உயிர் ஒலியியல் 461
நரம்புச் செயல்களின் செயல்பாட்டைப் பற்றிய கருத்துகளை அடியோடு மாற்றியமைத்திருக்கின்றன. அத்துடன் நரம்புகளில் செய்திகள் கடத்தப்படுவ தைப் பற்றிய ஒரு பெருமளவான அறிவியல் சிறப் பாய்வுத் துறையையே தொடக்கி வைத்திருக்கின்றன. அணுக்கள், மூலக்கூறுகள், அயனிகள் ஆகிய வற்றின் செயல்களின் அடிப்படையில் ஒரு தூண்டு தல் துடிப்பைத் தொடங்கி வைக்கும் விதம் ஒரு துடிப்பு நரம்புந பரவும் விதம் ஒரு தூண்டப் படாத நரம்பு நாரின் மின்னழுத்த வேறுபாடுகளில் காணப்படும் தற்காலிகமான மாற்றங்களின் இறுதி யான அடிப்படை போன்றவற்றை அந்தச் சிறப் பாய்வுத் துறை ஆராய்கிறது. அவற்றிற்குப் பல அரைகுறையான ஆனால், குறிப்பிடத் தகுந்த முடிவுகள் கிடைத்துள்ளன. 1950 இல் பொட்டா சிய அயனிகள் செயல் சவ்வுக்குக் குறுக்காக இடம் பெயர்வதற்கும் துடிப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நிறுவப்பட்டது, பொட் டாசிய அயனிகள் இடப்பெயர்ச்சி செய்யும்போது அதற்கு நேர் எதிர்த் திசையில் சோடிய அயனிகள் இடம் பெயர்ந்து செல்கின்றன; இந்த இரண்டிற்கு மிடையே ஒரு நெருக்கமான, பிறழாத தொடர்பு இருக்கிறது. யிர் இயற்பியலின் முன்னேற்றம். உயிரி இயற் பியல் துறை, ஓர் அசாதாரணமான பலமுனைத் திறமை தேவைப்படும் துறையாகும். ஓர் உயிரினத் தின் எந்த ஒரு தன்மையைப் பற்றியும் பயனுள்ள உயிர் இயற்பியல் ஆய்வு செய்ய வேண்டுமெனில் தற்கால இயற்பியலில் திறமை பெற்றிருப்பதுடன் பொதுவான விரிவான உயிரியல் அறிவும், ஆய்வு செய்யப்படும் குறிப்பிட்ட பொருளைப் பற்றிக் கிடைக்கக் கூடிய தகவல்கள் அனைத்தையும் விரி வாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலும் தேவை. அதனால்தான் உயிர் இயற்பியல் ஆய்வு செய்வோர் குறிப்பான ஆய்வுத் தலைப்புக்குத் தேவையான அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்றவர்களாக இருப் பது அரிதாகவே இருக்கிறது. பல இடங்களில் ஓர் இயற்பியல் வல்லுநரும் ஓர் உயிரியல் வல்லுநரும் ஒன்றாகச் சேர்ந்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர். கே.என். இராமச்சந்திரன் உயிர் ஒலியியல் ஒலி என்பது பொருள்களின் அதிர்வினால் ஏற்படும் விளைவாகும். அந்த அதிர்வுகள் காற்றில் பரவும் போது அதிர்வெண் ஏற்றதாக இருந்தால் காதில் ஒலி உணர்வு தோன்றும். அதிர்வெண் மிக அதிக உயிர் ஒலியியல் 451 மாயிருக்குமானால் அந்த ஒலி, உடலில் வேறு பல விளைவுகளை உண்டாக்கும். ஓர் அலகுப் பரப்பின் வழியாக ஒரு நொடியில் பரவும் ஆற்றல் ஒலிச்செறிவு (intensity) எனப்படும். இது ஜுல்/மீட்டர்' நொடி என்னும் அலகுகளில் அளக்கப்படும். இது ஓர் அலகுக் குறுக்குப் பரப்பும், ஒலியின் வேகத்திற்குச் சமமான நீளமும் உள்ள ஓர் உருளைக்குள் அடங்கிய ஆற்றலுக்குச் சமம். ஓர் ஒலி அலையின் வீச்சு (amplitude) அதில் தோன்றும் பெரும அழுத்த வேறுபாடாகக் குறிப்பிடப்படும். அதனை அழுத்த மட்டம் (pressure level) என்றும் கூறலாம். அது அழுத்த அலகுகளில் (நியூட்டன்/ மீட்டா" அளக்கப்படும். காதுக்குப் புலனாகக் கூடிய சிறும அழுத்த மட்டம் 0.00002 நி[மீ2; காதுக் குப் புலனாகக் கூடிய பெரும் அழுத்த மட்டம் 20 நி/மீ வரை நீடிக்கிறது. காதின் உணர்வுச் செறிவு (intensity of sensation) h, அழுத்த மட்டம் g எனில் hos Ag g அதாவது தொடக்க ஒலிமட்டம் அதிகமாயிருக் கும்போது அதில் ஏற்படும் மாற்றம் அதிகமாயிருந் தால் மட்டுமே அதை உணரமுடியும். ஆனால் தொடக்க ஒலிமட்டம் குறைவாயிருக்கும்போது சிறிய மாற்றத்தைக்கூட உணரமுடியும். மேற்கண்ட சமன் பாட்டை hy-h, = log g, loga எனவும் எழுதலாம். hh, ஆகியவை முறையே பே.,ே என்னும் அழுத்த மட்டங்களுக்கான உணர்ச்சிச் செறிவுகளாகும். இது வெபர் - பெச்னர் விதி எனப்படும். ஒலி அழுத்த மட்டங்களைப் பத்தின் மடிகளாகக் குறிப்பிடலாம். இந்த முறையின் அளவை, அலகு பெல் (bel) எனப்படுகிறது. தொடக்க நிலை மட்டத்தைப் போலப் பத்து மடங்கு அழுத்தம் அதிகமானால் அப்போது ஏற்படும் அதிகரிப்பு ஒரு சமம். அதே பெல்லுக்குச் போலத் தொடக்க மட்டத்தைப் போலப் பத்திலொரு பங்காக அழுத்தம் குறையும்போது ஏற்படும் குறையும் ஒரு பெல்லுக் குச் சமம். பெல் அலகு, டெசிபெல் (decibel) எனப் படும் பத்துச் சமக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருக் கிறது. இந்த அளவு முறையில் செவியால் உணரக் கூடிய செறிவு நெடுக்கம் நூற்றியிருபது டெசிபெல் லாகும். காது உணரத் தேவையான சிறுமச் செறிவு அழுத்த மட்டம் 0.00002 நி/மீ'. இது மேற்கோள் அழுத்தம் (reference pressure) எனப்படும். இந்நிலை யில் ஆற்றல் கடத்தல் அளவு 10-11 வாட்/மீ ஆகும். ஒலித் தோற்றுவாயைச் சுற்றியுள்ள பொருள் அதிலிருந்து தொடர்ந்து ஆற்றலைப் பெறுகிறது.