உருமாற்றப் பாறை 617
எளிதில் வெப்ப உருமாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதற்கு அதிலுள்ள எளிதில் கரையக்கூடிய கனிமங் களே காரணமாகும். கரைந்த கனிமங்கள் மீண்டும் எளிதில் படிகங்களாகக் குறிப்பிட்ட வெப்ப, அழுத்த, வேதிச் சூழ்நிலைகளில், சுண்ணாம்பு. மக்னீசிய மூலகங்களை ஏற்றுக் கனிமங்களாகத் தோன்றுகின்றன. சிலிகாவும் அலுமினிய மாசுப் பொருள்களும் அவற்றில் இருக்கும்பொழுது இவ் வேகை நிலையற்ற தன்மை அதிகம் காணப்படு கின்றது. கால்சியம் கார்பனேட்டைத் (சுண்ணாம்புக் கல்) திறந்த வெளியில் வெப்பப்படுத்தும்போது அதிலிருந்து சுண்ணாம்பும், கார்பன் டை ஆக்சைடும் தோன்றுகின்றன. ஆனால் அதே கண்ணாம்புக் கல்லை அழுத்தம் கொடுத்து வெப்பப்படுத்தினால் மேற்கூறியவாறு பிரியாது. படிகவய சுண்ணாம்புக் கல்லாகவோ சலவைக்கல்லாகவோ மாற்றம் அடையும். மிகவும் கெட்டியான சலவைக் கற்கள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. இவற்றைத் தேய்த்து அழகாக மெருகேற்றலாம். கட்டடங்கள் கட்டுவதற்கு இக்கற்கள் மிகவும் பயன்படுகின்றன. சான்றாகத் தாஜ்மஹாலைக் குறிப்பிடலாம். சுண்ணாம்புக் கற்களில் சில சமயம் சிலிகா, அலுமினா போன்ற மாசுப் பொருள்கள் கலந்திருக் கும். இவ்வகைக் கற்கள் உருமாற்றத்தின்போது, சுண்ணாம்பு சிலிகேட்டாகவும், அலுமினியம் அதிக மாக இருக்கும்பொழுது கார்னெட் வகைக் கனிம மான வெசுவியனைட், அனார்த்தைட், ஒல்லாஸ் டோனைட், டையாப்சைட், டிரிமோலைட், சோயி சைட், எப்பிடோட் போன்ற கனிமங்களாகவும் தோன்றும். பெரும்பாலான சுண்ணக் கற்கள் மக்னீசிய மாசுப் பொருள்கள் கொண்டவையாகவே உள்ளன. இவை, தொடு பாறை உருமாற்றத்தின் காரணமாக ஆம்பிபோல், பைராக்சீன் வகைக் கனி மங்களில் தோற்றமளிக்கின்றன. இவற்றுள் சால்க் சிலிகேட் ஹார்ன்பெல்ஸ் ஆகியவை முக்கியமானவை யாகும். டோலமைட் எனப்படும் மக்னீசிய வகைச் சுண்ணாம்புக்கல் வெப்ப உருமாற்றத்தின் காரண மாகக் கால்சைட், பெரிகிளேஸ் கனிமமாகப் பிரி கின்றது. இதிலிருந்து கார்பன் டை ஆக்சைடு வெளி யேற்றப்படுகிறது. இவ்வகை வேதிப் பிரிவினை, டோலமைட் முறிவு எனப்படும். இவ்வித முறிவு ஏற்படுவதற்குச் சிலிகாவும், களிமண் வகை மாசுப் பொருள்களும் பெரிதும் துணை புரிகின்றன. இதனால் புதிய கனிமங்கள் தோற்றுவிக்கப்படு கின்றன. மாசுப் பொருள்களின் அளவுக்கு ஏற்பப் பலவகைச் சலவைக் கற்கள் தோன்றக்கூடும். எடுத்துக்காட்டாக ஃபார்ஸ்டரைட் சலவைக்கல், சர்பன்டீன் சலவைக்கல் போன்றவற்றைக் குறிப் பிடலாம். சர்பன்டீன் சலவைக்கல்லில் சர்பன்டீன் சேர்ந்திருப்பதால் அது