உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடற்குழி 295

படி வளர்ச்சிக்கு ஏற்றவாறு தொல்லுயிர்ப்படிவங் கள் இல்லாமையால் மறைமுகச் சான்றுகளைக் கொண்டே இதை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இம்மறைமுகச்சான்று இக்காலப் பின்தோன்றி உயிரி களின் கருவியலிலிருந்துதான் கிடைக்கிறது. விலங்கி யல் வல்லுநர்களிடையே பல்வேறு விலங்குகளில் காணும் உடற்குழியின் அமைப்பைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. உடற்குழியின் படி முறை வளர்ச்சியைப் பற்றி 1964 இல் கிளார்க் என் பார் ஒரு விரிவான விளக்கம் அளித்துள்ளார். இடைப்படையில் (mesoderm) உள்ள நீர்மம் நிறைந்த குழியே உடற்குழி (coelom) எனப்படுகிறது. இது கருவின் இடைப்படையில் வளர்ச்சியுற்று அத னால் சூழப்படுகிறது. ஒரு சில உயிரிகளில், கருக் கோளக் குழியிலிருந்து உடற்குழி உண்டாகிறது. இது ஒரு பொய் உடற்குழியாகும். இது உடல் புறத் தோலுக்கும் உடலினுள்ளே உள்ள உணவுப்பாதைக் கும் இடையே உள்ள இடமேயாகும். எனவே ஓர் உயிரியின் உடற்குழியைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள அதன் கருவியலைத் தெரிந்துகொள்ள வேண்டும். முதுகெலும்பற்றவற்றின் கருவியல் பற்றி முழுமையாகத் தெரியாவிட்டாலும், உடற்குழிகளின் அமைப்பு இரு பக்கச் சமச்சீர் உயிரிகளின் வகைப் பாட்டு முறையை அறிய உதவுகிறது. உடல் உடற்குழியமைப்பை வைத்து உயிரிகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். உடற்குழியற்றவை புறத்தோலுக்கும் உணவுப் பாதைக்கும் இடையே உள்ள பகுதி மீசன்கைம் செல்களாலும் தசை நார்களாலும் நிரப்பப்பட்டிருக்கும். உடற் குழியே இல்லாதவை; எடுத்துக்காட்டு. தட்டைப்புழு, நெமர்ட்டீனி; பொய் உடற்குழியுடையவை; உடலின் உள்பகுதி பொய் உடற்குழியாகும். எடுத்துக்காட்டு. அக்காந்தோ செஃபலா, அஸ்கெல்மின்ந்திஸ், என்டோப்ரோக்டா உடற்குழியுடையவை; உடலின் உள்பகுதி உண்மையான உடற்குழியுடையது. இரு பக்கச் சமச்சீர் உயிரிகளின் மற்ற தொகுதிகளான வளைதசைப்புழுக்கள், கணுக்காலிகள், மெல்லுடலி கள், பிரையப்புலாய்டியா, பிரையசோவா, ஃபோரோ னிடா, பிராக்கியோபோடா, கீட்டோனேத்தா, முள் தோலிகள், அரைமுதுகு நாணிகள், முதுகு நாணிகள் என்பன. உள்ளிடைப்படை (entomesoderm), உடற்குழி, இவற்றின் தோற்றம். அமைப்பு முதலானவ வற்றை வைத்து உடற்குழியுள்ளவற்றை மேலும் பிரிக்கலாம். ஹைமன் (1951) என்பாரின் கருத்துப்படி மூன்று அடிப்படை வழிகளில் உள்ளிடைப்படையும், உடற் குழியும் உண்டாகின்றன. (அ) பிளவு உடற்குழி. இடைப்படைப் பட்டை களில் பிளவு தோன்றுவதால் உடற்குழி உண்டா கிறது. எ.கா. முன்வாயுடையன. உடற்குழி 295 (ஆ) குடலுடற்குழி: மூலக்குடலிலிருந்து (arche teron) பிதுக்கங்களாகத் தோன்றி இடைப்படையில் உண்டாகும் குழிக்குக் குடலுடற் குழி என்று பெயர். எ.கா : டியூடெரோஸ்டோமா, கைக்காலிகள். மீள் (இ) மிசென்கைமல் உடற்குழி: ஃபோரோனிடா என்ற தொகுதியில் மட்டுமே இவ்வகை உடற்குழி காணப்படுகிறது. மிசென்கைமல் செல்கள் வரிசையில் இடத்தைச் சூழ்ந்து கொள்கின்றன. இது பிளவு உடற்குழியின் வேறு மாதிரியாகக் கருதப் படுகிறது. உயிரிகளின் வளர்ச்சியில் மேம்பட்ட விலங்குகள் தோன்றும்போது அடையும் மாற்றங்களில் உடற் குழித் தோற்றமும் வேறுபாடுகளும் இன்றி யமையாதனவாகின்றன. உடற்குழியுள்ள விலங்கு களில் இது மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. இதை விளக்க நான்கு இன்றியமையாக் கோட்பாடுகள் உள்ளன. கிளார்க் (1964) என்பார் இதைத் தெளி வாகக் கூறியுள்ளார். அவை குடலுடற்குழிக்கோட் பாடு, இனச்செல் உறுப்பு உடற்குழிக்கோட்பாடு, நெஃப்ரிய உடற்குழிக்கோட்பாடு, பிளவு உடற்குழிக் கோட்பாடு என்பனவாகும். குடலுடற்குழிக்கோட்பாடு. குடலில் உண்டாகும் பைகள் அல்லது பிதுக்கங்கள் இடைப்படைக்குப் பரவி உடற்குழி உண்டாகும் முறையை இக்கோட் பாடு விவரிக்கிறது. செட்ஜ்விக் (1884) என்னும் விலங்கியலார் கூற்றுப்படி இன்றியமையாத குடலி லிருந்தே பிரிகிறது. இதை ஹார்ட்மேன் (1963) என்பவரும் தொடர்ந்து விரிவாக விளக்கியுள்ளார். உ து இனச்செல் உறுப்பு உடற்குழிக்கோட்பாடு. உடற் குழித் தோற்றத்தை விளக்கும் மற்ற கோட்பாடு களை விட இதுவே மிகச் சிறந்ததாகும். உடற்குழி எபிதீலியத்திற்கும் இனச்செல் உறுப்புகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இது விவரிக்கிறது. முதன் முதலில் இக்கோட்பாடு 1885 இல் பெர்க் என்பாரால், வளைதசைப்புழுக்களின் கணு உடற் குழியையும், தட்டைப் புழுக்கள் நெமர்ட்டீன் புழுக்கள் இவற்றின் இனச்செல் உறுப்புகளின் வரிசைத் தொடரையும் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டது. நெப்ரோ உடற்குழிக்கோட்பாடு. நெஃப்ரீடியத்தி லிருந்து உடற்குழி உண்டானது என்று இக்கோட் பாடு விளக்குகிறது. இதைப் பெரும்பாலான அறி வியவார் ஏற்று கொள்ளவில்லை. பிளவு உடற்குழிக்கோட்பாடு. இக்கோட்பாட்டின் படி இடைப்படையிலிருந்து சிறப்பாக மிசென்கை மிலிருந்து உடற்குழி தோன்றுகிறது என்றும், இனச் செல் உறுப்புக்களுடனோ குடலின் உட்பைகளு டனோ எவ்விதத் தொடர்பும் கொண்டதன்று என்றும் தெரிகிறது. ஏனெனில் பின்தோன்றி விலங்கு