388 உதரவிதானம்
388 உதரவிதானம் உள்ளுறுப்புகளின் உள் அழுத்தத்திற்கும் உதரக்குழி அழுத்தத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. உதரக்குழியினுள் நீர்மம் அதிகமாக இருந்தால், அழுத்த மாறுபாடு ஏற்படுகிறது. அடி வயிற்றை விட மேல் வயிற்றில் அழுத்தம் குறைந்து காணப் படும். உதரக்குழியினுள் செலுத்தப்படும் காற்றால். வயிற்றின் உள்ளுறுப்புகள் அனைத்தும் மூழ்குகின் றன். உதரக்குழி நீர்மம் மிகையாக வெளிப்பட்டால் இரைப்பையும், முன் சிறுகுடலின் உள் அடக்கங் களும் பெரிடோனியக் குழிவை அடைந்தால் நீர்மம் அடியில் தேங்கும். உதரப்பையுறை நுண்ணுயிர் களால் பாதிக்கப்படலாம். காசநோயும். புற்று நோயும் ஏற்படலாம். சீழ்க் கட்டிகள் தோன்றலாம்; உதரப்பையுறை நோய் நிலைகளில் உருவாகும் நீர் சீழாக இருக்கலாம்; சில வேளை இரத்தமாகவும் இருக்கலாம். இது புற்று நோய்க்கு முன்னோடியாக இருக்கலாம். பித்தநீர் கூடப் பெரிடோனியக் குழி யில் காணப்படலாம். உதரவிதானம் சாரதா கதிரேசன் நெஞ்சுப் பகுதிக்கும் வயிற்றுப் பகுதிக்கும் இடையே காணப்படும் மெல்லிய தசை உறையே உதரவி தானம் (diaphragm) ஆகும். இது மூச்சு உள்ளிழுப் புக்கு மிகவும் தேவையான உறுப்பாகும். கரு வளர்ச் சியின் போது உள்தசைநார்கள் நெஞ்சு உள்வழி யிலிருந்து கீழிறங்கி நெஞ்சின் கீழ்ப்பகுதியை அடை கிறது. உள்தசையிலிருந்து தொடங்குவதால் இத்தசை நார்கள் வயிற்றுக் குறுக்குத் தசையின் தொடர்ச்சி யாக விலா எலும்புகளிலிருந்து தொடங்குகின்றன. மேலும் இவை வளைந்த இழைகளிலிருந்தும் (arcuate ligaments) உதரவிதானக் கால்கள் (crura) எனப் படும் இழையிலிருந்தும் தொடங்குகின்றன. உதர விதானத் தசைநார்கள் முட்டைவடிவில் தொடங்கி மேல்நோக்கி உயர்ந்து இரு உதரவிதானப் பகுதி களாகி நடுவிலிருக்கும் நாணுக்கு (tendon) வரு கின்றன. அமைப்பு. முன்புறமாகக் காணும்போது உதர விதானம் மேல்நோக்கி வல, இடப் பகுதியாக உயர் கிறது. வலப்பகுதி இடப்பகுதியைவிடச் சற்று உயர்ந் திருக்கும். முழுமையாக மூச்சுவிடும் போது வலப் பகுதி நான்காம் விலாவிடைப் பகுதி வரை உயரும். அச்சமயம் இடப்பகுதி ஐந்தாம் விலா எலும்பு வரை உயரும். உதரவிதானத்தின் நடுநாண், நடு நெஞ் செலும்பின் (Sternum) கீழ்ப்பகுதி இருக்கும் நிலை M 1.மார்காக்னி பெருந்துளை 2. உளவுக்குழல் துளை 3. போக்டலெக் பெருந்துளை 4. உதரவிதான படம் 1. வளை முகடு யில் இருக்கும். பக்கவாட்டிலிருந்து காணும்போது இது தலைகீழான J வடிவில் காணப்படும். மேலிருந்து பார்க்கும்போது முதுகெலும்புத் தொடரால் சிறு நீரக வடிவில் உட்குழிந்து காணப்படும். உதரவிதானத்தின் தொடக்கம். பின்புற இடுப்பின் மேல் முதுகெலும்பின் உடல் பகுதியில் காணப்படும் குழிந்த பகுதியின் இருமுனையிலும் உதரவிதானத் தசைகள் செருகியுள்ளன. வல உதரவிதானக் கால், மேல் மூன்று இடுப்பு முதுகெலும்புகளிலும் அவற்றி டையே இருக்கும் தட்டுகளிலும், (inter vertebral dises) இட உதரவிதானக் கால், மேல் இரண்டு இடுப்பு முதுகெலும்பிலும் அவற்றிடையேயிருக்கும் தட்டுகளிலும் செருகியுள்ளன. ஒவ்வோர் உதர விதானக்காலில் இருந்தும் விரிந்து செல்லும் தசைநார் கள் மேல்நோக்கிச் சென்று முன்புறமாக வளைந்து நடுவிலிருக்கும் தசைநாணாக மாறுகின்றன. வலப் பிரிவிலிருந்து சில தசைநார்கள் இடப்புறம் சென்று உணவுக்குழல் துளையைச் சுற்றி ஒரு வளைவை ஏற்படுத்துகின்றன. வளைந்த வல நாண் ப்சோயாஸ் பட்டையின் (psoas fascia) கட்டியான பகுதியாகும். இது இரண்டாம் இடுப்பு முதுகெலும்பிலிருந்து தொடங்கி முதல் இடுப்பு முள்ளெலும்பின் குறுக்குப் பகுதியில் இணைகிறது. இதிலிருந்து, வளைந்த இட தொடங்குகிறது. பன்னிரண்டாம் இது விலா எலும்பையும் இடுப்பின் சதுர வடிவத் தசை யின் (quadratus lumborum)இடப்புறத்தையும் கடந்து செல்கிறது. இது இடுப்புப் பட்டையின் (lumbar fascia) கட்டியான பகுதியாகும். உதரவிதானத்தின் தசைகள் இவ்விரு வளைந்த நாண்களிலிருந்தும் வரு கின்றன. வெளிப்புறமாகப் பன்னிரண்டாம் விலா நாண்