378 உணவு இடமாற்றம்
378 உணவு இடமாற்றம் 0 --- சல்லடைத்துளை மேல்நோக்கிச் செல்லும்பொருட்கள் கீழ்நோக்கிச் செல்லும் பொருட்கள் புரோட்டோபிளாச ஓட்டம் சல்லடைக்குழாய் ஏற்படும் தடை குறைக்கப்படுவதாலும், பரவுதலின் வேகம் மிகையாகிறது என்றும் கருதுகின்றனர். இத் தகைய பரவுதலுக்குத் தேவையான ஆற்றல் சுவா சித்தல் மூலம் கிடைக்கிறது. புரோட்டோபினாச ஓட்டக் கோட்பாடுகள். சல்ல டைக் குழாயிலுள்ள சைட்டோபிளாசம் செல்சுவரை ஓட்டிச் சுழலும் ஓட்டம், உணவுப் பெயர்ச்சிக்கு உதவுகிறது என்று டீவிரைஸ் என்பார்கருதுகின்றார். சைட்டோபிளாசத்தோடு சேர்ந்து அதன் ஓட்டத் திற்கேற்பக் கரிமப் பொருள் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுச் சல்லடைத் தட்டை அடைந்தவுடன் சல்லடைத் துளைகள் மூலம் அடுத்த குழலுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் சைட்டோபிளாச ஓட்டத் துடன் சேர்ந்து கீழ்நோக்கிச் செல்கிறது. இதனால் சைட்டோபிளாசச் சுழற்சியும் பரவுதல் முறை யும் சேர்ந்து உணவுப் பெயர்ச்சிக்கு உதவு கின்றன. இரு சல்லடைக் குழல்களை இணைக்கும் சைட்டோபிளாச இழைகள் வழியாக உணவு செல் லலாம் என்று பிடுல்ஃப் என்பார் கருதுகின்றார். புரோட்டோப்பிளாச ஓட்டம் எதிர்த் திசைகளை நோக்கி இருப்பதால் ஒரே சல்லடைக் குழாயில் ஒரு சமயத்தில் இரு வேறு திசைகளில் பொருள்களின் பெயர்ச்சி நடைபெற முடியும். குறைந்த வெப்ப நிலை, ஆக்சிஜன் செறிவில் குறைவு போன்ற புரோட்டோபிளாசத்தின் ஓட்டத்தைக் குறைக்கும் காரணிகள் உணவுப் பெயர்ச்சியையும் தடை செய் கின்றன. புரோட்டோபிளாச ஓட்டம், முதிர்ச்சி யடையாத இளம் சல்லடைக் குழல்களில் மட்டுமே நடைபெறுகிறது. மின் சவ்வூடு பரவல் கோட்பாடு. ஃபென்சம், ஸ்பானர் என்போர் கருத்துப்படி, உணவு இடப் பெயர்ச்சியில் பொட்டாசியம் அயனிகள் முக்கிய பங்கு கொள்கின்றன. இவை சல்லடைத் தட்டில் மின் அழுத்தத்தை ஏற்படுத்துகின் றன. இந்தப் பொட்டாசியம் விசை, சல்லடைக் குழாய் அல்லது அதனை ஒட்டி அமைந்துள்ள துணைச் செல்லில் சல்லடைத்தட்டு உள்ள அடினோசின் ட்ரை பாஸ்ஃபேட் என்ற பொரு ளிலிருந்து கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு வேலை செய்கிறது. மொத்த ஒட்ட அல்லது அழுத்த ஒட்டக்கோட்பாடு (mass or pressure flow hypothesis). மஞ்ச் என்னும் ஜெர்மானிய தாவரவியலார் ஃபுளோயத்தில் சல்ல டைக் குழல்களில் ஒரே திசையில், நீரில் கரையும் தன்மையுள்ள உணவுப் பொருள்கள் மொத்த நீர்ம ஓட்டமாகச் செல்லுகின்றன என்றார். இந்தக் கோட்பாட்டின் மையக் கருத்தை விளக்க, கோள வடிவமான அ, ஆ என்ற இரு சவ்வுகளை ஒரு கிடைமட்டக் குழாயால் (க) இணைத்து. ஒன்றில் (அ) அடர்த்தி மிகுந்த சர்க்கரைக் கரை சலையும் (10%), மற்றொன்றில் (ஆ) அடர்த்தி குறைந்த சர்க்கரைக் கரைசலையும் (2%) எடுத்து, இந்தக் கோளங்களைத் தனித் தனியே ஒரு தொட்டி யிலுள்ள நீரில் மூழ்க வைத்து இரு தொட்டி களையும் ஒரு குழாயால் (ச) இணைக்க வேண்டும். இரு கோளங்களும் ஒரு கூறு புகவிடும் சவ்வு களால் (semi permeable membrane) ஆனமையால் நீர் இரண்டிற்குள்ளும் செல்லும். ஆனால் முதல் சவ்வில் (அ) கரைசலின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் அதில் உறிஞ்சு அழுத்தம் அதிகமாக இருப்பதால் அதிகமான நீர் அதனுள் செல்லும். இது கிடை மட்டக் குழாய் மூலம் அடுத்த சவ்விற்குள் (ஆ) செல்லும். அந்தச் சவ்வில் உறிஞ்சு அழுத்தம் குறைந்து தண்ணீர்த் தொட்டிக்குள் செல்லும். அங்கிருந்து இணைப்புக் குழாய் மூலம் முதல் தொட்டிக்குச் செல்லும். இந்த அமைப்பில் கரைசலின் அடர்த்தி சமநிலை அடையும் வரை நீரின் ஓட்டச் சுழற்சி நடை பெறும். இத்தகைய நிகழ்ச்சி தாவரங்களிலும் நடை பெறக்கூடும் என்று மஞ்ச் எடுத்துக் காட்டினார். தாவரங்களின் இலைகளிலுள்ள செல்களில் ஒளிச் சேர்க்கையால் கரையும் தன்மையுள்ள சர்க்கரைப் பொருள்கள் தயாரிக்கப்படுவதாலும், நீராவிப் போக்கு நடைபெறுவதாலும் சவ்வூடு பரவு அழுத்தம் மிகுதியாக இருக்கும். வேரில், உணவுப் பொருள்கள்