470 உயிர் ஒளி உமிழ்வு
470 உயிர் ஒளி உமிழ்வு கடல் சாமந்தி கின்றன. ஹிட்ரோடியூத்திஸின் போர்வைக் குழியில் ஒற்றை ஒளி உமிழ் உறுப்பும், வாட்சீனியாவின் உடலின் மேல் ஒளி உமிழ் செல்களைக் கொண்ட ஒரு சிக்கலான உறுப்பும் உள்ளன. ஆழ்கடல் தலைக் காலியான தியூமடோலாம்பஸில் உடல் முழுதும் பரவியுள்ள இணையான ஒளி உமிழ் உறுப்புகள் போர்வைக் குழியில் திறக்கின்றன. ஆழ்கடல் தலைக் காலியான லைக்கோடியூதிஸில் நான்கு வித ஒளி உமிழ் உறுப்புக்கள் நான்கு வெவ்வேறு நிற ஒளிகளை உண்டாக்குகின்றன. முதுகுநாணிகளில், பெலனோக்ளாசஸ் ஒளி உமிழும் கோழைப்பொருளை உண்டாக்குகிறது. கூட்டுயிரியாக வாழும் டியூனிகேட்டான பைரோ சோமாவில் உள்ள இணைவாழ்திறன் கொண்ட பாக்ட்டீரியாக்கள் ஒளி உமிழ்கின்றன. ஸ்பைனாக்ஸ் நைகர் என்னும் குறுத்தெலும்பு மீனின் உடலின் மேலும், எலும்புமீன்களாகிய ஃபோட்டோப்ளப ரான் அனாமலாப்ஸ் மோனேசென்ட்ரஸ் ஆகிய வற்றின் தாடைகளிலும் உள்ள உறுப்புகளில் ஒளி உமிழும் பாக்ட்டீரியாக்கள் ஒளி உமிழ்கின்றன, அவை இணைவாழ் திறனுடைய பாக்ட்டீரியாக்கள் ஆகும். மேலகோசெபாலஸ் என்னும் மீனின் வயிற்றுப் பக்கத்தில் உள்ள பையில் ஒளி உமிழும் பாக்ட்டீரியாக் கள் இணைவாழ்வு பெற்றுள்ளன. ஸ்டோமியாஸ், ஆஸ்ட்ரோநெஸ்தஸ் ஆகிய மீன்களில் வில்லைகளை யும் நிறமிக் கிண்ணங்களையும் பெற்றுள்ள நன்கு வளர்ந்த கண் போன்ற ஒளி உமிழ் உறுப்புகள் உள்ளன. உண்டாக்கப்படும் ஒளியின் இயற்பியல் பண்புகள். ஒளி உமிழ் உறுப்புகளால் உண்டாக்கப்படும் ஒளி யின் அளவுகோல் மெழுகு விளக்கொளி எனப்படும். ஃபோடினஸ் என்னும் அனல் ஈயின் ஒளி 0.0025-0.02 மெழுகு விளக்கொளியாகும். குகுஜோ வண்டு இறால்களில் காணப்படும் ஒளியுமிழும் உறுப்பு 0-0006-0.006 மெழுகு விளக்கொளியுள்ள ஒளியை உமிழ்கிறது. ஒளியின் தீவிரத் தன்மை அல்லது பள பளப்பினை லேம்பர்ட்டு மில்லிலேம்பர்ட்டு ஆகிய அளவுகோலால் குறிக்கின்றனர். பெரும்பாலான விலங்குகளில் ஒளி உமிழ் உறுப்புகளின் புறப்பரப் பின் பளபளப்பு 0.3-0.45 மில்லி லேம்பர்ட் வரை இருக்கும் ஒரு தொடர்ச்சியான ஒளிவரிப்பட்டையாக (spectrum) பரவும் எல்லையை அல்லது அவை நீளத்தை மில்லிமைக்ரான் என்னும் அளவுகோலால் குறிக்கின்றனர். பல்வேறு முதுகெலும்பற்றவற்றில் இந்த அலைநீளம் 415 மில்லிமைக்ரான் முதல் 670 மில்லிமைக்ரான் வரை உள்ளது. விலங்குகளின் ஒளி குளிர்ச்சியான தென்றும் ஏறத்தாழ நூறு விழுக்காடு செயல் திறனுடையதென்றும் கண்டறியப்பட் டுள்ளன. உயிர்ஒளி உமிழ்தலால் உண்டாக்கப்படும் ஒளியின் நிறம் குறிப்பிடத்தக்க அளவில் நீலநிறம் முதல் சிவப்பு நிறம் வரை பலநிலைகளில் உள்ளது. விலங்கினத் தொகுதிகளில் தாழ்நிலையானவை நீலம், மஞ்சள் ஆகிய நிறமுள்ள ஒளியை உண்டாக்கு கின்றன. கணுக்காலிகள், முள்தோலிகள், முதுகு நாணுள்ளவை ஆகியவை பச்சை, சிவப்பு, வெள்ளை ஒளியை உண்டாக்குகின்றன. பிக்சோத்ரிக்ஸ் என்னும் உயிரியின் தலையில் உள்ள ஒளி உமிழ் உறுப்புகள் சிவப்பு ஒளியையும், உடலின் பக்கங் களில் உள்ள ஒளி உமிழ் உறுப்புகள் பச்சை ஒளியை யும் உமிழ்ந்து கொண்டு நகர்ந்து செல்கையில் ஒரு புகைவண்டி அசைதல் போல் தோன்றுவதால் அப் புழு ரயில்வே புழு என்றழைக்கப்படுகிறது.