உருகி உறைதல் 597
தட்டைப் பாதத்தையோ (flat foot) கண்டு கவலைப் படலாம். இவை, மிகவும் விகாரத்துடன் இருந்தால் தான் உருமாற்றம் எனக் கொள்ளலாம். இந்த உரு மாற்றங்களின் காரணம் தெரியவில்லை. ஊட்டம் அல்லது வைட்டமின் குறைபாடுகள் காரணமாக லாம். முழங்கால் இடிப்பின் அளவை, இரண்டு உள் கணுக்கால் புடைப்புக்கு (medial malleoli) இடையே யுள்ள தூரத்தைக் கொண்டு கணக்கிட்டுத் தெரிந்து கொள்ளலாம். வளைகாலின் அளவை, தொடை எலும்புகளின் இரண்டு உள் முண்டுகளுக்கு (medial condyle) இடையே உள்ள தூரத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். தட்டைப்பாதம், பாத எலும்புகளின் வளர்ச்சிக் குறைவால் உண்டாகிறது. மற்றொரு உருமாற்றம், உள்நோக்கி வளைந்த பாத விரல்களாகும். இந்நிலை, எலும்புகளின் வளர்ச்சிக் குறைவால் ஏற்பட கால் லாம். மேலே கூறிய அனைத்தையும், உரிய வயதில் அறுவை சிகிச்சை செய்து சரிப்படுத்தலாம். மற்று மோர் உருமாற்றம் முதுகெலும்பின் பக்க வளை வாகும். இந்த உருமாற்றத்தைப் பின்வரும் வகை களாகப் பிரிக்கலாம். வளை காரணம் தெரியாத பக்க வளைவு. இதன் உண்மை யான காரணம் தெரியவில்லை. இந்தப் பக்க வால்,பாதிக்கப்பட்டவரின் உயரம் ஏறக்குறைய 15 செ.மீ. குறைகிறது. இந்நிலை கூனல் முதுகு போன்று தோற்றமளிக்கிறது. இந்நோய் போக்க மில்வாக்கியின் பட்டைகள் (milwaukee braces) உதவுகின்றன (இந்தப் பட்டைகள், மில்வாக்கி என்ற அமெரிக்க நகரில் 1946 இல் வால்டர் புட்னம் பிளவுண்டால் கண்டுபிடிக்கப்பட்டது). இதுவும் பலனளிக்காவிடில் அறுவை முறை கையாள நேரிடும். பிறவி ஊனப்பக்க வளைவு. இத்துடன் பல வித மான பிறவி ஊனங்கள் காணப்படுகின்றன. தண்டு வடமும், சிறுநீரகமும் கூடப் பாதிக்கப்படுகின்றன, அறுவை முறை கொண்டு இவற்றைச் சீர் செய்ய லாம். செயலிழப்புப் பக்க வளைவு. முதுகெலும்பின் பக்க வளைவு, இளம்பிள்ளை வாத நோயால் உண்டாக லாம். தவறான நிலையில் வளைவு. ஏற்படும் பக்க பள்ளிக் குழந்தைகள் தவறாக அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் படிக்கும்போதும் எழுதும்போதும் உண்டாகிறது. அண்மைக் காலமாக இந்தக் குறை பாடு காணப்படுவதில்லை. உருகி உறைதல் 597 நுரையீரல் பக்க வளைவு. ஒரு நுரையீரலின் சுருக்கத்தால் (fibrosis) அந்தப் பக்க மார்பின் அளவு குறைகிறது. அதை ஈடு செய்ய, முதுகு எலும்பு ஒரு பக்கமாக வளைகிறது. இது ஒரு நிரந்தரமான ஊன மாகும். ஏனெனில் நுரையீரல் குறை பாட்டைச் சரி செய்தால்கூடப் பக்கவளைவு மாறாது. முடக்குவாதக் காய்ச்சலில் கூடக் கை எலும்புகள் பாதிக்கப்பட்டு உருமாற்றம் அடைகின்றன. பிறவி ஊனங்களால் உருமாற்றம் ஏற்படுதல். இடுப்பு எலும்புகளின் நிலை பிறழ்வு விரிகணுப்பாதம் (talipes valgus) ஒடுங்கு கணுப்பாதம் (talipes varus ) குதிரைக் கணுப்பாதம் (talipes equinus) போன்ற பல உருமாற்றங்கள் உருவாகின்றன. பிறந்த உடனேயே பட்டைகளை உரிய முறையில் கட்டிச் சீர் செய்யலாம் அல்லது வயதடைந்தவுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். விரிகணுப் பாதத்தில். நடக்கும்போது பாதத்தின் உள்விளிம்பு தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும். ஒடுங்கு கணுப்பாதத் தில், பாதத்தின் வெளி ஓரம் தரையைத் தொட்டுக் கொண்டு இருக்கும். குதிரைப் பாதத்தில், நடக்கும் போது குதி கால் மட்டும் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும். தொழு நோயில் ஏற்படும் உருமாற்றங்களில், முகம்,கன்னம், மூக்கு, காது,கை ஆகியவை பாதிக்கப் படுகின்றன. கிளிக்கை அல்லது வளைந்த இடுக்கிக் கை (claw hand) குறிப்பிடத் தகுந்தது. துவக்க காலத்தில் அறுவை மூலம் இதைச் சரிசெய்யலாம். மு.கி.பழனியப்பன் உருகி உறைதல் பனிக்கட்டியின் உருகு நிலை அழுத்தத்தினால் குறை கிறது. எனவே, அதன் இயல்பான உருகுவெப்ப நிலையான 0° செ. இல் அதை மிகுந்த அழுத்தத்திற்கு உட்படுத்தினால் அது உருகி விடுகிறது. அழுத்தம் நீக்கப்பட்டால் அது மீண்டும் உறைந்துவிடுகின்றது. இவ்விளைவு உருகி உறைதல் (regelation) எனப் படும். தண்ணீரும் வேறு சில பொருள்களும் உறை வதால் பருமன் பெருகும் இயல்புடையவை. இத்தகைய பொருள்களிலேயே இவ்விளைவு நிகழ்தல் முடியும். இக்காரணத்தாலேயே பனிக்கட்டியைத் துகளாக்கி அத்துண்டுகளை ஒருங்கே சேர்த்து அழுத்தும்போது ஆங்காங்கே உருகுகின்றன. அழுத்துவதை நிறுத்தியதும் அந்நீர் மீண்டும் உறைந்து துண்டுகள் ஒட்டிக் கொள்கின்றன. பனிக்கட்டி மீது ஒரு கம்பியை வளைத்துப் படிய வைத்துக் கம்பியின் இருமுனை களிலும் எடைகளைக் கட்டித் தொங்கவிட்டால் அவை