உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இறக்கை அவரை

34 இறக்கை அவரை இறக்கை அவரை கிலோ விதை தேவைப்படும். ஹெக்டேருக்குத் தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து முறையே 40,100, 40 கிலோ உரமாக இடவேண்டும். விதைத்து எழுபது நாள்களில் இருந்து சில ஆண்டுகள் வரை காய்களை அறுவடை செய்துகொண்டே இருக்கலாம். விதைத்த அறுபது நாள்களில் வேர்கள் மிகுதியாகி, கிழங்குகள் உண்டாகும். இறக்கை அவரையில் இளம் இலைகள், இளம் பூக்கள், காய்கள் யாவும் உணவாகப் பயன்படு கின்றன. ஆனால் இவை நன்றாகச் சமைத்த பின்னரே உண்ணத் தகுதியுடையன. முற்றாத இளம் விதை களைக் கொண்டு சூப், கறி முதலியன தயாரிக்கப் படுகின்றன. முற்றிய விதைகளை நிலக்கடலை, சோயா மொச்சையைப் போல வறுத்து உண் கின்றனர். சில வகைக் கிழங்குகள். பர்மாவில் உருளைக் கிழங்கு போல் உண்ணப்படுகின்றன. இளங்காய்களில் 1.9 - 3.0 விழுக்காடு புரதச் சத்து உள்ளது. இளம் இலைகளில் ஐந்து முதல் பதினைந்து விழுக்காடு புரதமும், பூக்களில் ஐந்து விழுக்காடு புரதமும் உள்ளன. விதையில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச்சத்து. பாஸ்பரஸ் முதலியவை இருக்கின்றன. முற்றிய விதையில் முப்பத்துநான்கு விழுக்காடு புரதச்சத்தும் பதினெட்டு விழுக்காடு எண்ணெய்ச்சத்தும் உள்ளன. அதன் மொத்த அமினோ அமிலச்சத்தில் 8 விழுக்காடு லைசினும், அறுபது விழுக்காடு முழுமையடையாத கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இதன் கிழங்குகளில் இருபது விழுக்காடு புரதச்சத்து உள்ளது. இறக்கை அவரை பிரஞ்சு பீன்ஸ் போன்ற சுவை உடையது. அது அரிசிச்சோறு, சப்பாத்தி இவற்றுடன் சேர்த்து விரும்பி உண்ணக்கூடியது. மேலும் அதைச் சாம்பார், பொரியல் முதலியவை