42 இறகு கொத்தும் நோய்
42 இறகு கொத்தும் நோய் கோழிப் பண்ணையில் நல்ல பராமரிப்பு, இட வசதி, காற்றோட்டம் ஆகியவை இல்லாத நிலை யாலும் தீவனத்தில் ஊட்டச்சத்துக் குறைவாலும் கோழிகள் இப்பழக்கத்திற்கு ஆளாகின்றன. ஒரு பண்ணையில் இருக்கும் கோழிகளிடையே இப்பழக் கம் ஏற்பட்டு விட்டால் பின்னர் அதைப் போக்குவது கடினம். இதனால் கோழிப் பண்ணையில் ஏற்படும் இழப்பைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுப்பதே சிறந்த வழியாகும். தற்சமயம் பெரும்பான்மையான கோழிகள் ஆழ் கூள முறையில் வளர்க்கப்படுகின்றன. இம்முறையில் வளர்க்கப்படும் கோழிகளிடம் இப்பழக்கம் ஏற்படப் பல காரணங்கள் உண்டு. ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் முட்டைக்கோழிகளில் ஒரு கோழிக்கு இரண்டு சதுர அடிப் பரப்பளவு வீதம் இடவசதி இருக்க வேண்டும். தீவனம் உட்கொள்ளவும், நீர் அருந்தவும் அவற்றிற்குத் தேவையான தட்டுகள் வைக்க வேண்டும். தீவனத் தட்டில் தீவனம் எப் போதும் இருக்க வேண்டும். மேலும் பண்ணையில் காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். அவ்வாறில் லாமல் கோழிகள் நெருக்கமாகவும் காற்றோட்ட வசதி இல்லாமலும் வளர்க்கப்படும்போது இத்தீய பழக்கம் ஏற்படலாம். கோழித் தீவனத்தில் குறைந்த அளவு நார்ப் பொருளும் உப்பும் இருப்பின் கோழிகள் இப்பழக்கத் திற்கு அடிமையாக வாய்ப்புண்டு. எனவே தீவனத் தில் 7% நார்ப்பொருளும் 0.6-1% உப்பும் இருக்கு மாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோழிகளுக்குக் குச்சித்தீவனம் அளித்தால் இப்பழக்கம் பெரும் பான்மையாகக் காணப்படும். முட்டையிடுவதற்கான பெட்டிகளை ஐந்து கோழிகளுக்கு ஒன்று என்ற அளவில் வைக்கவேண் டும். மேலும் அப்பெட்டி இருட்டாக இருக்குமாறு அமைக்க வேண்டும். செயற்கை ஒளியைத் தேவை யான அளவுக்கு மேல் கொடுக்கக் கூடாது. இருநூறு சதுர அடிக்கு ஒரு அறுபது வாட் மின் விளக்கு வீதம் அமைத்தலே நல்லது. பேன், செதில்பூச்சி, தெள்ளுப்பூச்சி போன்ற புற ஒட்டுண்ணிகளாலும் கோழிகள் இப்பழக்கத்திற்கு ஆளாகின்றன. மரபியல் அடிப்படையில் சில இனக் கோழிகளில் இப்பழக்கம் மிகுதியாகக் காணப்பட லாம். குறிப்பாக அமெரிக்க ஆசிய இனங்களைவிட எடை குறைவான மத்திய தரைக்கடல் பகுதி இனங் களில் இது பெரிதும் காணப்படும். மேலும் இப் பழக்கம் கோழிகளின் எந்த வயதிலும் காணப்பட லாம். வளரும் கோழிகளில் கால் விரல்கள், இறகு, குதப்பகுதி, கொண்டை, வால் இறகு ஆகிய இடங் களில் ஒன்றையொன்று கொத்திப் பாதிப்பை ஏற் படுத்துகின்றன. முட்டையிடும் கோழிகளின் தலை, குதம் போன்ற பகுதிகளில் கொத்தி இரத்தக் காயம் ஏற்படுத்துகின்றன. குதப்பகுதியைக் கொத்துதல். முட்டையிடும் கோழி களில் இது பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. இளம் வயதிலேயே கோழிகள் பெரிய முட்டைகளை இடுவதாலும் கோழிகளின் கருப்பை குதப்பகுதிகள் வெளித்தள்ளப்படுகின்றன. கோழிகள் இத்தகைய சிவந்தப் பகுதிகளை மிகுதியாகக் கொத்துகின்றன. ஒரு முறை இப்பகுதியைக் கொத்திய கோழி அதன் சுவையை அறிந்தவுடன் மீண்டும் மீண்டும் அப்பகுதி யைத் தாக்குகிறது. மேலும், இதை அறியும் பிற கோழிகளும் அப்பகுதியைத் தாக்குகின்றன. இதனால் இரத்தம் மிகுதியாக வெளியேறி அவை இறக்கவும் நேரிடுகிறது. சில சமயங்களில் முட்டைப் பையும் குடல் பகுதிகளும் வெளித் தள்ளப்பட்டுக் கோழிகள் இறந்து விடுகின்றன. தலை அல்லது கொண்டைப் பகுதியைக் கொத்து தல். கோழிகளின் கொண்டை தாடைகளில் காயம் ஏற்படும்போது இதைக் காணும் கோழிகள் அதே இடங்களில் மீண்டும் கொத்திப் பாதிப்பை ஏற் படுத்துகின்றன. சிலசமயங்களில் காது, கண்கள் ஆகிய பகுதிகளைச் சுற்றி வீக்கம் ஏற்பட்டு இரத்தக் கசிவு காணப்படும். இறகைக் கொத்தி இழுத்தல். கோழிகளை இட வசதி இல்லாமல் அடைத்து வைக்கும் போது இந் நிலை தோன்றும். மேலும் தீவனத்தில் ஊட்டச்சத்து, தாது உப்புப் பற்றாக்குறை, கோழிப் பேன் போன்ற புற ஒட்டுண்ணிகளின் தாக்கம் ஆகிய காரணங்க ளாலும் கோழிகள் இறகைக் கொத்திக் காயம் உண் டாக்கும். கால் விரலைக் கொத்துதல். இளங்குஞ்சுகளிடம் இதைப் பெரும்பாலும் காணலாம். தீவனத் தட்டில் தீவனம் இல்லாமல் இருப்பதும் இருப்பதும் கோழிகளுக்கு எட்டாமல் அத்தட்டுகளை உயரமாகப் பொருத்து வதும், தீவனம் உட்கொள்ளத் தேவையான இ வசதி இல்லாமல் இருப்பதும் இதற்குக் காரணங் களாகும். எனவே குஞ்சுகள் தங்களுக்குத் தேவையான அளவு தீனி கிடைக்காதபோது தமக்கு அருகிலுள்ள குஞ்சுகளின் கால் விரல் பகுதியைக் கொத்தத் தொடங்குகின்றன. வருமுன் காப்பு. இறகு கொத்தும் பழக்கத்தை வருமுன் தடுக்கப் பண்ணையில் கீழ்க்காணும் முறைகளைக் கையாள வேண்டும். கோழிகளின் அலகை இரண்டு முதல் நான்கு வாரத்திற்கு ஒரு முறையும், பதினான்கு முதல் பதினாறு வாரத் திற்குள் ஒரு முறையும் வெட்டி விட வேண்டும். கோழிகளின் அலகை வெட்ட மின் அலகு வெட்டி யைப் பயன்படுத்த வேண்டும். வெட்டும்போது மேல் அலகை மூன்றில் இரண்டு பங்கும் கீழ் அலகை