466 உயிர் ஒலியியல்
466 உயிர் ஒலியியல் சுருள்வளையின் உச்சியிலும் உயர் அதிர்வெண் ஒலி கள் அதன் அடிப்பகுதியிலும் உணரப்படலாம். உரத்த ஓசைகளுக்குத் தொடர்ந்து ஆளாககப் படும் விலங்குகள் சில காலத்திற்குப் பிறகு அந்த ஓசைகளுக்கு உணர் தன்மையையிழந்துவிடுகின்றன. அவற்றின் சுருள்வளை அமைப்பை ஆய்வு செய்த போது அதன் அடிப்பகுதிகள் சேதமடைந்திருப்பது தெரிந்தது. ஆனால் ரிபவுல் என்பார் சுருள்வளைக் குழாயின் சுவர்கள் மீள் தன்மை உடையவையாக இருந்தால் அவற்றின் வழியாக அழுத்த அலையின் வேகம் கணிசமாகக் குறைந்து விடும் எனவும், நிலை யலைகள் தோன்றும் எனவும் கூறுகிறார். அப்போது சுருள்வளையின் சில பகுதிகள் அதிர்வற்ற பிறழ்ச்சிக் குட்பட்டு நரம்புகள் தூண்டப்படும். இத்தகைய அமைப்பிற்கு அலைவேகம் ஒரு முக்கியமான கூறா கும். திருக்குமுருக்கின் அமைப்பிற்கேற்றபடி அலை வேகம் ஏறத்தாழ 50 மீ/நொடி இருக்க வேண்டும். இத்தகைய வேகங்கள் காதில் தோற்றுவிக்கப்படு கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மேற்கண்ட இரு கொள்கைகளிலும் அதிர்வெண் களைப் பிரித்தறிவது சவ்வின் சுருள்வளைச் குறிப்பிட்ட இடங்கள் தூண்டப்படுவதைப் பொறுத் திருப்பதாகக் கொள்ளப்படுகின்றது. ஆகவே அவை நிகழ்விடக் கொள்கைகள் (place theories) எனப்படும். வெவ்வேறு அதிர்வெண்களால் வெவ்வேறு நரம் பிழைகள் தூண்டப்படுவதால் மூளை அதிர்வெண் களைப் பிரித்துணர்கிறது. வேறொரு வகைக் கொள்கைப்படி, வேறுபட்ட அதிர்வெண்கள் செவி நரம்பின் இழைகளில் வெவ் வேறு அதிர்வெண்கள் உள்ள மின்னலைகளை ஏற் படுத்துகின்றன எனவும் அவற்றிலிருந்து மூளை அதிர்வெண்களைப் பிரித்தறிகிறது எனவும் கூறப் படுகின்றன. இந்த இரு விதமான கொள்கைகளுக்கும் ஆய்வு முடிவுகள் சான்றாக உள்ளன. நுணுக்கமாக ஆராயும்போது இரு கொள்கைகளிலும் குறைபாடு கள் தென்படுகின்றன. உயரதிர்வெண் ஒலிகளுக்கு நிகழ்விடக் கொள்கைகள் ஒத்து அவை குறைந்த அதிர்வெண் ஒலிகளால் தூண்டப்படுவதன் அடிப் படை விளங்கவில்லை. இதற்கு மாறாக நரம்பிழைகள் குறைந்த அதிர்வெண் ஒலிகளில் தக்கபடி மாறும் சைகைகளை அனுப்புவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனால் உயர் அதிர்வெண் ஒலிகளுக்கேற்றபடி சைகைகளை மாற்றியனுப்பு மளவிற்கு நரம்பிழைகள் விரைந்து தம் நிலைக்குத் மீள்வதில்லை. வீவர் என்பார் இந்த இரு கொள்கைகளையும் இணைத்து இரு நிலைக் கொள்கை ஒன்றை உரு வாக்கினார். அதன்படி உயர் அதிர்வெண் ஒலிகளை உணர்வதில் சுருள்வளைச் சவ்வின் இழைகளும் குறைந்த அதிர்வெண் ஒலிகளை