உணவு வேளாண்மை நிறுவனம் 381
உணவுமுறை, உதர அறுவையின்போது உதர அறுவையின்போது பல்வேறு நிலைகளிலும் மிகையான புரதச் சிதைவு ஏற்படுகிறது. இத்துடன் கொழுப்பு இழப்பும் நேரிடுகிறது. சிரை வழி ஏற்றப் படும் உணவில் போதிய அளவு புரதம் இருக்க வேண்டும். போதிய புரதத்தை அமினோ அமி லங்கள் அளிக்கின் றன. கேசின், ஹைட்ரோ லைசேட்டோ அல்லது அமினோஃபிளெக்ஸ் கொடுப்ப தால் அமினோ அமிலங்களை அளிக்கலாம். சிரை வழியாகச் செலுத்தப்படும் கொழுப்பில் ஆற்றல் மிகுதியாக இருப்பதால் அதை 10-20% பால்மமாகச் செலுத்தலாம். சோயாபீன் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் இண்ட்ராலிபிட் நீர்மம் தீங்கற்றது. 24 மணி நேரங்களில் ஒரு கிலோ எடைக்கு மூன்று கிராம் கொழுப்பு தரலாம். கருவுற்ற நிலையிலும். கல்லீரல் நோய் நிலையிலும் கொழுப்புப் பொருள் களைத் தரக்கூடாது. டெக்ஸ்ட்ரோஸ், பிரக்ட்டோஸ் போன்ற கார்போஹைட்ரேட்டுகளைச் சிரை வழி யாகச் செலுத்தலாம். 10% மிகச் செறிவடைந்த நீர்மங்கள், சிரைகளில் இரத்தக்கட்டி அடைப்பைத் தோற்றுவிக்கும். எத்தில் ஆல்கஹாலில் உயர் ஆற்றல் உள்ளது. டெக்ஸ்ட்ரோசில் 400 கலோரி, அமினோசால், எத்த னால், ஃபிரக்டோஸ் ஆகியவற்றில் 880 கலோரி, அமினோசாலில் (10%) 330 கலோரி, வாமினில் (7%) 650 கலோரி, அமினோஃபிளக்ஸில் 340 கலோரி, இண்ட்ராலிப்டில் (20%) 2000 கலோரி ஆற்றலும் இருக்கின்றன. மேற்கூறியவற்றில் 10% டெக்ஸ்ட் ரோஸ், இண்ட்ராலிப்பிட் (20%) தவிர மற்றவற்றில் போதிய அளவு சோடியம், பொட்டாசியம் ஆகியன உள்ளன. சாரதா கதிரேசன் உணவு வேளாண்மை நிறுவனம் ஐக்கிய நாட்டு நிறுவனங்களில் முதன்மையாகத் திகழ்வது ஐக்கிய நாடுகள் உணவு வேளாண்மை நிறுவனம் ஆகும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பிற நாடுகளுக்கு உதவுதல், உணவில் சத்துப் பொருள்களை அதிகரித்தல், வேளாண்மைப் பண்ணைகள், வனங்கள், மீன்பிடித்தல் ஆகியவற்றை மேம்படுத்தி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தல், வேலை வாய்ப்பினைப் பெருக்குதல் ஆகியவை இந்த நிறுவனத்தின் குறிக்கோள்கள் ஆகும். 1945 ஆம் ஆண்டு உணவு வேளாண்மை நிறு உணவு வேளாண்மை நிறுவனம் 381 வனம் தொடங்கப்பட்டது. இது தற்போது 158 நாடுகளை உறுப்புநாடாகக் கொண்டுள்ளது. இந்த நாடுகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொரு ளாதார நிலையையும் உயர்த்துதல், நாட்டின் உணவு வேளாண்மை விளைபொருள்களின் விளைச்சலை அதிகரித்தல், பாமர மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உறுதி எடுத்துள்ளன. இந்த நிறுவனத்தின் தலை யாய பணிகளாவன: அரசு சார்பாகவும், மேம்பாட்டிற்காகப் பண உதவி அளிக்கும் நிறுவனங்கள் சார்பாகவும் தொழில் நுட்பத் திட்டங்கள் வகுக்கவும் அறிவுரைகள் வழங் சுவும் வேளாண் நிறுவனங்களுக்குச் செயல்முறை உதவிகளை அளித்தல். வேளாண்மை மேலாண்மைக்காகத் தகவல்கள் தயாரித்தல் அவற்றைத் தீவிர ஆராய்ச்சிகள் மூலம் பயன்தரும் வகையில் உறுப்பு நாடுகளுக்கு வெளி யீடுகள் மூலம் அளித்தல். அரசுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும், செயல் துறை நுட்பம் முன்னேற்பாட்டுத் திட்டம் முதலிய வற்றிற்கான அறிவுரைகள் வழங்குதல். அரசு நிறுவனங்கள் ஒன்றுகூடி உணவு வேளாண்மைச் சிக்கல்களை விவாதித்து ஆய்வுரை நிகழ்த்தத் தக்க வாய்ப்புகளை ஏற்படுத்துதல். சிறிய, மற்றும் மிகச்சிறிய விவசாயிகளின் பிரச் சினைகளை அறிந்து ஊரக ஒருமைப்பாட்டின் மூலமாகவும் நேரடி விவசாயம், பண்ணை நிர் வாகம். மீன்வளர்ப்பு. வன வளர்ப்பு, உயர் விளைச்சல் மூலமாகவும் தனி ஒருவரின் பொரு ளாதார மேம்பாட்டிற்கு உதவுதல் என்பன. இந்நிறு வனத்தின் முதன்மையான சில களப்பணித் திட்டங் கள் பின்வருமாறு: அனைத்து நாடுகளின் மேம்பாட்டுத் திட்டங் களின் வாயிலாகத் தான்சானியா நாட்டில் பெரும் பான்மையான சிறுபாசனப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுப் பல நிலைகளில் இடுபொருள்கள், நீர்ப்பாசன மேலாண்மை,பயிர் உயர் விளைச்சல் மேலாண்மை, விவசாயிகளின் தொடர்பு முதலியன வகுக்கப் பட்டன. மொராக்கோ நாட்டில் பெருவளியால் மணல் இடம் பெயர்வதால் தென்னந்தோப்புகள் அழிவுக் குள்ளாகும் தறுவாயில் அனைத்து நாடுகள் நிறுவனத் தின் உதவியால் மணல் தடுப்புச் செடிகள் நட்டு அழிவு தடுத்து நிறுத்தப்பட்டது. தெற்கு பசிபிக், தென் கிழக்கு ஆசியப் பகுதி களில் மண்டலத் திட்டங்களின் உதவியால் சிக்கலான மண் வகைகளிலும், நிலைகளிலும், கால பாசன