562 உரம் (வேதி)
562 உரம் (வேதி) இவ்வுரத்தைப் போடும் பொழுது தீங்கு ஏற்படுவ தில்லை. மெதுவாகக் கரையும் தன்மையால் செடி களுக்கு நீண்டகாலப் பயன் கிடைக்கிறது. நுண்ணூட்டக உரம். துத்தநாகம், தாமிரம், இரும்பு மங்கனீஸ், போரான், மாலிப்டினம் ஆகியவை முக்கியமான நுண்ணூட்டங்களாகும். கலப்பு உரம். இது இரண்டு அல்லது அதற்கு இரும்புக்கசடு (basic slag). இது இரும்பு உலை களிலிருந்து மேற்பட்ட பேருட்டங்களைக் கொண்ட கழிவுப் பொருளாக மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றது. இவ்வுரத்தில் சுமார் 8 விழுக்காடு மணிச்சத்து உள்ளது. அமிலத்தன்மை உடைய நிலங்களுக்கு இது மிகச் சிறந்த உரமாகும். மணிச்சத்தைத் தவிர இவ்வுரத்தில் சுண்ணாம்புச் சத்தும். பல நுண்ணூட்டங்களும் உள்ளன. ஆதலால் இது விலை குறைந்த ஒரு நல்ல உரமாகும். பயன் பாறை பாஸ்ஃபேட். நன்கு தூள் செய்யப்பட்ட பாறை பாஸ்ஃபேட் உரத்தை உரமாகப் படுத்தலாம். மணற்பாங்கான நிலங்களுக்குத் தொழு உரம், தழை உரம் ஆகியவற்றுடன் கலந்து போடும் பொழுது இதனுடைய கிடக்கை அதிகரிக்கின்றது. பாறை பாஸ்ஃபேட் உரத்துடன் கால்சியம் கலந்த உரங்களைப் போடும் பொழுது பாஸ்ஃபேட், பயிர் களுக்குக் கிடைக்காத வண்ணம் மாற்ற முடிகின்றது. ஆனால் அம்மோனியம் பாஸ்ஃபரஸ் போன்ற உப்பு களுடன் சேர்த்து இடும் போது இதன் கிடக்கை அதிகரிக்கிறது. மேய்ச்சல் நிலங்களுக்கும், நீண்ட காலத் தீவனப் பயிர்களுக்கும் இவ்வுரம் மிகவும் ஏற்றதாகும். இதில் 30 - 35 விழுக்காடு மணிச்சத்தும் மற்ற பயிர் ஊட்டங்களும் உள்ளன. குறிப்பாக அமிலத்தன்மை உடைய நிலங்கள், செம்புறை மண் வகை, நெல் பயிரிடும் நிலங்கள், நீண்ட காலப் பயிரிடும் நிலங்கள் ஆகியவற்றிற்கு இது சிறந்த உர மாகும். எலும்புத் தூள். இரும்புக் கழிவு கசடு பாறை பாஸ்ஃபேட் எலும்புத் தூள் போன்றவற்றில் அமிலத் தில் கரையும் தன்மை கொண்ட பாஸ்ஃபேட் கிடக்கை அதிகமாக இருக்கின்றது. அதனால் இவ் வகை உரங்கள் அமிலத்தன்மை வாய்ந்த நிலங்களுக் கும், நீண்டகாலப் பயிர் வகைகளுக்கும் ஏற்றவை யாகும். சாம்பல் சத்து உரம் பொட்டாசியம் குளோரைடு. இது மியூரியேட் உரம் என்று குறிப்பிடப்படுகிறது, படிக வடிவமுடையது; நீரில் கரையும் தன்மை கொண்டது. இந்த உரம் பொதுவாக எல்லா மண் வகைகளுக்கும் பெரும் பாலான பயிர்களுக்கும் ஏற்றது. இந்த உரத்தில் குளோரின் என்ற தனிமம் உள்ளது. இது சில பயிர் களின் தரத்தைப் பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக உருளைக்கிழங்கு, புகையிலை போன்ற பயிர்களுக்கு குளோரைடு அவ்வளவு ஏற்றதன்று. ஆகவே இத் தகைய பயிர்களுக்கு மியூரியேட்டுக்குப் பதிலாக பொட்டாசியம் சல்ஃபேட் இடுவது சிறந்தது. உரமாகக் கிடைக்கின்றது. இவ்வுரங்களை வேதியியல் வினை புரியாத பேரூட்டக உரங்களை எடுத்துக் கலந்து தயாரிக்கின்றார்கள். இது தூளாகவோ குறுநொய் வடிவமுடையதாகவோ காணப்படும். தேவையானால் நுண்ணூட்டகங்களையும் இத்துடன் கலந்து கொள்ள லாம். உரம் (வேதி) டி.எஸ்.மாணிக்கம் இடம்பெறுதல் தாவ மண்ணில் ஊட்டச்சத்து ரங்களுக்கு இன்றியமையாத தேவையாகும். மீண்டும் மீண்டும் ஒரே நிலத்தில் அடிக்கடி பயிரிடுவதால் மண்ணின் ஊட்டச்சத்து வெகுவாகவும், விரைவாக வும் குறைகின்றது. இக்குறைவை ஈடுசெய்யும் பொருட்டே உரம் இடப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் வண்டல்மண், சுண்ணாம்புச் சத்து மிகுந்த களிமண், சாம்பல், சாணம், கிழிந்த கம்பளி, பறவைகளின் கழிவு, உலர்ந்த இரத்தம், விலங்குகளின் கொம்பு, குளம்பு ஆகியவை உரமாகப் பயன்பட்டன. மண்ணின் ஊட்டச்சத்தை உயர்த்தவல்ல உரங் களைப் பொதுவாக இயற்கை உரங்கள், செயற்கை உரங்கள் எனப் பிரிக்கலாம்.திண்ம, நீர்ம, கூழ்ம, வளிம நிலைகளில் பயன்படுத்தப்படும் இவற்றுள் மூன்றுவகை ஊட்டச்சத்துக்கள் தனித்தோ, கலவை யாகவோ இடம்பெறுகின்றன. அவை பேரூட்டச்சத்து (macronutrient), துணைநிலை ஊட்டச்சத்து (secon - dary nutrient ) நுண்ணூட்டச்சத்து எனப்படும் (micro- nutrient). நைட்ரஜன், ஃபாஸ்ஃபரஸ், பொட்டாசியம் மூன்றும் பேரூட்டச்சத்துகள்; கந்தகம். கால் சியம். மக்னீசியம் மூன்றும் துணையூட்டச் சத்துகள்; போரான், துத்தநாகம், மாங்கனீஸ். இரும்பு, தாமிரம், கோபால்ட், குளோரின் போன் றவை நுண்ணூட்டச்சத்துகள் ஆகும். தழைச்சத்து (N), மணிச்சத்து (P), சாம்பல்சத்து (K) ஆகிய மூன்றின் கலவை என்பிகே (NPK) உரம் எனப் படுகிறது. மொத்த உரத்தில் இவற்றின் எடைட விழுக் காடு (weight percent) என்பிகே குறியீட்டுமுறை யினால் குறிப்பிடப்படுகிறது. இயற்கை உரங்களுள் (எரு) சாணம், மட்கிய தழை ஆகியன முதன்மையானவை. இவை மண்ணில்