உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 உயிர்‌ வளியேற்ற குளம்‌

520 உயிர் வளியேற்ற குளம் எவ்வாறு உடல்தேவைகளுக்கும், உள்ளத் தேவைகளுக்கும் ஏற்ப ஆளுமையைப் பண்படுத்திக் கொள்ளும். இத் தேவைகள் நிறைவடைகின்றனவோ. அவற்றிற்கேற்றவாறு மனிதனின் குணவியல்புகளும் வேறுபடும். வாழ்க்கை விரிய விரிய மகிழ்ச்சியும், கவலையும், நிறையும் வெறுப்பும், முரண்பாடுகளும் மனிதரிடம் தோன்றுகின்றன. இவற்றிலிருந்து தான வத்தைச் சிதையாமல் காப்பாற்ற உள்ளம் பலவேறு முயற்சிகளை மேற்கொள்ளுகிறது. இம்முயற்சிகளில் சில தெரிந்து சிந்தித்தவையாகவும், வேறு பிற உள் மனதின் வெளிப்பாடுகளாகவும் அமையும். எனவே மனித மனத்தை விழிப்புறு மனமென்றும் (conscious mind) விழிப்பறு மனமென்றும் (unconscious mind) பகுக்கலாம். தானவமும், தனித்தன்மையும். தானவம் என்பது தனிப்பட்ட ஒன்றன்று; அசைக்க முடியாததுமன்று. தொடக்கத்தில் குழந்தையின் அகப் பண்புகளால் பெரிதும் அளவிடப்படும் தானவம், பின்னர் தனக்கு நிகழும் பட்டறிவால் சீரமைக்கப்படுகிறது. கேட்டா கண்ட, உரைத்த, ஆண்ட, பாராட்டிய, நொந்த வற்றை நினைவு கூர்ந்து, தொடர்ந்து வரும் பட்ட றிவையும் சோதனைகளையும் சீர்தூக்கிப் பார்த்து அவற்றிற்குத் தக்கவாறு தன் எதிர்வினைகளை அமைத்துக் கொள்கிறது. முதுமையில் உண்டாகும் பட்டறிவைவிட இளமையில் ஏற்படும் பட்டறிவே தானவத்தைப் பெரிதும் பாதிக்கின்றது. ஆளுமை தானவமும் நடத்தையும். தானவம், இவற்றின் வெளிபாடுகளாக அமைவதே நடத்தை யாகும். உயிரியல் தேவைகளான உணவு, நீர், வளி, தசை இயக்கம், புலனுணுணர்வு, ஓய்வு போன்றவை யும், உள்ளத் தேவைகளான அன்பு, ஆதரவு,மதிப்பு, மரியாதை, சமூக நிலை, பாதுகாப்பு, செயலாக்க உரிமை போன்றவையும், பாலுணர்வுத் தேவைகள். உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவையும் ஒவ்வொ ருவரின் நடத்தைக்கும், தன்மைகளுக்கும் தூண்டு கோல்களாக அமைகின்றன. இத்தேவைகள் யாவும் எப்போதும் நிறைவுபெறுவதில்லை. சார்ந்து வாழும் சமுதாயத்தில், ஒவ்வொரு மனிதனும் ஏமாற்றங்களை நாகரிகமாகத் தாங்கிக் கொள்ளவேண்டும். இவற்றுக் கிடையில் முரண்பாடுகள் தோன்றுமானால் ஏமாற்றங்கள் அதிகமாகி, வெறுப்பு மனப்பான்மை யும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படத் தொடங் கும். இவை மனத்தில் மிகு உளைச்சலை உண்டு பண்ணும். சீரமைப்பு முறைமை. இத்தகு, உளைச்சலினின்று மனிதர்கள் விடுபடும் விதத்தை மனவியக்கவியல் விளக்கும். இம் முயற்சிகளுக்குச் சீரமைப்பு