அழகான பசுமை நிறத்தைத் உருமாற்றப் பாறை 617 தருகின்றது. இது ஒபிகேல்சைட் எனப்படும். இதில் சிலிகா அதிக அளவில் மாசுப் பொருளாக இருக்கும் போது டையாப்சைட் என்னும் கனிமம் தோன்று கிறது. அதேபோல் சிலிகா ஓரளவு மட்டும் இருப்பின் டையாப்சைட் கனிமத்திற்குப் பதிலாக டிரிமோ லைட் என்னும் கனிமம் தோன்றுகிறது. மணற்கற்களின் வெப்ப உருமாற்றம். மணற்கற்கள் குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் ஆகிய கனிமங்களால் ஆனவை. ஆகவே இவற்றை வெப்பம் தாக்கும்போது அக்கனிமங்கள் மீண்டும் படிக வயத் தன்மையைப் பெற்று மாற்றம் அடைகின்றன. புதிய கனிமங்கள் இதிலிருந்து தோன்றுவதில்லை. இவ்வாறு மாற்றம் அடையும் கற்களின் மேற்பகுதி ஏறக்குறைய கண்ணாடிச் சில்களை ஒத்த மிளிர்வினைக் கொண் டிருக்கும். இப்பாறைகளைக் குவார்ட்சைட் என்று குறிப்பிடுவர். இவ்வகைக் கற்கள் வெள்ளை அல்லது இளநிறத்தைக் கொண்டு மிகவும் கடினமான பாறை களாகக் காணப்படும். இவற்றில் குவார்ட்ஸைட் தவிர ஏனைய கனிமங்கள் இல்லை. படிகங்கள் ஒரே அளவு உடையவையாக இருக்கும். பிற குவார்ட்ஸ் கனிமங்கள் கொண்டு தோன்றும் உருமாற்றப் பாறை களை இனம் பிரித்தறிய, இவற்றைக் குவார்ட்ஸ் ஹார்ன்ஃபெல்ஸ் என்று கூறுவர். உ களிமண், சுண்ணாம்பு மக்னீசிய மாசுப் பொருள் கள் இப்பாறைகளில் காரையாக அமையும்போது, அவற்றின் வேறு பல வகைக் கனிமங்கள், வேதிக் கூட்டு அமைவிற்கு ஏற்பத் தோற்றுவிக்கப்படுகின்றன. பெரிய பருக்கைகள் கொண்ட படிக வய சில்லி மனைட், கார்டியரைட் கொண்ட அபிரக ஹார்ன் ஃபெல்ஸ் போன்றவை சில அரிய வகைகளில் சில்லிமனைட், ஆண்டாலூசைட், கார்டியரைட் போன்ற கனிமங்களின் பருக்கைக் கனிமங்களாகத் தோற்றுவிக்கப்படுகின்றன. காரக் குணமுள்ள எரிமலைக் குழம்பு, எரிமலைச் சாம்பல் ஆகியவை வெப்ப உருமாற்றம் அடையும் போது, அவற்றின் கூட்டமைவிற்கு ஏற்பப் பல கனிமங்களைத் தோற்றுவிக்கின்றன. அமில வகை அனற் கற்கள் தொடு உருமாற்றப் பாறை வகை களில் கனிமங்களைப் காணப்படும் போன்றே அதாவது குவார்ட்ஸ் கனிமங்களைக் கொண்டவை யாக இருக்கும். ஆனால் கார அனற்பாறை வகைகள் வெப்பமாற்றத்தின் காரணமாக எளிதில் உருமாற்றம் அடைகின்றன. இந்தக் காரப் பாறைகளில் உள்ள மிகு வெப்பக் கனிமம், குறை வெப்பக் கனிமமாக மாற்ற மடைகிறது. ஊடுருவல் பாறை அல்லது எரிமலைக் குழம்பின் நேரடி வெப்பத் தாக்குதலுக்கு உள்ளாகும் காரக்குணம் கொண்ட பாறைகள் மாற்றமடைந்து பைராக்சீன் ஃபெல்ஸ்பார் - ஹார்ன்ஃபெல்ஸ் வகை களாகத் தோன்றுகின்றன.