உணவுக் குழல் அழற்சி 363
ஆறி, தழும்பு உண்டாகி உணவுக்குழல் சுருக்கத்தைத் தோற்றுவிக்கும். பிறவிக் குறைபாடுகளான உணவுக் குழல் வளர்ச்சியின்மை (atresia), மூச்சுக்குழலுடன் கூடிய புரை (tracheo oesophageal fistula), பிறவிச் சுருக்கம் அல்லது இதய இசிவு, லூசோரியாவின் விழுங்கமுடியாமை (oesphagia Lusoria) அல்லது பெருந்தமனி அழுத்தத்தால் உண்டாகும் பாதிப்பு ஆகியவை தோன்றக்கூடும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய மற்றொரு முக்கிய புண் உணவுக்குழல் சிரை விரிவாகும். இக்குறைபாடு களைப் போயம் சல்ஃபேட் போன்ற வேதிப் பொருள் களைக் கொடுத்துப் படமெடுப்பதன் மூலமும் அக நோக்கி மூலமும் கண்டுபிடிக்கலாம். அறுவை மூலமே அதிகமான புண்களைக் குணப்படுத்த முடியும். - மா. பிரடெரிக் ஜோசப் உணவுக் குழல் அழற்சி 363 உணர்ச்சிவயப்படுகிறவர்களிடம் திடீரெனத் தோன் றவும் அல்லது துன்பம் அதிகரிக்கவும் இது காரண மாகிறது. பேரியம் சல்ஃபேட் விழுங்கச் செய்து எடுக்கும் படத்தில் உணவுக் குழலின் இறுதிப் பகுதி ஒழுங்காக பென்சில் முனை போன்றும் அதன் மேல் பகுதி விரிந்தும் இருப்பது தெரியும். உணவுக்குழல் அகநோக்கி வழியாகப் பார்த்தால் விரிந்த உணவுக் குழல் தெரியும். இதன் மூலம் புற்றுநோய் இல்லா மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். உணவுக் குழல் அசைவு நோய் உணவுக் குழலின் இறுதிப் பகுதியிலுள்ள சிறு தசை கள் இயல்பிற்கு மாறாக விறைத்துக் கொள்வதால் உணவு விழுங்கும்போது தடை ஏற்படக் கூடும். இயல்பிற்கு மாறான இத்தகைய தசை விறைப்பு சில சமயங்களில் எந்தவிதமான துன்பமும் தாராது. எக்ஸ் கதிர் ஆய்வில் தற்செயலாக இது தெரிய வரும். பரவலாக இந்த விறைப்பு, தசைகளின் சீர்கேட்டைக் குறிக்கும்; விறைப்பின் மேற்பகுதி விரிவடைவதில்லை. கோலினர்ஜிக் எதிர் மருந்து (anticollinergic drug) கொடுத்தால் இந்த விறைப்புக் குறைந்து விழுங்கு வதில் ஏற்படும் சிரமமும் சீராகி விடும். உணவுக் குழல் - இரைப்பைச் சந்திப்பில் விறைப்பு. உணவுக்குழலின் இறுதிப் பாகத்திற்குப் புறப்பரிவு மண்டல நரம்புகள் (para sympathetic nerves) ஆர்பாக் வலைப்பின்னல் (Auerbachs plexus) வழி யாக வந்து சேருகின்றன. உணவுக் குழல் அசைவு நோயில் இப்பின்னல் நலிந்து காணப்படுவதால் தசை விரிவுக்குத் தேவையான நரம்புத் தூண்டல்கள் வந்து சேராமல் இவ்விடம் விரிவடையாமல் சுருங்கிக் காணப்படும். நோயின் அறிகுறிகள் நாள்பட்ட அள வில் மெதுவாகத் தோன்றும். உண்ட உணவு சில மணி நேரங்கள் கழித்து எதிர்க்களிக்கப்படும். முற்றிய நிலையில் எதிர்க்களிக்கும் உணவில் சளியும் நுரையும் வரும். நெஞ்செலும்பின் பின்புறம் ஒருவிதமான துன்பம் ஏற்படும். உணவுக் குழல் இரைப்பையில் சேரும் இடத்தில் உள்ள ஆர்பாக் வலைப்பின்னல் நலிந்திருப்பதாலும் சுருங்கு தசைவிரிந்து கொடுக்கா ததாலும் விறைப்பு உண்டாகிறது. அத்தசையின் இயக்கக் கோளாறே இதற்குக் காரணம். சுமார் நாற்பது வயது ஆண் பெண் இரு பாலாரிடமும் சமமாக இவ்விறைப்புக் காணப்படுகிறது; எளிதில் மருத்துவம். குறுகிய பகுதியைப் பிளம்மர் பை (pleumer's bag) மூலம் விரிக்கலாம் அல்லது ஹெல்லர் அறுவை மூலம் சுருக்கு தசையை மேலிருந்து கீழாக அறுத்து விரிவடையச் செய்யலாம். உணவுக்குழல் மிகவும் வளைந்து சீர் கேடாக இருந்தால் உணவுக் குழல் இரைப்பை ஒட்டறுவை செய்யலாம். உணவுக் குழல் அழற்சி டி.எம். பரமேஸ்வரன் பரவும் தீக்காயத்தாலோ, தொண்டையிலிருந்து நோய் அழற்சியாலோ, இரைப்பைக்குள் ரப்பர் குழாயைச் செலுத்தும்போது ஏற்படும் காயத்தாலோ உணவுக்குழல் அழற்சி (peptic oesophagitis) ஏற் படலாம். நாட்பட்ட உணவுக்குழல் அழற்சி இரைப் பைக்குள் இருக்கும் அமில கார நீர்மங்கள் உணவுக் குழலினுள் எதிர்க்கப்படுவதால் ஆங்காங்கே புண் ஏற்படும். வலி இருக்கும்; இரத்தமும் கசியலாம். துளை ஏற்படவும், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப் புண்டு. இந்தப் புண்கள் உள்ள இடம் குறுகுவதால் குழலின் மொத்த நீளமும் குறையலாம். உணவுக்குழல் சவ்வு உரிந்து புண்ணாகி, எரிச்சல் ஏற்படும். எக்ஸ்