முறைமை கள் (adjustive mechanisms) எனப் பெயர். கடுஞ்சினம், போர்க்குணம், தப்பியோடுதல், தணிவு, கற்பனை, தன்னிரக்கம், தான்தோன்றித்தனம் என வெவ்வேறு விதமாக இவை அமையலாம். பொதுவாகவே அனை வருமே எப்போதாவது இவற்றில் ஏதேனும் ஓர் உணர்வைக் கொண்டுள்ளனர். சீரமைப்பு முறைமை கள் சாதாரணமானவையாக இருக்கும் வரையில் அவை அந்தந்த மனிதரின் நடத்தையையும், பண் பாட்டையும் சமன் செய்வனவாக அமையும். அதே சீரமைப்பு முறைகள் இயல்நிலை எல்லை இவற்றைக் கடந்தவையாகவும் இருப்பின் அவையே ஒருவனை மனநோயாளியாக்குகின்றன. அசைவு ஆய்வியல். உயிரியக்கவியல் (biomecha- nics) உயிரியக்கச்சீரியலின் (biodynamics) ஒரு கிளைத் துறையே அசைவு ஆய்வியல் (kincoiology) ஆகும். மனித உடலசைவுகளில், இயக்கவியல் கோட்பாடு களைப் பொருத்தி ஒப்பிடுவதே அசைவு ஆய்வியலின் முக்கிய பணியாகும். அண்மைக்காலக் கருத்துப்படி அசைவு ஆய்வியல். என்பியக்கவுகளியல் (osteokinematics) என்றும், மூட் டியக்கவுகளியல் (arthrokinematics) என்றும் இரு பகுப்புகளாக ஆகின்றது. எலும்புகளின் அசைவுகளைப் பற்றிய என்பியக் கவுகளியலில் ஒவ்வொரு மனிதயெலும்பிற்கும், அதன் அமைப்பிற்கும், வடிவிற்கும் ஏற்ப இயக்க அச்சு (mechanical axis) உள்ளது. இயக்க அச்சு நிலையாக விருக்க, அதனைச் சுற்றுவதாக எலும்பசைவு அமையு மானால் அதைச் சுழல் என்றும், மற்ற வகையான அசைவை ஊசல் என்றும் வழங்குவர். எலும்பு அசைவுகளையும், சுற்று, திருப்பு, டக்கு, நீட்டம், சுற்றலைவு போன்ற பலவகை களாக்கி அவற்றின் இயக்கங்களையும், இயக்கம் சார் மாறுபாடுகளையும் மதிப்பிடலாம். களின் எல்லா மட மூட்டுகளின் அசைவுகள் பற்றிய செய்திகளைக் கொடுப்பது மூட்டியக்கவுகளியல். மூட்டுகள் இரண்டு அல்லது மேற்பட்ட எலும்புகளின் இணை பரப்புகள் ஒன்று சேருவதன் மூலம் உண்டாகின்றன. மூட்டு களில் பல வகையுண்டு. எவ்வகையாகவிருப்பினும், மூட்டுகளே விலங்கினங்களையும், மனிதனையும் நகரக் கூடியனவாக ஓடக் கூடியனவாக பல செயல் களைச் செய்யக் கூடியனவாக இயக்கப் பயன்படு கின்றன. சுழல்உருளல், வழுக்கல் என்னும் அசை வுகள் பெரும்பான்மையான மூட்டியக்கங்களில் வெவ் வேறு நிலைகளில் நிகழ்கின்றன. மூட்டைச் சுற்றி யுள்ள பந்தனங்கள், தசைகள் ஆகிய உறுப்புகள் தக்க வகையில் மூட்டசைவுகளை வேறுபடுத்துகின்றன. சுதா சேஷய்யன் உயிர் வளியேற்ற குளம் இது மையத்திலோ, ஒரு முனையிலோ கழிவுநீரை உள்வாங்கித் தூய்மை செய்யப்பட்ட நீரை மற்றொரு