உரமிடும் எந்திரங்கள் 573
1.2செ.மீ. பருமனும், 11செ.மீ×60 செ.மீ அளவுமுள்ள இரண்டு பலகைகள் 40 செ.மீ. இடைவெளி விடப் பட்டுப் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பலகை களுக்கு அடிப்புறத்தில் 'V' வடிவம் கொண்ட 5 செ.மீ. ஆழமுள்ள சிறிய வாய்க்கால் அமைக்கும் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. பலகைகளுக்கு நேர் மேலாக இரண்டு உரப்பெட்டிகள் உள்ளன. இந்தப் பெட்டிகளுக்கு உள்ளேயுள்ள உருளைகள் ஒரு சக்கரத்தின் மூலம் உருளும் சக்தியைப் பெறு கின்றன. கருவியை முன்னோக்கித் தள்ளும்போது உருளைகள் உரக்குறுநொய்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து ஒரு ரப்பர்க் குழாய் மூலமாகப் பலகைகளுக்கு அடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள 5 செ.மீ ஆழமுள்ள வாய்க்காலில் போடுகின்றது. பிறகு இந்த வாய்க்காலானது பலகைகளாலேயே மூடப்படுகிறது. இக்கருவியைக் கொண்டு 8 மணி நேரம் கொண்டட ஒரு நாளில் ஒருவர் சுமார் ஓர் ஏக்கர் பரப்பில் உரத் தினை இடலாம். ஆனால் அதே உரக்குறுநொய் களைக் கையால் ஊன்றிச் செல்வதற்கு ஓர் ஏக்கருக்கு நால்வர் தேவைப்படுகிறார்கள். கருவியின் எடை 8.5 கிலோ மட்டுமே; ஆகையால் ஒரு வரிசை முடிந் ததும் தூக்கிவைப்பது எளிது. இக்கருவியின் விலை யும் குறைவாகவே ஆகிறது. உரக்குறுநொய்களைக் கையால் ஊன்றுவதை விட, இக்கருவியைக் கொண்டு ஊன்றுவதால் 75விழுக் காடு ஆட்குறைவும், சுமார் 60 விழுக்காடு செலவுக் குறைவும் ஏற்படும். இணை கருவியாக உரமிடும் எந்திரம். பெரும்பான் மையான உரமிடும் எந்திரங்கள் மற்ற எந்திரங் களுடன் இணைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற எந்திரங்களுடன் இணைக்கப்படும்போது உர மிடும் எந்திரத்தின் விலை மிகவும் குறைக்கப்படு கின்றது. குறிப்பாக விதைக் கருவிகளுடனும், கலப்பை களுடனும் உரமிடும் உரமிடும் எந்திரம் இணைக்கப்படு கின்றது. அமைப்பு. கோவை விதைக்கருவியுடன் உரமிடும் கோவை விதைக்கருவியுடன் உரமிடும் அமைப்பும் சேர்த்தே இயக்கப்படுகின்றது. விதைகளைப் போடப் பயன்படுத்தப்படும் உருளைகளே உரத்திற்கும் பயன் படுத்தப்படுகின்றன. விதைபோடும் சட்டத்தை இயக்குவதைப்போலவே உரமிடும் அமைப்பும் சங்கிலி மூலம் இணைக்கப்பட்டு, ஆற்றல் கொடுக்கப்படு கிறது. இக்கருவியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மாடுகளைக் கொண்டு இழுக்கக்கூடியது. மற்றது டிராக்டருடன் பொருத்தி இயக்கப்படுவது. இதில் உள்ள உருளைகளை மாற்றுவதன் மூலம் இதை உரமிடும் எந்திரங்கள் 573 நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், கொண்டைக் கடலை ஆகிய விதைகளை ஒரே சமயத்தில் மூன்று வரிசையில் விதைக்கவும், அவற்றின் ஒரு பக்கத்தில் அல்லது இரண்டு பக்கத்தில் உரமிடவும் பயன்படுத்த லாம். மாடுகளைக் கொண்டு இயக்கப்படும் கருவி யால், புழுதி நன்றாக உழவு செய்யப்பட்ட நிலத்தில் ஒரு நாளில் 3 ஏக்கர் வரை விதைப்பு வேலையையும், உரமிடும் வேலையையும் சேர்த்தே செய்து முடிக் கலாம். சாதாரண கொரிக் கலப்பைகளுடனும் உர மிடும் அமைப்பு இணைக்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகின்றது. நீர்ம வளிம வடிவ உரங்களிடும் எந்திரம், நீர்ம வடிவத்திலும் வளிம வடிவத்திலும் இப்போது உரங் கள் தயாரிக்கப்படுகின்றன. அதிக அழுத்தம், குறைந்த அழுத்தம் மற்றும் அழுத்தமற்றதாகவும் உரங்கள் தயாரிக்கப்பட்டுப் பயனுக்கு வந்துள்ளன. இதில் அதிக அழுத்தமுடைய உரத்திற்குஅம்மோனியத்தைக் சான்றாகக் கூறலாம். நைட்ரஜன், பாஸ்ஃபேட். பொட்டாசியம் உரக்கலவைகளை அழுத்தமற்ற உரங் களுக்குச் சொல்லலாம். மிகப்பெரும்பான்மையான நீர்ம வடிவ உரங்கள் நிலத்திற்கு அடியில் இடப் படுகின்றன. ஒரு சில மட்டுமே பயிர்களின் மேல் தெளிக்கப்படுகின்றன. பயிர்களின் பயிர்ப் பாதுகாப்பிற்காகத் தெளிக்க விசைத் தெளிப்பான் களே பயன்படுத்தப்படுகின்றன. அம்மோனியா போன்ற அதிக அழுத்தமுள்ள உரங்களை இடத் தனி எந்திரங்கள் உள்ளன. மேல் அம்மோனியா அதிக அழுத்தத்தில் நீர்மமாக வைக்கப்படுகின்றது. ஆனால் அதைப் பயிர்களுக்கு இடும்போது வளிம வடிவத்தில் இடப்படுகின்றது. இது காரத்தன்மையுடைய நிறமற்ற, 82% நைட்ரஜன் கொண்ட உரமாகும். இதைப் பயன்படுத்தும் போது இத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு காற்றுக் கலக்கப் படுவது அவசியமெனக் கண்டறியப்பட்டுள்ளது. 80 முதல் 110 காலன் கொள்ளளவுள்ள தொட்டி களில் அடைத்து. அதை டிராக்டருடன் பொருத்தி நிலத்திற்கு எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். ஐந்து அல்லது ஏழு கொத்துகளை உடைய கொரிக் கலப்பையில் ஒவ்வொரு கலப்பையின் பின்புறத்திலும் ரப்பர் குழாய்கள் பொருத்தப்பட்டு, அவை அம் மோனியம் தொட்டியில், சீர்படுத்தி மூலம் இணைக் கப்பட்டுள்ளன. வளிமம் எல்லாக் கலப்பைகளுக்கும் சீராகச் செல்ல, வளிமச் சீர்படுத்தும் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இருந்தே எல்லாக் கலப்பைகளுக்கும் இணைப்புகள் கொடுக்கப்பட் டுள்ளன. இவ்வகை உரங்களைப் பயன்படுத்தும் போது முன்னெச்சரிக்கையும், தற்காப்பும் மிக அவசி யம். நடைமுறையில் இவை அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை. ப. வெங்கடாசலம்