உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உட்செவியில்‌ ஏற்படும்‌ இடர்ப்பாடுகள்‌ 283

கலவையின் அளவை உட்செலுத்தும் குழாயில் இருக்கும் சுழலும் திறப்பான் (throttle valve) கட்டுப் படுத்துகிறது. காற்றுக் குழாயில் இருக்கும் தொண்டைப் பகுதியில் காற்று விரைந்து செல்வதால் வெற்றிடம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, எரிபொருள் தொட்டியில் உள்ள காற்று அழுத்தம் எரிபொருளைத் தொண்டைப் பகுதியில் இருக்கும் எரிபொருள் குழாயில் இருந்து வெளியே தள்ளுகிறது. இது காற் றுடன் கலந்து உட்செலுத்தும் குழாய் வழியாகக் குழல் உருளைக்குள் செல்கிற கிறது. சுழலும் திறப்பான் மிகுதியாகத் திறக்கப்படும் போது தொண்டைப் பகுதியில் வெற்றிடம் மிகும். இதனால் எரிபொருள் மிகுதியாகவும் காற்று குறை வாகவும் உயர்கின்றன. இதனால் ஏற்படும் கலவை யில் காற்றின் அளவு எரிபொருளின் அளவோடு ஒப்பிடும்போது 15:1 என்றில்லாமல் அதைவிடக் குறைவாக இருக்கும். இச்சமயத்தில் தேவையான அளவுக்குக் காற்றைத் தொண்டைப் பகுதிக்குள் செலுத்தி, குறையும்காற்றை ஈடுசெய்வதன் மூலம் காற்றையும் எரிபொருளை யும் 15:1 என்ற விகிதத்திற்குக் கொண்டு வரலாம். இக்கலவை உட்கனல் பொறியின் குழல் உருளைக்குள் அனுப்பப்படும். ஓர் அமைப்பில் (படம் 18) உட் செலுத்தும் குழாயில் உள்ள வெற்றிடத்தைப் பொறுத் துத் தானாகவே திறந்து கொள்ளும் திறப்பான் தேவையான அளவுக்குக் காற்றை உள்ளே செலுத்து கிறது. இவ்வாறு, குறையும் காற்று ஈடுகட்டப் படுகிறது. மற்றோர் அமைப்பில் இரு எரிபொருள் குழாய் கள் தொண்டைப் பகுதியில் இருக்கின்றன. தொண் டைப் பகுதியில் வெற்றிடம் மிகும்போதுஇரு குழாய் களிலிருந்தும் எரிபொருள் வெளியேறும். ஒரு குழா யிலிருந்து மிகுதியான எரிபொருளும், மற்றொரு குழாயில் இருந்து எரிபொருளும் காற்றும் கலந்த கலவையும் வெளிவரும். இவை தொண்டைப் பகுதி யில் செல்லும் காற்றுடன் கலந்து குழல் உருளைக் குள் செல்லும். இக்கலவையில் காற்று, எரிபொருள் 15:1 என்ற விகிதத்தில் இருக்குமாறு இவ்விரு குழாய்களில் அமைக்கப்பட்டிருக்கும் துளைகளின் அளவு இருக்கும். உட்செவி அழற்சி க.க. இராமலிங்கம் கடுமையான நாள்பட்ட நடுச்செவி அழற்சி பரவுவ தாலும் கிடைமட்ட அரைவட்டக் குழாய் (எலும்பு) உட்செவியில் ஏற்படும் இடர்ப்பாடுகள் 283 அரிக்கப்பட்டு விடுவதாலும்,தலைக் காயம் அல்லது மூளைச் சீழ்க்கட்டி அறுவை மருத்துவத்தில் கோளாறு ஆகிய இவற்றிலிருந்து நுண்கிருமிகள் (வைரஸ்) உட்செல்வதாலும் நடுச்செவி அழற்சியின் பக்கவிளைவாலும் உட்செவி அழற்சி ஏற்படும். சில சமயம் அனைத்து அரைவட்டக் குழாயின் உள்ளே யும் வெளியேயும் பரவலாகச் சீழ் வடிவதாலும் அல்லது சிறிதளவே சீழ்பிடிப்பதாலும் உட்செவி செயலற்றுப் போகும். இவ்வாறு எலும்பில் ஏற்பட்ட துளையை இரத்தநாளமோ எலும்போ மூடிவிட வாய்ப்புண்டு. மூளை வெளி உறை அழற்சி, காசநோய், கிரந்தி நோய், இரத்தக்கசிவுக் காய்ச்சல், டைபாய்டு, வைரஸ் நோய் ஆகிய நோய்களாலும் இவ்வழற்சி ஏற்பட லாம். மேலும் பெற்றோருக்குக் கிரந்திநோய் இருந் தால் பிறக்கும் குழந்தைக்குப் பிறவியிலேயே செவி அழற்சி ஏற்படும். மருந்துகளின் நச்சுத்தன்மையால் கருவின் முதல் மூன்று மாதத்தில் காது பழுதடைய வாய்ப்புண்டு. டைஹைட்ரோஸ் ட்ரப்ட்டோமைசின், நியோமை சின், கானாமைசின், வென் கோமைசின், வியோன மைசின் மற்றும் கொய்னா, ஆர்சனிக் ஈயம், மெர்க் குரி, சாலிசிலேட், அனிலின் சாயம், புகையிலை, மது ஆகிய இவற்றாலும் காதின் உட்செலி பாதிக்கப் படவாம். இந்த நச்சுத்தன்மைகள் உட்செவியின் உணர்வுத் திசுக்களை அழித்து விடுகின்றன. இந்நோயினால் தலைச்சுற்றல், வாந்தி, காது செவிடாதல் போன்றவை ஏற்படும். இரண்டு கண் களும் நிலையில்லாமல் ஊசலாடும். எலும்பில் துளை இருப்பதால் வெளிச்செவியை அழுத்தினால் தலைச் சுற்றல் ஏற்படும். உட்செலி செயலற்றுப் போய் விட்டால் தலைச்சுற்றல் இராது. இரத்த அணுக்கள் ஆய்வு, தலையின் கதிர்ப் படம், மூளை நரம்பு நீர் ஆகிய ஆய்வுகளால் இந்நோயை அறியலாம். மருத்துவம். நோயின் தொடக்கநிலையில் நுண் ணுயிர்க் கொல்லி மருந்துகள் மூலமும் நோய் முற்றிய நிலையில் மாஸ்ட்டாய்டு எலும்பை அறுவை செய்து து நீக்குவதன மூலமும் இதை நலமாக்கலாம். டி. எம். பரமேஸ்வரன் உட்செவியில் ஏற்படும் இடர்ப்பாடுகள் சிரையோட்டத் தடை சிறியதாகவும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பின், உட்செவியில் குறிப் பிடத்தக்க மாறுதல் எதுவும் ஏற்படுவதில்லை. உட் செவிச் சிரைகள் ஒன்றுக்கொன்று பலவிடங்களில்