உயிர்ப் பிறக்கம் 483
தூரம் (அடிகளில்), 'அ' அமைவில் புதைபடிவங்கள் 12 T 0 தூரம் (அடிகளில்) 2 10 8 அமைவில் புதை படிவங்கள் படம் 4. திடீரென்று படிவுத்தன்மை மாறுபடும்போது இரண்டு அமைவுகளுக்குப் பொதுவான ஒப்புமை கோடு (நாய்க் கால் அமைப்பில்) (dog-leg) அமைப்பில் (படம் 4) மாறுகிறது என ஷ தம் ஆராய்ச்சியில் குறிப்பிடுகின்றார். ஒப்புமைக் கோட்டைக் கொண்டு மற்ற உள் அமைவுகளை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். முழுமையான அதிகளவு புதைபடிவங்களைக் கொண்ட ஒப்புமைக் கோட்டை அடிப்படையாகக் கொண்டு எஞ்சியுள்ள அமைவு களை ஒப்பிட்டுப் பார்க்க இயலும். இவ்வாறு பெறப்பட்ட அடிப்படை ஒப்புமைக் கோட்டையும் பிறஅமைவுகளின் ஒப்புமைக் கோட்டையும் சேர்த்துப் பொதுவான புதை படிவ ஒப்பீட்டு (composite standard fossil correlation ஒரு குறிப்பிட்ட நில பகுதிக்கு ஏற்படுத்தி ஒப்பிட்டுப் பார்க்க முடியும். நிரலை tayle) காலமும் காலப்பாறை அலகுகளும், தொடக்க காலப் புவிப்பொறியியலில் புதை படிவங்களைக் கொண்டு பெரிய நிலப்பரப்பை நில அடுக்கியல் பிரிவுகளாகப் பிரிப்பது எளிமையாக இருந்தது. முற்காலத்தில் புவியமைப்பியல் அறிஞர்கள் முக்கிய மான பொதுவான புதை படிவங்களைக் கொண்டே நில அடுக்கியலில் தொகுதி வரம்புகளையும் ஊழி வரம்புகளையும் முடிவு செய்தனர். அவற்றில் வரம்புகள் சரியானவை என்று பல்நோக்கு அடிப் அ.க. 5-31அ பவ உயிர்ப் பிறக்கம் 483 படையில் நில அடுக்கியல் ஆய்வு செய்யும்போது தோன்றுகிறது எனப் பெரும்பாலான அறிஞர்கள் ஒத்துக் கொள்கின்றனர். சரியான முறையில் ஒப்பிட்டுப் பார்க்கப் பாறைத் தொகுதிகளை வரிசை களாகவும், வரிசைகளைக் காலநிலைகளாகவும், காலநிலைகளைப் பகுதி அல்லது வளாகம் எனவும் பிரிக்கலாம். காலத்தையும் அவற்றில் காணப்படும் புதை படிவங்களையும் கொண்டு நில அடுக்கியல் நிரல் தயாரிக்கப்படுகின்றது. சுட்டுப் புதை படிவங் களின் பனி மிகவும் பாராட்டத்தக்க முறையில் அமைகிறது. காலவியல் நில அடுக்கியல் அலகுகளும் உயிர் அடுக்கியல் அலகைக் கொண்டு விளக்கப்படு கின்றன. ஒப்புமை முறையில் திட்பநுட்பம், புதை படிவங் களை அடிப்படையாகக் கொண்டு காலநிலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஏறக்குறைய நிறைவளிக் கும் வகையில் நில அடுக்கியல் நிரல் அமைந்திருக் கின்றது. குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் உயி ரினங்களின் ஒத்த தன்மையால் பல தவறுகள் தவிர்க் கப்படுகின்றன. கண்டங்களுக்கு இடையிலான ஒப்பீடுகள், சுட்டுப் புதை படிவங்களைக் கொண்டே ஆராயப்படுகின்றன. இவ்விதச் சுட்டுப் புதை வடிவங் கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வேறு உறுப்பாக வும் இருக்கலாம். சிம்சன் என்ற அறிஞரின் கருத்துப் படி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உயிரி ஏறத்தாழ 0.5-5 மில்லியன் ஆண்டு வரை வாழக்கூடும். எனவே ஒப்புமை திட்ப நுட்பத்தில் உயிரியின் குடும்ப வய தைக் கருத்திற்கொள்ளும்போது தவறுகள் குறைகின் றன. கண்டங்களுக்கிடையே ஒப்புமை பார்க்கும் போது, ஒரே குடும்பத்தைச் சார்ந்த பல உயிரிகள் படிப்படியாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஒவ்வொன் றும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். புதை படிவங்களைக் கதிரியக்க முறையில் வய தைக் கணக்கிட்டு அவை கிடைக்கும் அமைவுகளை ஒப்பிட்டுத் தயாரிக்கப்படும் நில அடுக்கியல் நிரலைப் பல அறிஞர்கள் வரவேற்றுள்ளனர். இதில் திட்பமும் நுட்பமும் சரியான விதத்தில் அமைந்திருக்கின்றன. உயிர் அடுக்கியல் அறிஞர்கள் மேலும் சரியான ஒப் பீட்டு முறையைப் புதை படிவங்களைக் கொண்டு ஆராய முயலுகின்றனர். ஜே.லவ்சன் உயிர்ப் பிறக்கம் வாழ்வின் தொடக்கம் பற்றிய ஆய்வுகளும் கருத் துகளும் நீண்ட காலமாகவே அறிவியல் வல்லுநர் களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன. முதன் முதலில் உயிரினம் எப்பொழுது, எங்கு, எவ்வாறு தோன்றியது