உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறக்கிவிடும்‌ அமைப்பு 29

அமைப்பு. வழக்கிலிருக்கும் மூன்று சக்கர இறங் கும் அமைப்பே தற்போது மிகவும் ஒத்துக்கொள்ளப் பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பில் ஒரு மூக்குப் பல் சக்கரம் (nose gear) வானூர்திச் சட்டகத்தின் புவிஈர்ப்பு மையத்திற்கு வெகு முன்பகுதியிலும் ஏனைய இரு சிறப்புப் பல்சக்கரங்கள் புவியீர்ப்பு மையத்திற்குச் சற்றே பின் புறத்தும் அமைக்கப் பட்டிருக்கும். குறுக்குக் காற்றால் விமானம் வழியை விட்டு விலகி இறங்கும்போதும் (yawed), தரையைச் சீர்செய்யும் போதும் வானூர்தி உருண்டு விடாமல் இருக்க இவ்விரு பல்சக்கரங்களும் தேவையான இடை வெளியில் பிரிக்கப்பட்டு இருக்கும். காப் மூக்குச் சக்கரம் வானூர்தியை நிறுத்தும்போது முன்புறம் இடிபடாமல் வானூர்தியைக் பாற்றும் தரையில் திருப்புவதற்கு ஏற்றவாறு எப் போதும் திரும்பும் இயங்கமைப்பை மூக்குச் சக்கரம் பெற்றிருக்கும்.மூன்று சக்கர அமைப்பில் மிகுதியான பயன்கள் விளைகின்றன. அவை இவ்வமைப்பில் புவி ஈர்ப்பு மையம் வானூர்தியின் முக்கிய பல் சக்கரங் களுக்கு முன்னதாக அமைந்திருப்பதால் இறங்கும் போது திசை நிலைத்தன்மை கிடைக்கும். இதனால் விமானி சுற்றுப்புறத்தைப் பார்க்கும் நிலை சிறப்பாக அமையும். வானூர்தி தரையில் இருக்கும்போது அதன் தளம் ஒரே அளவில் இருப்பதால் சுமை ஏற்ற லுக்கும், பயணிகளின் வசதிகளுக்கும் ஏற்றவாறு இருக்கும். வானூர்தி தரையைத் தொடும் நிலையில் புவிஈர்ப்பு மையத்திலிருந்து பின்புறம் அமைந்துள்ள சிறப்புச் சக்கரங்கள் தரையைத் தொடுவதால், முன் புறம் இடிபடாதவாறு மூக்குச் சக்கரம் தாங்குகிறது. இதனால் தாக்குதலின் கோண அளவைக் குறைப்ப தோடு வானூர்தி மீண்டும் மேலெழுந்து செல்லும் வாய்ப்பையும் குறைக்கிறது. தற்போது பெரும்பான்மையாகப் பயன்படுத்தப் படும் மற்றோர் அமைப்பு இறங்கும் வால் சக்கர படம் 2. வால்சக்கர இறங்கும் அமைப்பு அமைப்பாகும். இரு சிறப்புக் குறுக்குச் சட்டங்கள் (struts) புவி ஈர்ப்பு மையத்திற்குச் சற்று முன்னும், இரண்டுக்கும் இடையில் இடம் விட்டும் அமைந்திருக் கும். மூன்றாம் சக்கரம் வானூர்தியின் சட்டகத்தின் வால்பகுதி முனையில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இறக்கிவிடும் அமைப்பு 29 அமைப்பு மூன்று சக்கர அமைப்பை விட எடை குறை வானதாக இருக்கும். பார்க்கும் அமைப்பு, தரையில் சீர் படுத்தும், நிறுத்தும் அமைப்பு ஆகியவற்றில் உள்ள சிக்கல்களால் இவ்வமைப்பு மூன்று சக்கர அமைப்பை விடக் குறைபாடுள்ளதாகவே இருக்கிறது. மேற்கூறிய இரு அமைப்புகளைத் தவிர இறக்கி விடும் பிற அமைப்புகளும் பெரும்பான்மையாகப் பயன்படுகின்றன. ஏனெனில் குறிப்பிட்ட வடிவமைப் பால்ஏற்படும் சிக்கல்கள் புதுவகை இறங்கும் ஆமைப்பு களுக்கு வழிகோலுகின்றன. எடுத்துக்காட்டாச போயிங் B-47 இல் பயன்படும் இரு சக்கர இறங்கும் அமைப்பைக் கூறலாம். இதில் பக்கவாட்டு நிலைத் தன்மைக்காக வெளி விசை வில்கள் பயன்படுகின்றன. இவ்வகை இறங்கும் அமைப்பு வழக்கத்திலுள்ள அமைப்புகளைவிட மிகுதியான எடையுடன் இருந் தாலும் ஒட்டுமொத்தச் செயல்திறனில் பிற அமைப்பு களை விடச் சிறந்ததாகவே விளங்குகிறது. X-2, X-15 போன்ற ஆய்வு வானூர்திகள் சக்கரங்களுக்கு மாற்றாக விமானச் சறுக்குச் சக்கரங்களைப் (skids } பயன்படுத்துகின்றன. ஏனெனில் இவ்லகை வானூர்தி களில் தரை சீர் செய்தல் (ground maneuvering) மிகுந்த சிறப்பு வாய்ந்ததில்லை. ஹெலிகாப்டர்கள், VTOL வானூர்திகள் ஆகியவற்றிற்குத் தரை சீர் செய்தல் தேவையில்லை. ஆகையால் இவற்றில் வழக் கிலில்லாத அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. க வடிவமைப்பு. எவ்வகை இறங்கும் அமைப்பாக இருந்தாலும் அதில் முதன்மையாக வேலை செய்யும் பகுதி அதிர்ச்சிச் சட்டம் ஆகும். இது வானூர்தி தரையை நோக்கி அழுந்தும்போது விசையை அளித்து அதன் மூலம் பறக்கும் பாதையைத் தரைக்குக் குறுக்கே செல்லும் நிலையிலிருந்து தரைக்கு இணை கோடான நிலைக்கு மாற்றுகிறது. எண்ணெய்- காற்று வகை அதிர்ச்சிச் சட்டமே மிகவும் செயல் திறன் உடையதாகும். இவ்வகைச் சட்டம் ஒரு துளை வாய் வழியாக எண்ணெயைச் செலுத்துவதன் மூலம் விசையை உருவாக்கி அதன் வழியே இயங்குகிறது. இறக்கும் அமைப்பின் சக்கரம் முதலில் தரையைத் தொடும்போது, டயரானது இறங்கும் அமைப்பின் நிலைப்படுத்திய பருமனை (டயர், சக்கரம் நிறுத்தும் அமைப்பு, எண்ணெயின் உந்து) நிறுத்த, இடமாறுகிறது. வானூர்தி தொடர்ந்து கீழ் அழுத்தும் போது அதிர்ச்சிச் சட்டத்திலுள்ள உந்து துளைவாய் வழியாக எண்ணெயைச் செலுத்துவதால் ஒரு விசை உண்டாகிறது. அவ்விசை அவ்விசை விமானத்தின் பறக்கும் பாதையை மாற்றுகிறது. அதிர்ச்சிச் சட்ட வீச்சின்போது, ஒரு சிறந்த விசை - நேர்தொடர்பைப் பெறுவதற்காக நுண் துளைவாயின் அளவை மாற்றும் ஓர் அளவீடு பயன்படுத்தப்படுகிறது. குறுக்குச் சட்டத்தில் உள்ள காற்றழுத்தம் அமுக்கத்திற்குப் பிறகு பல்சக்கரத்தை ஊச 8.