420 உயர் அழுத்த இயற்பியல்
420 உயர் அழுத்த இயற்பியல் பழைய கட்டத்திற்கு மீண்டு விடுவதும் காணப் பட்டிருக்கிறது. ஆனால் சில பொருள்களில் உயர் கட்டங்கள் உண்டாக்கப்பட்ட அழுத்தத்தினால் அழுத்தம் குறைந்த பின்னரும் ஒரு நிலையற்ற தன்மை யில் நீடிக்கக்கூடும். அதே போலச் சில குறைந்த அழுத்தக் கட்டங்கள் உயர் அழுத்தங்களில் நிலை யற்ற தன்மையில் நீடித்திருக்கலாம். கார்பன் உயர் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டதால் தோன்றிய வைரம், வெப்ப இயக்கவியல் அடிப்படையில் அறை வெப்ப நிலையிலும் பன்னிரண்டு கிலோ பாருக்குக் குறைவான அழுத்தத்திலும் நிலையற்ற தன்மை கொண்டதாக மதிக்கப்படுகிறது. ஆனாலும் வைரம் குறைந்த வெப்பநிலைகளிலும் அதே நிலையற்ற தன்மையில் எல்லையின்றித் தொடர்ந்து நீடிக்கவே செய்கிறது. குறைந்த அழுத்தத்தில் 1000°செ க்கு மேல் அதைச் சூடாக்கினால்தான் வைரம் நிலைத் தன்மைகொண்ட கிராஃபைட்டாக மாறுகிறது. கிரா ஃபைட்டை 200 கிலோபாருக்கு மேற்பட்ட அழுத் தங்களுக்கு உட்படுத்தினாலும் அது வைரமாக மாறாது; கூடவே உயர்வெப்ப நிலைகளையும் ஏற் படுத்தினால்தான் உருவாகும்; இத்தகைய மாற்றத் திற்கான செயலாக்க ஆற்றலைக் குறைப்பதற்காக ஓர் உருகிய உலோக வினையூக்கியைப் பயன்படுத்திச் செயற்கை வைரங்கள் வணிகமுறையில் தயாரிக்கப் படுகின்றன. அதற்கு ஏறத்தாழ நாற்பது கிலோ பார் அழுத்தமும் 1500°செ வெப்பமும் தேவைப் படுகின்றன. வினையூக்கியின் உதவியில்லா விட்டால் 100 கிலோபாருக்கு மேற்பட்ட அழுத்தத்திலும் இரண்டாயிரம் செல்சியஸ் பாகைக்கு மேற்பட்ட வெப்பநிலையிலுமே வைரத்தை உருவாக்க முடியும். உயர் அழுத்தத்தில் எலக்ட்ரான்களின் இட மாற்றம் என்பது ஒரு முக்கியமான ஆய்வுத் துறை யாகும். இரும்புச் சேர்மங்களின் மாஸ்பார் நிறமாலை அளவீடுகள் பெர்ரிக் அயனிகள் (Fe*+) உயர் அழுத் தங்களில் நேர் மாறாகத் தக்க வகையில் பெர்ரஸ் அயனிகளாக (Fe+) மாறுவதைக் காட்டுகின்றன. இவ்வாறே உயர் அழுத்த ஒளி நிறமாலையியல் முறைகள் மூலம் Mn+, Mn' + ஆகவும் Cu+, Cu+ ஆகவும் மாறுவது காணப்பட்டிருக்கிறது. பூமியின் உட்பகுதியில் இருக்கக் கூடிய வேதியல் கூட்டமைப் பைக் கண்டுபிடிக்கும் சிக்கலுடன் இந்த ஆய்வுகள் தொடர்புள்ளவை. பூமிக்குள் ஆயிரம் கிலோ மீட்டர் ஆழத்திற்கும் கீழே மிகக் குறைந்த அளவிலேயே Fe3+ என்ற பொரிக் இரும்பு இருப்பதாகச் சில ஆய் வாளர்கள் கருதுகின் றனர். ஆய்வு முறைகள். உயர் அழுத்தக் கருவிகளின் எளிமையான அமைப்புகளில் தடித்த சுவருள்ள ஓர் உள்ளீடற்ற உருளைக் கலம் இருக்கும். அதன் இரு புறங்களிலும் நகரக் கூடிய பிஸ்ட்டன்கள் செருகப் பட்டிருக்கும். மாதிரிப் பொருளை உள்ளே வைத்துப் பிஸ்ட்டன்களின் மேல் அழுத்தம் செலுத்தப்படுகிறது. சாதாரணமான கருவிகளின் உதலியால் விசையையும் பருமத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அளவிட்டு விடலாம். ஆனாலும் உருளைக் கலத்தின் உட்பகுதி யில் உயர் அழுத்தத்தினால் ஏற்படும் உருக்குலைவு. பிஸ்ட்டன்களுக்கும் உருளைச் சுவர்களுக்கும் இடை யில் ஏற்படும் உராய்வு ஆகியவற்றுக்காகப் பெரிய திருத்தங்களைச் சேர்க்க வேண்டியுள்ளது. கலத்திற் குள் வைக்கப்படும் நீர்மங்களில் பாய்ம நிலையியல் மீள் திறன் தகைவுகள் தோன்றும். அப்போது கொள்கையின் அடிப்படையில் கொள்கலத்தின் எஃகு வளையம் தாங்கி மேண்ட 800 டன் மோதி வெப்பயில் இரட்டை எஃகு வலையம் தாங்கி மேடை 100 டன் மோதி அழுத்தக்கலம் மாதிரி தேனிரும்பு வளையம் உருக்குலைவுக்கான திருத்தங்களைக் கணக்கிட்டு விடலாம். இருப்பினும் உராய்வு, நீர்மக் கசிவுத் தடுப்புக்காகப் பயன்படும் மூடிகளின் சுருக்கம் ஆகிய வற்றுக்காகக் கூடுதலாகத் தேவைப்படும் திருத்தங் களைப் பட்டறிவின் அடிப்படையில்தான் கணக்கிட வேண்டும். அழுத்தக் கலத்திற்குள் மின் வழங்கு முனைகளை அமைக்கலாம். பல்வேறு பொருள்களின் மின் தன்மைகளை அளவிடும் ஆய்வுகளில் அழுத்தம் செலுத்தும் ஊடகமாக நீர்மங்களைப் பயன்படுத்த லாம். அழுத்தத்துடன் மின்தடை மாறும் பாங்கு தெரிந்த ஓர் உலோகம் அல்லது உலோகக் கலவை யாலான ஒரு சுருளுடன் மின் வழங்கு முனைகளை இணைக்கலாம். அப்போது சுருளின் மின் தடையில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து கலத்திற்குள்ளிருக்கும் நீர்மத்தின் அழுத்தத்தைக் கணக்கிட முடியும். தெரிந்த சுருங்கு திறன் கொண்ட ஒரு பாய்மத்தில்