வைத்துக் கொள்கின்றன. எவ்வாறாயினும், வட்ட மான இழைகள் நைலானைப் போன்று ஊடுருவுந் தன்மையைக் கொண்டு இருப்பின் மண், இழையின் வட்டமான பகுதியில் இருப்பதால், வட்ட வடிவம் பெரிதாகத் தெரிகின்றது.