உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 உயிர்ப்‌ பாறை அடுக்கியல்‌

478 உயிர்ப் பாறை அடுக்கியல் அவற்றின் மூலம் கிடைக்கும் புதை படிவங்களைக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட சில அமைவுகளின் வயதை எளிதில் கண்டு கொள்ள முடிகிறது. ஒரு காலத்தின் புதை படிவங்கள் ஒரே மாதிரி யாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் நிலவிய கால நிலை, படிவுத் தன்மை இவற்றைப் பொறுத்துப் புதை படிவங் களின் பண்புகள் மாறக் கூடும். கடற்கரைச் சுற்றுப் புறச் சூழலில் காலநிலை, படிவுநிலை ஆகியவற்றில் ஒரே நிலை காணப்படுவதால் கடல் வாழ் புதை படிவுகளில் மாற்றம் தென்படுவதில்லை. வேறுபட்ட இரு புதை படிவ உயிரிகளை ஒப்பிடும்போது கால நிலை, படிவ நிலை, பாறையின் வேதியியல் சேர்க்கை நிலை ஆகியவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும். உயிர் அடுக்கியலில் படிமலர்ச்சி மாறுபாடு களைப் படிவுப் பாறைகளிலுள்ள புதை படிவங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. புதை படிவங் களைக் கொண்டு பாறையின் வயது, தொல் தட்ப வெப்ப நிலைகள், தொல் புவியியல், உயிர்ப் படி மலர்ச்சி முதலியவற்றைக் குறிப்பிட்ட அளவு வரை அறிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிப் பகுதிகளிலுள்ள பாறை களில் கடல் வாழ் உயிரினங்களின் புதை படிவங்கள் செறிந்திருப்பதால் அப்பகுதி தொல் வரலாற்றின் கடற்பகுதியாக இருந்திருக்கக்கூடும். பவளப்பாறை கள் உள்ள இடம் முன்பு வெப்பக் கடற் பகுதியாக இருந்திருக்க வேண்டும். புதை படிவங்களைக் கொண்டு விலங்குகளுக்குப் பின்னர் சிறகு முளைத்துப் பறக்கும் தன்மை வாய்ந்த ஆர்க்கியாப் டெரிக்ஸ் என்னும் ஜுராசிக் காலப் பறவை படிவளர்ச்சியுற்றுள்ள நிலையை அதன் பற் களைக்கொண்டும், வாலின் சிறகு அமைப்பைக் கொண்டும், சிறகுகளில் கைகள் போல் விரல்கள் காணப்படுவதைக்கொண்டும் அறியலாம். மேலும் முடி அடர்ந்த யானைகள் துருவப் பகுதியில் இருந் தன என்றும், குதிரைகள் மிகக் குறைந்த அளவில் இருந்தன என்றும், நான்கு தந்தங்களைக் கொண்ட யானைகளும் இருந்தன என்றும் உயிரினங்களின் படிவளர்ச்சிப் புதை படிவங்களைக் கொண்டு தெளி வாக அறிய முடிகிறது. உயிர் அடுக்கியல், புதை படிவங்களின் இடத் தொடர்புடைய பரவுதல்களையும் புதை படிவப் பாறைகளையும் பற்றிய தொடர்பு கொண்டது. கரி (carbon) படிவளர்ச்சி, தொல்லுயிரிகளின் படி வளர்ச்சி இவற்றைக் கருத்திற் கொண்டு உயிரிகள் வளர்ச்சி, வழிமுறைவிதி, உயிர் அடுக்கியலின் தொடக்கநிலையில் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிப்படி, உயிரிகள் புவி அடுக்கியல் காலத் திற்கேற்ப ஒன்றையொன்று ஒழுங்கான தொடர்ச்சி யைப் பின்பற்ற வேண்டும் என வரையறுக்கப்பட் டுள்ளது. நில அடுக்கியலில் உயிர் அடுக்கியல் பிரிவு முக்கிய பங்கு பெறுகிறது. புதை படிவங்களைக் கொண்டு ஓரளவு நில அடுக்கியல் நிலைச் சீர்படுத்த இயலும். எடுத்துக்காட்டாக, தொடர்பு இல்லாத அமைவுகளைச் சில சமயங்களில் காணப்படும் சிறு விலங்குகள் உண்டாக்கும் நில வளை நில வளை மூலம் ஒப் பிட்டுப் பார்க்க முடிகிறது. சோட்ஸ் என்பவர் சைலூரியன் பாறை (படிவுக்கு குறுக்காக வெட்டப் பட்ட) மூலம் இக்கருத்தை விளக்குகிறார் (படம் 1). இப்பாறை மூன்று வகையான வளைகளைக் கொண் டுள்ளது. படிவுத் தன்மை தொடர்ச்சியாக இருப்பின், வளை தோண்டும் நிகழ்ச்சியும் ஏற்றாற்போல் அமைந்திருக்கும். படத்தின்படி நான்கு பாறை அடுக் குகள் உள்ளன. இப்பாறை அடுக்குகளை நோக்கும் போது, படிவுகள் ஒன்றன் மேல் ஒன்றாகத் திடீ ரென்று ஏற்பட்டுள்ளன என்பதை வளைவுகளின் அமைப்பைக் கொண்டு அறிய முடிகிறது. இதை அமைந் உறுதிப்படுத்துவது போல் அடுக்கு 'ஆ' துள்ளது (காண்க படம் 1). இதைப் போன்று வளைவுகளின் வகை (மூன்று வகைகள்) 1 முதல் IV அடுக்கு (நாள்கு அடுக்குகள்) படம் 1. நோவா ஸ்கோடியாவில் காணப்படும் சைலூரியன் அமைவுகளின் பாதுகாக்கப்பட்ட சிறு விலங்கு வளைவுகள். AI II III