344 உணர் தாவரம்
344 உணர் தாவரம் களிலும், கொடைக்கானல், நீலகிரி முதலிய மலைக் காடுகளிலும் காணப்படும். இலைகளைத் தவிரப் பூக்களின் உறுப்புகளும் இல்லகை அசைவுகளைக் காட்டுவதுண்டு. சென்ட் டியூரா பூவின் மகரந்தத் தாள்கள் தொட்டவுடன் சுருங்கிவிடும். பெர்பெரிஸ் பூவின் மகரந்தத் தாள் களைத் தொட்டவுடன் அவை சூலகமுடியை நோக்கி வளையும் மிமுலஸ், டொரினியா, பிக்னோனியா பூக்களின் கிளைத்த சூலக முடிகள் திறந்த நிலையில் இருக்கும்போது தொட்டால் உடனே மூடிக் கொள்ளும். ஜென்ஷியானா பூவின் அல்லிவட்டம் உலுக்கப்பட்டால் மெதுவாக மூடிக்கொள்வதைக் காணலாம். இவ்வசைவுகள் மூலமாகப் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடக்க வழி வகுக்கப்படுகிறது. மேற்கூறிய அசைவு முறையை நாஸ்டிக் அசைவு என்பர். இவ்வகையில் புறத்தூண்டுதல் அமைந்துள்ள திசைக்கும், செடியின் அசைவுக்கும் தொடர்பு இல்லை. நாஸ்டிக் அசைவு இருவகைப்படும். அவை தூக்க அசைவு (நிக்டி நாஸ்டிக்) அதிர்வு அசைவு அல்லது சீஸ்மோ நாஸ்டிக் எனப்படும். உணர் தாவரங்களில் அதிர்வு அசைவு தெளிவாகவும். தூக்க அசைவு மேலெழுந்தவாரியாகவும் இருக்கும். தொட்டாற் சுருங்கிச் செடியைச் சான்றாகக் கொண்டு உணர்வசைவை விளக்கலாம். இலையின் முதற்காம்புத் தண்டு பல்வைனஸ் (pulvinus) என்ற தடித்த பகுதியால் இணைக்கப்பட்டிருக்கும். தூண்டுதலின்போது இப்பகுதி கீழ்நோக்கிக் குறுங் கோண நிலைக்கு வளைவதைப் பார்க்கலாம். இம்முதல் இலைக்காம்பில், நான்கு இரண்டாம் இணைக்காம்புகள் இணையாக அமைந்திருக்கும். அவற்றிலும் பல்வைனி (pulvini) காணப்படும். காம் தூண்டுதலின்போது இவை நான்கும் ஒருமித்துச் செயல்படுகின்றன. ஒவ்வோர் இரண்டாம் பிலும் இருபது அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றிலை கள் இணையாக இரு வரிசைகளில் அமைந்திருக்கும். இவற்றிற்குப் பல்வைனூல் (pulvinule) உண்டு. தூண்டுதலின்போது சிற்றிலைகள் ணையாக மேல் நோக்கி மடங்கும். இவ்வித அசைவு களுக்குச் சலனத் தூண்டுதல் என்று பெயர்.மின், வெப்ப, வேதித் தூண்டுதல்கள் காரணமாகவும் அசைவு ஏற்படலாம் என்று ஆய்வு மூலம் தெரிய வருகிறது. ஒளி, வெப்ப மாற்றத்திற்கேற்பத் தொட் டாற்சுருங்கிச் செடி அசைவை வெளிப்படுத்தும். அதிர்வு அசைவுக்கும், தூங்கும் அசைவுக்கும் பல்வைனஸின் மேற்பாதி, கீழ்ப்பாதிகளில் ஏற்படும் விரிதல். சுருங்குதல் செயல்களே காரணம் என்பது தெளிவாகிறது. பதினேழாம் நூற்றாண்டிலேயே பெஃபர், லின்ட்சே ஆகியோரின் ஆய்வுகள் மூல மாகத் தாவரங்களின் கீழ்ப்பாதியிலுள்ள செல்களில் படம் 2. Y 2.5-5 வளிமண்டல அழுத்தம் குறைவது தெரிகிறது. அதே சமயத்தில் மேற்பகுதியிலுள்ள மாறுபாடுகள் ஏற்படுவதில்லை. செல்களில் கீழ்ப்பகுதியிலுள்ள பாரன்கைமா செல்கள் மெல் லிய சுவருடன் பெரிய செல் டைவெளிகளையும் பெற்றிருப்பதைக் காணலாம். தூண்டுதலின்போது பல்வைனஸின் கீழ்ப்பாதி கறுப்பாக மாறும். இதற் குக் காரணம் செல்லிலிருந்து நீர், கனிமப்பொருள்கள், டானின் போன்ற பொருள்கள் செல் இடைவெளிப் பகுதிக்கு வெளியேற்றப்படுவதேயாகும். மீட்சி நிலை யின்போது வெளியேற்றப்பட்ட பொருள்கள் மீண் டும் செல்லுள் வந்தடைகின்றன. இச்செல்களுக்கு மோட்டார் செல்கள் என்ற பெயரும் உண்டு. ற சலனத் தூண்டுதலுக்கும், செல் - திசுக்களில் ஏற் படும் மாறுதல்களுக்கும் உள்ள தொடர்பு இதுவரை சரிவரத் தெளிவாக்கப்படவில்லை. பல்வைனஸை விட்டு மிகு தொலைவில் தூண்டுதல் ஏற்பட்டாலும் குறுகிய காலத்திலேயே இலையின் அசைவைக் காணலாம். தொட்டாற் சுருங்கிச் செடியில் இருவகைத்தூண்டுதல் - கடத்தல் நடைபெறும் என் பதைப் பலர் ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இவை குறைவேக மற்றும் விரைவுவேகக் கடத்தல்கள் ஆகும். குறைவுவேகம் செல்களில் நடைபெறும். அதன் மூலமாகத் தூண்டுதல்கள் நொடிக்கு 0.15-0.3 செ. மீ வரை செல்லும்; விரைவுவேகக் கடத்தல்