22 இளம்பிள்ளை வாதம்
22 இளம்பிள்ளை வாதம் வாரமுறையில், பிராய்லர் உட்கொள்ளும் தீவனமும் இருக்க வேண்டிய எடையும் வயது பிராய்லரின் கிராய்ன் (வாரங் சராசரி அன்றாடம் களில்) எடை (கிராம் தொடக்கத்தி ருந்து உட் காண்ட தீவ னத்தின் மொத்த அளவு 84 உட்கொள்ள சளில் வேண்டிய தீவன அளவு (கிராம்) 1 90 12 I 200 15 259 350 43 560 3 550 56 952 750 71 1447 5 1000 81 2016 6 1250 96 2688 7,8 1500 106 3430 பிராய்லர் குஞ்சுகளுக்குப் பகல் வெளிச்சத்தோடு சேர்த்து இருபத்து மூன்று மணி நேரம் வெளிச்சம் கொடுக்க வேண்டும். முதல் மூன்று வாரங்களுக்குப் பிறகு 200 சதுர அடி 40 வாட் மின் விளக்கு என்ற கணக்கில் ஏழு அடி உயரத்தில் தொங்கவிட வேண்டும். தடுப்பூசி தேவையெனத் தோன்றினால் மாரெக்ஸ் தடுப்பூசி குஞ்சு பொரித்த அன்றும் RDVE ஐந்து முதல் ஏழுநாள்களுக்குள்ளும் போடவேண்டும். தேவைப்பட்டால் ஏழு-பத்து நாள்களில் அலகு வெட்டி வைக்கலாம். பிராய்லர் ஸ்டார்டரிலிருந்து பினிஷருக்கு மாற்றும்போது உடனே மாற்றாமல் படிப்படியாக 25: 75; 50:50; 75:25 என்றும் கடைசியில் முழுதுமாகவும் மாற்ற வேண்டும். இரத்தக்கழிச்சல் நோய் வாராமல் பாதுகாப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இரத்தக் கழிச்சல் தடுப்பு மருந்துகளை எப்போதும் வைத்திருக்கவேண்டும். ஆழ்கூளம் எப்பொழுதும் உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும். காற்றோட்டமான வீடு, தூய்மையான சுற்றுப் புறம், தரமான தீவனம், தூய நீர், உலர்ந்த ஆழ் கூளம் இவை பிராய்லர் குஞ்சுகளைச் செம்மையாகப் பராமரிப்பதற்கும், பிராய்லர் வளர்ப்பில் நல்ல வருவாயைப் பெறுவதற்கும் அடிப்படைத் தேவை களாகும். ஆர்.நாகராஜன் இளம்பிள்ளை வாதம் இந்நோய் நரம்பு மண்டலத்தைத் தாக்கி ஊனம் உண்டாக்கும் தொற்று நோயாகும். வளரும் நாடு களில் இந்நோய் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தை களிடமே மிகுதியாகக் காணப்படுகிறது. முன்னேறிய நாடுகளிலும் 30-40 ஆண்டுகளுக்கு முன்னர் இந் நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கே ஏற்பட்டது. தற்போது நோய்த்தடுப்பு முறைகளால் அந்நாடுகளில் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுவதில்லை. ஆனால் வளர்ந்த பள்ளிச்சிறுவர், காளையர் ஆகியோர் அவ்வப்போது தாக்கப்படுவர். இந்நோயை இளம் பிள்ளை வாதம் என இப்போது அழைப்பதில்லை. தண்டுவடத்தில் நோய்க் கிருமிகள் ஏற்படுத்தும் மாற்றத்திற்கேற்ப இந்நோய் போலியோ மைய லைட்டிஸ் எனக் குறிப்பிடப்படுகிறது. நோய் தோற்றுவிக்கும் வைரஸ்கள். போலியோ மையலைட்டிஸ் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள் பாக்டீரியா கிருமிகளைவிட மிகச் சிறியவை. இவற்றைச் சாதாரண நுண்ணோக்கி மூலம் காண முடியாது. மீபெருக்கமுள்ள எலெக்ட்ரான் நுண் ணோக்கி மூலமே காணலாம். புரூன் ஹில்ட், லான்சின்ங், லியான் என்ற மூன்று வகை முனைப் பான வைரஸ்கள் இந்நோயைத் தோற்றுவிக்கும். முனைப்பற்ற வைரஸ்களால் நோய் உண்டாகாது. முனைப்பு மிகுந்துள்ள வைரஸ்கள் மிகவும் கடுமையான நோயை உண்டாக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் முன்னேறும் நாடு களில் பலமுறை பெருமளவில் பரவிப் பெருவாரிக் கொள்ளை நோயாகியதால் பல குழந்தைகள் இறந்தனர்; கணக்கற்ற குழந்தைகள் ஊனமடைந் தனர். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் சுற்றுப்புற நல்வாழ்வுத் தடுப்பு மருந்துகள் மூலம் இந்நோய் பெருமளவில் குறைந்திருக்கிறது. இந்த வைரஸ்கள் பெரும்பாலும் உணவு, நீர் மூலமே பரவு கின்றன. நோயுற்றோர் உடலிலிருந்து இவை மலத் தின் மூலம் வெளியேறுகின்றன. நச்சுக் காய்ச்சல், மஞ்சள் காமாலை, காலரா போலவே போலியோ மையலைட்டிஸ் பரவுகிறது. சில சமயங்களில் சளி மூல மாகவும் பரவும், கொசு போன்ற பூச்சிகள் மூலம் இந்நோய் பரவுவதில்லை என்பது மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. நோய் தோன்றும் முறை. நோய் தொற்றியவுடன் நோய் காப்புக் காலம் மூன்று நாளிலிருந்து முப்பது நாளிருக்கலாம். சாதாரணமாக ஏழு நாளிலிருந்து பதினான்கு நாளாகும். உடலுக்குள் சென்றவுடன் வைரஸ்கள் குடலில் பெருகி, இரத்தம் நிணநீர் மூலம் உடல் முழுதும் பரவுகின்றன. நோய்த் தொடக்கமும் நோயின் கடுமையும் உடலில் உள்ள