உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 உடும்பு

324 உடும்பு வனங்களிலும் காடுகளிலுள்ள மரங்களிலும் வாழ் கின்றன. மத்திய ஆஸ்திரேலியாவில் காணப்படும் கில்லன் உடும்பு யூகலிப்ட்டஸ் மரங்களிலும் கருவேல மரங்களிலும் வாழ்கிறது. வெவ்வேறு சிறப்பினங் களைச் சேர்ந்த உடும்புகள் உடல் நீளத்தில் வேறு பட்டவை. சிறு உடும்புகள் முப்பது செண்ட்டி மீட்டர் நீளமுடையவை, உடும்பினத்தில் கொமொடோ உடும்பு மிகப் பெரியது. 3 மீ. நீளமும், 135 கி.கி எடையும் கொண்டது. உடல் குறுகலானது; நீளமானது; தலை, கழுத்து, நடுவுடல், வால், நான்கு கால்கள் ஆகிய உடல்பகுதிகளைக் கொண்டது. உடல் முழுதும் சிறிய புறத்தோல் செதில்கள் பரவியுள்ளன. மரங்களில் விரைவாக ஏறக்கூடியவை, பொருள்களை இறுகப் பற்றிக்கொள்வதற்குப் பெயர் பெற்றவை. கூர்மை யான நகங்களின் உதவியால் தரையில் குழி தோண்டக் கூடியவை. மரவாழ் உடும்புகள் பற்றுந் தன்மையுள்ள வாலுடையவை. நீருக்குள் இருக்கும் போது நான்கு கால்களையும் உடலோடு ஒட்டிய வாறு வைத்துக் கொண்டு நீர்நிலையின் அடித்தரை மேல் ஊர்ந்து செல்லக் கூடியவை. இவற்றால் தண்ணீரிலிருக்கும்போது தலையை மட்டும் நீர் மட்டத்துக்கு மேல் நீட்டியவாறு தூங்க முடியும். ஆபத்துக் காலங்களில் விரைவாக ஓடிச் சென்று மரங்களிலோ, பொந்துகளிலோ, தண்ணீரிலோ ஒளிந்து கொள்கின்றன; தப்பிக்க இயலாதபோது எதிர்த்துத் தாக்குகின்றன. ஆழ்ந்த காயங்களை ஏற்படுத்தக் கூடிய கூர்மையான பற்களும் கூர்நகங் களுமே உடும்புகளின் தற்காப்புக் கருவிகள் ஆகும். உடும்புகள் குளிர்காலத்தைத் தவிர மற்ற காலங் களில் சுறுசுறுப்பாக இயங்குபவை. ஊனுண்ணி களாகிய இவ்விலங்குகள் பூச்சி, மீன், தவளை, பறவை, எலி, பாம்பு போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. கொமொடோ உடும்புகள் சிறிய மான் களையும் காட்டுப் பன்றிகளையும் கூடப் பிடித்து உண்ணுகின்றன. பொதுவாக அனைத்து வகையான உடும்புகளும் முட்டைகளை விரும்பி உண்ணுபவை. டும்புகள் பாம்புகளைப் போலவே இரையை முழு விழுங்குகின்றன. பாம்புகளில் உள்ளது போலவே இவற்றின் வாய்க்குழியின் மேல்புறத்தில் வலிமையான எலும்பாலான வன் அண்ணம் உள்ள தால் பெரிய இரையை விழுங்கும்போதும் இவற்றின் மூளை பாதிக்கப்படுவதில்லை. உ மையாக இனச்சேர்க்கைக்குப்பின் பெண் உடும்புகள் அவற்றின் சிறப்பினத்திற்கேற்ப 7-50 முட்டைகளைத் குழிதோண்டியோ மரப்பொந்துகளிலோ தரையில்