இளங்குஞ்சுப் பராமரிப்பு 19
5% ஃபார்மலின் கரைசலால் குஞ்சு வீட்டைத் தெளிப்பான் கொண்டு நனைக்க வேண்டும். புது உமியைப் புரூடர் (brooder) வைக்கும் இடத்தில் பரப்பி அதன் மீதும் மருந்து தெளிக்க வேண்டும். புரூடரைத் தூய்மைப்படுத்தி நன்கு வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும். புரூடர். இது குஞ்சுகளுக்கு வெப்பம் கொடுக்கக் கூடிய நான்கு அங்குல உயரக் கால்களைக் கொண்ட கருவியாகும். உலோகத்தாலோ மூங்கிலால் ஆன அமைப்பாலோ இதனைச் செய்யலாம். மூங்கிலால் ஆன அமைப்பை, ஊறவைத்து அமைக்கப்பட்ட காகிதக் கூழினால் பூசி மெழுகிவிட்டால் அது மேலும் சிறப்பாகச் செயல்படும். பழைய காகிதத்தை மூங்கில் கூடையின் மீது ஒட்டிவிடலாம். நான்கு அடி விட்டமுள்ள இந்த அமைப்பின் உள்ளே ஐந்து அல்லது ஆறு அறுபது வாட் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். புரூடரின் கீழ் 250-300 குஞ்சுகள் வளர்க்கலாம். புரூடரின் மையத்தில் விளக்குகளை வைத்து எரிய விடவேண்டும். புரூடரைச் சுற்றி 60-90 செ.மீ. தள்ளிப் பதினைந்து முதல் பதினெட்டு அங்குல உயரப் பாதுகாப்பு அட்டைச் சுவர்களைப் பொருத்த வேண்டும். இவை குஞ்சுகள் வெப்பம் கொடுக்கும் புரூடரை விட்டு வழி தவறிச் சென்றுவிடாமல் தடுக்கும். புரூடரின் அடியில் தரையில் 7.5 செ.மீ. உயரத்திற்கு உமி பரப்பி அதன் மேல் செய்தித் தாள்களை வைக்க வேண்டும். புரூடரின் அடியில் 95°F வெப்பம் கிடைக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சுகளுக்குத் தம் உடல் வெப்பநிலையைச் சீராகக் காத்துக் கொள்ள இறக் கைகள் முளைத்திருக்கா. அதுவரையிலும் வெப்பம் கொடுக்க வேண்டும். குஞ்சுகளுக்கு முதல் வாரத்தில் புரூடரின் அடியில் 35°C வெப்பம் கிடைக்குமாறு செய்ய வேண்டும். இரண்டாம் வாரத்தில் 32.2° C மூன்றாம் வாரத்தில் 4C நான்காம் வாரத்தில் 26.6°C வெப்ப நிலையும் மிகவும் தேவைப்படும். இதற்காக அவ்வப்போது மின்விளக்குகளின் ஒளி ஆற்றலைக் குறைக்க வேண் டும். நான்காம் வாரத்தில் இருந்து பகலில் செயற்கை வெப்பம் தேவையில்லை. இரவில் வெப்பநிலைக் கேற்பத் தேவைப்பட்டால் வெப்பம் கொடுக்கலாம். எவ்வெப்போது வெப்பம் தேவையோ அவ்வப் போது புரூடரின் கீழே சென்று குஞ்சுகள் வெப்பம் பெறும். மற்ற நேரங்களில் புரூடரை விட்டு வெளியே ஓடிவிடும். புரூடரின் கீழ் வெப்பம் குறைவாக இருந் தால் அனைத்துக் குஞ்சுகளும் புரூடரின் அடியில் ஒண்டிக் கொண்டிருக்கும். வெப்பம் மிகுதியாக இருந்தால் வெப்பத்தைத் தாங்காது அனைத்துக் அ.