570 உரமிடும் எந்திரங்கள்
570 உரமிடும் எந்திரங்கள் வேர்ப் பரப்பிற்கு அருகில், அதாவது பயிர் வரிசையி லிருந்து 5 செ. மீ. தள்ளி 2-3 செ.மீ ஆழத்தில் இட வேண்டும். நெல் வயல்களில் பெரும்பாலும் தழை, மணி சாம்பல் ஆகிய மூன்று சத்துகளும் கடைசி உழவின்போது இடப்பட்டு, உழுது சமப்படுத்திய பின் பயிர் நடவு செய்யப்படுகிறது. தழை, மணி, சாம்பல் ஆகிய மூன்று ஆகிய மூன்று முக்கிய சத்துகளில் தழைச்சத்து அதிகமான பயனை அளிக்க வல்லது. ஆனால் இதன் நகரும் தன்மை, எளிதில் கரையும் தன்மை ஆகியவற்றால் இது மண்EL ருந்து விரைவில் இழக்கப்பட்டு விடுகிறது. எனவே, தழைச்சத்துப் பயனை மேம்படுத்துதல் மிகவும் அவசியமாகிறது. தழைச்சத்து வீணாவதைக் குறைக் கப் பல வழிகளில், உரங்களின் கரை திறனைக் குறைத்தல், மற்ற உரங்களை எளிதில் கரையும் வண்ணம் மாற்றுதல், சில மண்நுண்ணுயிரிகளின் செயலைத் தடுத்தல் ஆகியவை முக்கியமானவை. நம் நாட்டில் பயன்படுத்தப்படும் தழைச்சத்துரங்களில் யூரியா முக்கியமான ஒன்று. இதனைப் பெரிய வடிவக் குறுநொய்களாக மாற்றிப் (1 கிராம் அளவில்) பயன்படுத்தும்போது இதன் கரைதிறன் மிகவும் குறைகிறது, யூரியாவும் மெதுவாகக் கரையும், நீர் எளிதில் நுழைய விடாத பொருள்களான கந்தகம், அரக்கு, தார் போன்ற பொருள்களைக் கலந்து ஒரு பூச்சுப்போல் பூசி இடுவதால் உரத்தின் கரை திறன் குறைகிறது. மேலும் யூரியாவை நன்கு தூளாக்கப்பட்ட வேப்பம்புண்ணாக்கு அல்லது இலுப்பைப் புண்ணாக்குடன் 5:1 என்ற விழுக் காட்டில் கலந்து பயன்படுத்தும்போது, புண்ணாக்கி லுள்ள சிவ வேதிப் பொருள்கள் யூரியாவை எளிதில் கரைக்க உதவும் மண்ணிலுள்ள பாக்டீரி யாக்களின் செயலைத் தடுத்து, கரைதிறனைக் குறைத்து, சத்துகள் வீணாகாமல் காக்கின்றன. சில சமயங்களில், உரச்சத்துகளை இலைமேல் தெளிப்பதன் மூலம் அளிப்பது உடன் பயனளிப்ப தோடல்லாமல், சத்துகள் வீணாவதையும் தடுக்க உதவுகிறது. நுண்ணூட்டச் சத்துகளைத் தவிர, உரங்களில் யூரியா, டைஅம்மோனியம் பாஸ்ஃபேட் ஆகிய இரண்டும் இலைமேல் தெளிப்புக்கு மிகவும் ஏற்றவை. இலைமேல் தெளிப்பு மூலம் இவை சத்து களைப்பயிர்களுக்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் நேரங்களிலும், சத்துக் குறைபாட்டு அறிகுறிகள் தோன்றும் சமயங்களிலும் அளிக்க வல்லன. அண்மை ஆய்வு முடிவுகளின் படி பயிர்ச்சுழற் சிக்கு ஏற்ற ஒருங்கிணைத்த உர நிர்வாகத்திட்டம் வகுக்கப்பட்டு, அதன் மூலம் உரமிடுதலால் கணிச மான அளவு உரங்களை மிச்சப்படுத்தலாம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த முறையில் ஒரு தனிப் பயிரைக் கணக்கில் கொள்ளாது ஆண்டுக்குப் பல பயிர்கள் கொண்ட ஒரு பயிர்த்திட்டத்திற்கு ஏற்ற பய வகையில் உரத்தேவை முடிவு செய்யப்படுகிறது. தீவிரப் பயிர்ச் சுழற்சியில் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அவற்றில் ஒன்று தழைச்சத்தினை நன்கு பயன்படுத்த வல்லதாகவும், மற்றொன்று மணிச்சத்தினை அதிகம் நாடுவதாகவும், மற்ற சில பயிர்கள் வேர்முடிச்சுகள் மூலம் தழைச்சத்தை நிலைநிறுத்த வல்லனவாகவும் இருக்கலாம். இவற்றால் பின்வரும் பயிர்கள் ணைடய வழியுள்ளது. எனவே, இதைச் கருத்தில் கொண்டு ஏற்ற பயிர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிரிட்டால் உரச் சத்துகளை நல்ல முறையில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. உதாரணமாகப் பயறு வகைப் பயிர்கள் மணிச்சத்தினை அதிகம் நாடுகின் றன. அத்துடன் வேர் முடிச்சுகள் மூலம் தழைச்சத்தை நிலைநிறுத்துவதால் பின்வரும் பயிர்கள் பலனடை கின்றன. தானியப் பயிர்கள் தழைச்சத்தையும், கிழங்கு வகைப் பயிர்கள் சாம்பல் சத்தையும் அதிகம் நாடுகின்றன. எனவே, நிலத்தின் வளத்தினைப் பொறுத்தும், பயிரிடும் பயிரினைப் பொறுத்தும் ஓர் உரச்சத்தை ஒரு பயிருக்கு அளித்துவிட்டு, பின்வரும் மற்றொரு பயிருக்கு அச்சத்தை அளிக்காமல் விட்டு விடலாம். மேலும் எருக்கள் உயிர் உரங்கள் அசோலா நீலப்பச்சைப் பாசி போன்றவற்றையும் இட்டு உர மிடுதல் போன்ற ஒருங்கிணைந்த முறைகளைக் கை யாளுவதன் மூலம் உரச்செல்வினைப் பெரிதும் குறைக்கலாம். உரமிடும் எந்திரங்கள் சுப. பழனியப்பன் வரை வேளாண்மையில் ஒரு குறிப்பிட்ட காலம் எந்திரங்களின் தேவை குறைவாக இருந்தது. மக்கள் பெருக்கமும், மனிதனின் தேவைகளும் அதிகரிக்க அதிகரிக்க எந்திரங்களின் உற்பத்தியும் அவசியமான தாக ஆகிறது. குறிப்பாக உரமிடும் எந்திரங்கள் அண்மைக் காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்துச் செயல்களும் எந்திரமயமாக்கப்படும்போது உரமிடும் முறையும் எந்திரமயமாக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாத வாறு நடைபெறுகின்றது. ஆரம்ப காலங்களில் உரமிடுவது என்பது தொடர்ந்து கால்நடைகளை நிலத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு மாற்றி மாற்றிக் கட்டும் தரையாக இருந்தது. இதைக் கால்நடைப் பட்டிகள் என்பர். அதன்பின் கால்நடைச் சாணங்களையும், தழைகளையும் ஒரு பகுதியில் சேர்த்து, பின் நிலத் தில் தூவும் முறை வந்தது. நவீன வேதி உரங் களின் கண்டுபிடிப்பே எந்திரங்களின் அவசியத்தை வலியுறுத்தியது. இப்போது பல்வேறு வடிவங்களில்