586 உராய்வு
586 உராய்வு இருக்கிறது (உ.கெ. 0.02 மதிப்பிற்கும் குறைவாகும்.) க்காரணம் கொண்டே மூட்டுப் பகுதிகள் எளிதில் தேய்வடைவதில்லை. மூட்டுப் பகுதிகளுக்கிடையே யுள்ள எண்ணெய்ப் பசை நீர்மம் வற்றும் போது தாங்க இயலா வலி ஏற்படுகிறது. இச்சிக்க லுக்கு முடக்குவாதம் அல்லது கீல்வாதம் எனப்பெயர். சிறு பந்து உருளைகளைக் கொண்டு இயங்கும் எந்திர அமைப்புகளில் ஏற்படும் சுழல் உ.கெ. 0.002-0.005 வரை இருக்கும். உராய்வுக்கோணம். உராய்வுக்கெழுவை மதிப்பிட உராய்வுக்கோணத்தை அளந்தறிதல் மற்றுமொரு முறையாகும். ஒரு தளத்தின் மீது வைக்கப்பட்டுள்ள பொருளைச் சிறிதுசிறிதாகக் கிடைநிலையிலிருந்து உயரச் சாய்க்கும்போது ஒரு நிலையில் பொருள் சறுக்கத் துவங்குகிறது. அந்நிலையில், பொருள் கிடைமட்டத்திலிருந்து 1° கோணம் சாய்ந்திருப்ப தாசுக் கொள்ளலாம். இக்கோணத்தின் கிடக்கையைக் கணக்கிட, உராய்வுக்கெழு கிடைக்கிறது. உ.கெ.= tan 6 உராய்வுக்கோணத்திற்கும் உராய்வுக்கெழுவிற்கும் உள்ள தொடர்பை முதன்முதலாக உலகிற்கு அறி வித்த பெருமை லியனார்டு ஆய்லரைச் சாரும். உராய்வுக்குக் காரணம். சறுக்குத்தளங்களின் அணுக்களுக்கிடையே செயல்படும் ஒட்டுவிசைகாரண மாகவே, 50% உராய்வு விசை ஏற்படுகிறது என இக்கால அறிவியல் கொள்கை எடுத்துரைக்கிறது. மென்மையான தளத்தின் மீது கடினத்தன்மையுள்ள பொருள் சறுக்கிச் செல்லும்போது ஏற்படும் பள்ளங் கள், சொரசொரப்பான தளத்திற்குச் செங்குத்தாகச் செயல்படும் விசைக்கூறுகள், பொருள்களின் நெகிழ் திறம், பிற்படும் நிலையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு மின்கடத்தாப் பொருள்களில் உராய்வால் உண்டா கும் நிலை மின்கவர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்து எஞ்சியுள்ள 10% உராய்வு விசை மாறுபடுகிறது. நிறுத்தத் போன்ற தொலைவுகள். இரப்பர் பொருள்கள் மற்ற அலோகப் பொருள்களைவிட இரு மடங்கு கூடுதல் உராய்வு விசையை அளிக்கிறது. எனவே சாலை வாகனங்களின் டயர் பகுதிகள், காலணிகளின் அடிப்பகுதி ஆகியவற்றை இரப்பரைக் கொண்டு உருவாக்குகிறார்கள். இரப்பரின் சிறப்புப் பண்பு காரணமாகவே, வேகமாக ஓட்டிச் செல்லும் வாகனங்களில் தடையைப் பயன்படுத்தி விபத்துகள் நிகழா வண்ணம் அவற்றை எளிதில் நிலைக்குக் கொண்டுவர முடிகிறது. ஒரு குறிப்பிட்ட வேகத்தில் (V) இயங்கிக் கொண்டிருக்கும் பொருளை அந்நிலை யிலிருந்து சுழி வேகத்திற்குக் குறைத்து நிறுத்த உதவும் தொலைவிற்கு (S) நிறுத்தத் தொலைவு (stopping distance) எனப்பெயர். நிறுத்தத் தொலை விற்கும் சறுக்குப் பொருளின் வேகத்திற்கும் உள்ள தொடர்பை வாய்பாடு (3) எடுத்துரைக்கிறது. S= V2/2gf (3) இங்கு g. f ஆகியன முறையே புவிஈர்ப்பு முடுக்கம், உராய்வுக்கெழு ஆகியவற்றைக் குறிக்கின்றன. அட்டவணை 1இல் 100 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வாகனங்களின் நிறுத்தத் தொலைவுகள் காட்டப்பட்டுள்ளன. உராய்வு அதிர்வு. சறுக்குப் பொருளின் வேகத்தைப் பொறுத்து உராய்வுக்கெழு மாறுபடுவதில்லை என்று உராய்வு நியதி கூறியபோதும், அதற்குச் சில விலக்கு கள் உண்டு. ஒரு தளத்தின் மீது சறுக்குகின்ற பொருளின் வேகம் கூடும் போது உராய்வுவிசை குறைய நேரிட்டால் உராய்வு அதிர்வுகள் ஏற்படு கின்றன. இதனை எதிர்மறை உராய்வுப் பண்பு எனவும் கூறுவர். குறைந்த சறுக்கு வேகத்தில் ஏற் படும் அதிர்வுகள் எண்ணெய் இடாத கீல் பொருத்திய வெளிப்படும் கதவுகளிலிருந்து கிரீச் ஒலியைப் போலவும் அதிக சறுக்கு வேகத்தில் ஏற்படும் அதிர்வு கள் உயர்ந்த சுருதியில் எழும் கீச்சு ஒலியைப் 100 கி.மீட்டர் வேகத்திற்குக் கணிக்கப்பட்ட நிறுத்தத்தொலைவுகள் வாகன அமைப்பு 1. காய்ந்த சாலையில் செல்லும் மகிழ் ஊர்தி 2. ஈரச்சாலையில் செல்லும் மகிழ் ஊர்தி 3. காய்ந்த இருப்புப்பாதையில் செல்லும் இரயில் வண்டி உராய்வுக் கெழு நிறுத்தத்தொலைவு 0. 8 46 மீட்டர் 0. 5 74 மீட்டர் 0. 3 123 மீட்டர் 4. ஈரப்பரப்பில் செல்லும் இரயில் வண்டி 0. 2 184 மீட்டர் 5. பனி மூடிய சாலையில் செல்லும் மகிழ் ஊர்தி 0. 1 369 மீட்டர்