க.5-2அ இளங்குஞ்சுப் பராமரிப்பு 19 குஞ்சுகளும் ஓடிவிடும். புரூடருக்கு வெளியே நிற்கும் வெப்பம் தக்க அளவில் இருந்தால் குஞ்சுகள் புரூட ரின் கீழ் ஒத்த அளவில் பரவிக் காணப்படும். குஞ்சுகள் வளர்ச்சிக்கேற்பப் புரூடரைச் சுற்றியுள்ள அட்டைத்தடுப்பை கொண்டே வரலாம். ஏழு முதல் பத்து நாள்களில் தடுப்பை எடுத்து விடலாம். விரிவாக்கிக் புரூடருக்கு மாற்றாகப் புறஊதா விளக்குகளையும் ஓர் அங்குல உயரத்தில் தொங்கவிடலாம். ஒரு 250 வாட் புறஊதா விளக்கு இருநூற்றைம்பது குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பத்தை அளிக்க வல்லது. புரூடரைப் போலவே மூன்று வாரங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம். குஞ்சுகளின் வயதிற் கேற்ப, விளக்கை உயர்த்திக்கட்டி வெப்பத்தைப் பரவ லாக ஆக்கிக் குஞ்சுகளை நலமாக வைக்கலாம். குஞ்சுகளை அவ்வப்போது இரவும் பகலும் பார்வை யிட்டுப் போதுமான வெப்பம் கிடைக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். புரூடருக்கு அடியில் ஒருகுஞ்சுக்குச் சாதாரணமாக எட்டுச் சதுர அங்குல இ டவசதி என்ற கணக்கில் கொள்ள வேண்டும். நான்கு வாரம் வரை குஞ்சு ஒன்றுக்கு அரைச் சதுர அடியும், நான்கு முதல் எட்டு வாரம் வரை ஒரு சதுர அடியும் இடவசதி தேவை. குஞ்சுகள் வருவதற்கு முதல் நாளும், வந்த பின் னும் 7.5 செ.மீ அளவு உமி பரப்பி அதன் மேல் செய்தித்தாள்களைப் பரப்பி, புரூடரில் விளக்குகளைப் எரிய விடவேண்டும். புரூடருக்கும் தடுப்புச்சுவருக்கும் இடையேயுள்ள பகுதியில் தீவனத்தொட்டிகளையும் தண்ணீர்த் மாற்றி தொட்டிகளையும் வேண்டும். வைக்க குஞ்சுகள் வரச் சற்று நேரத்திற்கு முன் தண் ணீர்த் தொட்டிகளில் 5% குளுகோஸ், வைட்டமின் கலந்த நீர் ஊற்றி வைக்க வேண்டும். குளிர் காலத் தில் வெதுவெதுப்பான நீரில் மேற்கூறிய மருந்து வகைகளை வைக்கலாம். முதல் ஒரு வாரம் வரை குஞ்சுகளுக்குக் கொதிக்க வைத்து ஆறவைத்த தூய நீர் கிடைக்குமாறு செய்ய வேண்டும். முதல் நாள் தாளின் மீது மக்காச்சோளக் குறுநொயகளைத் தூவி வைக்க வேண்டும். இரண்டாம் நாள் முதல் குஞ்சுத் தீவனம் கொடுக்க வேண்டும். குஞ்சுகள் வந்த அட்டைப்பெட்டியின் மூடியில் கூடச் சோளக் குறுநொய்களை இட்டுத் தீவனத் தொட்டியாகப் பயன்படுத்தலாம். இரு நாள்களுக்குப் பிறகு அவற்றை அப்புறப்படுத்தி விட்டுத் தீவனத் தொட்டியிலேயே தீவனத்தைப் போடலாம். குஞ்சுகளைப் புரூடரில் விடுமுன் அவற்றின் மூக்கைக் குளுகோஸ் கலந்த தண்ணீரில் முக்கினால் குஞ்சுகள் நீர் நிலையைத் தெரிந்து கொள்ளும். தீவனமும், நீரும். கோழி வளர்ப்பில் 70-80% தீவனத்துக்கே செலவு ஆவதால் அதில் மிக்க கவனம்