உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்‌ வேகத்‌ தன்னியக்க நெசவு முறை 579

I உயர் வேகத் தன்னியக்க நெசவு முறை 579 படம் 4. துருத்துருள் இயக்கம் மின்துகளியல் முறையில் தண்டையும் வண்ண மாற்றலையும் கட்டுப்படுத்துதல் 3. தூக்குமூட்டு 1. மின் துகளியலால் கட்டுப்படுத்தப்படும் பகுதி எந்திரவியலால் கட்டுப்படுத்தப்படும் பகுதி நெம்பு கோல்களையும், வீச்சு நெம்புகோல்களையும் கொண்ட பிறழ் மைய அலகுகள் 4. தண்டை இயக்கும் ணைப்பு படுகிறது. அவை பாவு தகடு நேராகவும், குறிப் பிட்ட அகலம் கொண்டிருக்குமாறும் பார்த்துக் கொள்வது. பாவு நூலை ஒரு முறை எடுத்து உள் நுழைந்தவுடன் அழுத்தும் கட்டை (reed) ஊடை யைத் துணியின் முனையடக்கத்தில் (fell) வைத்து அடிக்கிறது. ஓடக்கட்டை நெசவு எந்திரங்களில் நெசவச்சு (sleys) நகரும் பலகையை(race board) நகர்த்துகிறது. ஓடக்கட்டையற்ற எந்திரங்களில் அழுத்தும் கட்டை ஊடை. நூவை உள் நுழைக்கும் பணியில் ஈடுபடு கின்றது. இம்முறையில் அடித்தல் தனியாக நடை பெறுகிறது. நவீன ஓடக்கட்டையற்ற எந்திரங்களில் முறுக்கத்தினால் விறைத்த, குறைந்த எடையுடைய உலோக நெசவச்சு அழுத்தும் கட்டையைத் தாங்கிச் செல்கின்றது. கீழ்க்காணும் படத்தில் இதைக் காண லாம். இது குறைந்த அதிர்வுடன் இயங்கி, மிக விரைந்து ஊடையை அடிக்குமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. ஊடையை உள் நுழைக்கும் செயல். திறந்த கூறையை (open shed) உருவாக்கியவுடன் ஊடை யைப் பாவு வழியாக ஓடக்கட்டை, வெளியே நீட் டிக் கொண்டிருக்கும் அமைப்பை, சுரிகை, காற்று செலுத்தல், நீர் செலுத்தல் ஆகியவற்றின் மூலம் தாங்கிச் செல்லவோ, இழுக்கவோ செய்யலாம். நூலிழைகள் ஒரு பக்கமுறையிலோ (unilaterally}, அ.க. 5-37அ உ படம் 5. அழுத்தும் கட்டையை இயக்கல் இருபக்க முறையிலோ (bilaterally) உள் நுழைக்கப் படுகின்றன. தறிகள் ஊடையை உள் நுழைக்கும் முறையைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. மின்துகளியல் ஊடை நிறுத்தும் இயக்கம் எந்திர வியல் ஊடை நிறுத்தும் இயக்கத்தை விட விரை வானது. ஓடக்கட்டையற்ற எந்திரங்களில் ஊடை பல் இடங்களில் கண்காணிக்கப்படுகிறது. ஏனெ னில், ஊடை அறுந்தவுடன் அல்லது அதன் தொடர் ஓட்டம் தடைப்படும்போது எந்திரத்தை உடனடி யாக நிறுத்த இது பயன்படுகிறது. ஊடை பிறழும் போது எந்திரத்தைத் தேவையற்று நிறுத்துவதைத் தவிர்க்க, தட்டுத் தாங்கி (magazine creels) பயன் படுகிறது. தாரை எந்திரங்களில் (jet machines) ஏற்கனவே அளக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நீளத்தையுடைய ஊடை, நுனிக்குழல் வழியாக அனுப்பப்படுகிறது. இவ்வூடை சரிப்படுத்தும் உருள் கலன் (adjustable drum) மூலமாகவோ மாற்றக் கூடிய அளவிடும் தட்டுகளாலோ அளக்கப்படுகிறது. பின்னர் அது உருள் கலன், சேமித்து வைக்கும் குழல் அல்லது அறை ஆகியவற்றில் நுழைப்புக்கு முன் சேமித்து வைக்கப்படுகிறது. உயர் வேக நெசவுகளில் நூல் கள் முன்னர் அளக்கப்படாவிட்டாலும் கூம்பிலிருந்து அவை ஒரே விரைவில் எடுத்துச் சேமிப்பு உருள் கலனில் உள்ள மூன்று எடுப்புகளில் வைக்கப்படுகின்றன. பின்னர் அலை செல்லப்படுகின்றன. ஊடை உள் நுழைக்கும் முறையை தறுவாய் (single phase), பல தறுவாய் என சேமித்து எடுத்துச் ஒற்றைத் இரண்டு