இழையுறாப் பிரிவு எதிர்ப்பு மருந்துகள் 13
குறிப்பாகப் பக்குவப்படுத்தப்பட்ட அலுமினியம் வரிகளுடன் கலந்துள்ளதால் பார்வைக்குத் தெரிவ தில்லை .2% அல்லது அதற்குக் குறைவான அலு மினியம், அது உருவாகும் விரைவிற்கு ஏற்ப மின்னிலையைச் சிதறடிக்கும். இரா. அன்பழகன் நூலோதி. Z. Groskcki, Watson's Textile Design and Colour Elementary Weaves and Figured Fabrics, Seventh Edition, Butterworth, London, 1980; N. Hollen, J. Saddler and A. L. Langfor, Textiles, Fifth Edition, Collier Macmillan Publishing Co., London, 1979; B. C., Goswami, I. G. Martidale, F.L. Scardino, Textile Yarn Technology, Structure and Applications, John Wiley and Sons, New York, 1977. இழையுறாப் பிரிவு எதிர்ப்பு மருந்துகள் புற்றுநோய் மருத்துவத்திற்குப் பயன்படும் மருந்து களுள் இழையுறாப்பிரிவு எதிர்ப்பு மருந்துகளும் (anti- metabolites) அடங்கும். இம்மருந்துகள் புற்றில் உள்ள செல்கள் மீது வினைபுரிந்து அவை மேலும் பிரிந்து புதிய புற்றுச் செல்களை உருவாக்காமல் தடுக்கின் றன. அவ்கைலேற்றும் மருந்துகள். இம்மருந்துகள் நியூக் ளிக் அமிலத்தில் உள்ள மூலக்கூறுகளுள் அல்கைல் தொகுதியை உட்புகச் செய்து குறுக்கு இணைப்பை ஏற்படுத்துவதால் செல் பிரிதலின்போது நியூக்ளிக் அமில இழைகள் பிரியமுடியாமலிருக்கின்றன. மஸ்டின் ஹைட்ரோகுளோரைடு மருந்து தற் போது ஹாட்ஜ்கினின் நோயின் தொடக்க மருத்து வத்தில் 0.1 மி.கி/கிலோ எடை வீதம் சிரை வழி ஒரே முறையில் கொடுக்கப்படுகிறது. நான்கு வாரங் களுக்குப் பிறகு இதே அளவில் மீண்டும் செலுத்த லாம். உடை குளோராம் பியூசில் மருந்து மற்ற மருந்து களை விடக் குறைந்த அளவு நச்சுத்தன்மை யது. இது வாய்வழி 5-10 மி.கி. தொடக்க அள வாகவும், பின் நாளொன்றுக்கு 2-4 மி.கி. அளவாக வும் கொடுக்கப்படும். நீண்டநாள் லிம்ஃபோசைட் வெள்ளையணுப் புற்றுநோய் ஹாட்ஜ்கினின் நோய், முலை, அண்டாசயம் விரை ஆகியவற்றில் ஏற் படும் புற்றுநோய்களுக்கும் பயன்படுத்தலாம். மெல்ப்லான் மருந்து பிளாஸ்மா செல் மைலோமாவுக்கும் முலை, அண்டாசயம், விரை போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களுக்கும் 2-15 மி.கி வாய்வழித் தரப்படுகின்றது. இழையுறாப் பிரிவு எதிர்ப்பு மருந்துகள் 13 சைக்ளோபாஸ்ஃபமைடுகள் இரத்தப்புற்று நோய் களிலும், ஹாட்ஜ்கினின் நோயிலும், பிளாஸ்மா செல் மைலோமாவிலும், நியூரோ பிளாஸ்டோமா, வில்மஸ் கட்டி, தசைப்புற்று, முலை, அண்டாசயப் புற்றுகளிலும் வாய்வழி 100-150 மி. கி. தரப்படு கிறது. தயோடீபா, விழித்திரைப்புற்று நோயிலும் ஹாட்ஜ்கினின் நோயிலும் ஹாட்ஜ்கினின் அல்லாத நிணநீர்க் கட்டிகளிலும் முலை, அண்டாசயப் புற்று களிலும் 15-30மி.கி. சிரை வழிக் கொடுக்கப்படு கிறது. புசல்ஃபன், நாட்பட்ட குறுமணியுள்ள வெள்ளை யணுப் புற்றுநோயிலும், பல செல் இரத்தத்திலும் இரத்த நுண்தட்டுமிகு நிலையிலும் தொடக்க அள வாக 2.4 மி.கி வீதம் வாய் வழியாகவும் பேணும் முறையாக 0.5-2 மி.கி. அளவிலும் கொடுக்கப் படும். கார்மஸ்ட்டின் இரத்த மூளைத்தடையை எளி தில் கடப்பதால் மைய நரம்பு மண்டலப் புற்றுநோய் களுக்கு 150-200 மி.கி. அளவில் சிரை வழியாக இரு நாள் கொடுக்கலாம். 4-6 வாரங்களுக்கு ஒரு முறை மீண்டும் இதைக் கொடுக்கலாம். ஹாட்ஜ் கினின் நோயிலும், மெலனின் நிறமிச் செல்புற்று நோயிலும் இது மிகவும் நன்மை தருகிறது. லொமஸ்டின், சிமஸ்டின் போன்றவற்றின் பயனும் மருந்தளவும் கார்மஸ்ட்டினைப் போலவே அமையும். அண்டாசயம், விரை, சிறுநீர்ப்பை,தலை, கழுத்து போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு சிஸ்ப் நாட்டின் கொடுக்கப்படுகிறது. புரோகார்பசின் ஹாட்ஜ்கினின் நோயில் 50.250 மி.கி.ஒரு நாள் வீதம் தரப்படுகிறது. டகார்பசின் மெலனின் நிறமிச் செல் புற்றுநோயிலும் இணைப்புத்திசு நோய் களிலும், 2-45 மி.கி. அளவில் சிரை வழித் தரப்படு கின்றது. வளர் சிதை மாற்ற எதிர் மருந்துகள். அமைப்பில் மெத்தோட்ரெக்சேட் மருந்து, ஃபோலிக் அமிலத்தைப் போலவே இருப்பதால் டைஹைட்ரோ ஃபோலிக் அமில ரிடக்டேஸ் என்ற நொதியை ஒடுக்குவதன் மூலம் டி.என்.ஏ.உற்பத்தித் குத் தேவையான ஃபோலினிக் அமில உற்பத்தியைத் தடை செய்கிறது. கொரியானேப் பீத்தீலியோமா புற்றுநோயிலும், லிம்ஃபேட்டிக் வெள்ளையணுக் கடும் புற்றுநோயிலும், சொரையாசிஸ் நோயிலும் இம்மருந்து 5-100 மி.கி. வாய்வழியோ, சிரை வழியோ தசை வழியோ கொடுக்கப்படுகிறது. 6- மொகாப்டோபியூரின், பியூரின் உற்பத்தியைத் தடை செய்கிறது. இரத்தப்புற்றுநோய்களில் 100-200 மி.கி. அளவில் கொடுக்கப்படுகிறது.