உணர்வதில் நரம் பிழைகளும் பங்கேற்கின்றன. இவ்வாறு ஓர் ஒலியின் செறிவு உயர் அதிர்வெண் ஒலிகளுக்கேற்றபடி பேசிலார் இழைகள் தூண்டப்படுவதில் ஏற்படும் மாற்றமாகவும் குறைந்த அதிர்வெண் ஒலிகளுக் கேற்றபடி தூண்டப்படும் நரம்பிழைகளின் எண்ணிக் கையில் ஏற்படும் மாற்றமாகவும் உணரப்படும். ஓர் அதிர்வு செய்யும் இசைக்கவையை மண்டை யோட்டில் வைத்தால் எலும்பு வழியாக ஒலி நேரடியாகத் சுருள்வளை நீர்மத்திற்குச் செல்லும். நடுச்செவியமைப்பு முற்றிலுமாகப் பழுதுபட்டிருந்த போதிலும் ஒலியை உணரமுடியும். எலும்புக் கடத் தலுக்கு உணர் தொடக்க ஆற்றல் காற்றுக் கடத் தலுக்குள்ளதைவிட நாற்பது டெசிபெல் அதிகம் இவ்வுண்மை நடுச்செவி பழுதுபட்டுச் செவிடாக விருப்பவர்களுக்குச் செவியுணர்வை அளிக்க உதவு கிறது. மண்டையோட்டிற்கு நேரடியாக அதிர்வைச் செலுத்தும் வகையில் செவிக்கேள் கருவிகள் (hearing aids) தயாரிக்கப்பட்டுள்ளன. என காதின் உணர்வு.காது,ஒலியை மடக்கைத் தன் மையில் உணருகிறது வெபர் - பெக்னர் விதி காட்டுகிறது.100 சைக்கிள் / நொடி அதிர்வெண் ணுள்ள ஒலியைக் காது உணரத் தேவையான செறிவு அடிப்படை அலகு (basic unit) எனப்படும். ஒலிச் செறிவு இந்த அலகிலிருந்து மடக்கைத் தன்மையில் அளக்கப்படுகிறது. ஒரு காதை மூடிக் கொண்டால் மற்ற காதில் பாதி உணர்ச்சியே ஏற்படும். டெசிபெல் அளவுமுறை மடக்கைத் தன்மையிலிருப்பதால் இந்த வேறுபாட்டை டெசிபெல்லாகக் குறிப்பிட முடியாது. எனவே, ஓர் ஒலியின் உரப்பை (loudness) அளக்க ஃபோன் (phon) என்ற அலகு பயன்படுகிறது. 1000 சைக்கிள்/நொடி அதிர்வெண்ணும் உணர் தொடக்க அளவிற்கு மேல் நாற்பது டெசிபெல் செறி வுள்ளதும், இரு சாதாரணக் காதுகளால் கேட்கக் கூடியதுமான ஒலி, 1010 போன் உரப்புள்ளதாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட ஒலி தோற்றுவிக்கும் உணர்ச்சியை அளப்பது ஆய்வுமுறை உளவியல் (experimental psychology) துறையைச் சாரும். அத்தகைய அளவீடுகளின்போது முப்பத்து மூன்று டெசிபெல் செறிவுள்ள ஒலி ஐந்நூறு போன் களும், நாற்பத்தொன்பது டெசிபெல் ஒலி இரண்டா யிரம் போன்களும், எழுபத்துமூன்று டெசிபெல் ஒலி பத்தாயிரம் போன்களும் உரப்புள்ளனவாகக் காணப் பட்டுள்ளன. எனவே, செறிவுக்கும் னவே, செறிவுக்கும் உரப்புக்கும் இடையில் ஒரு நேர்கோட்டு உறவு இல்லை. அதிர் வெண் மாறும்போது காதின் உணர்திறனும் மாறு வதால் உரப்பும் மாறுகிறது.ஒரு குறிப்பிட்ட அளவு செறிவு உயரும்போது உயர் அதிர்வெண்ணுள்ள ஒலிகளை விடக் குறைந்த அதிர்வெண்ணுள்ள ஒலி களின் உரப்பு அதிகமாக உயர்கிறது.