உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 உருவாரங்கள்‌

626 உருவாரங்கள் - 3மி.மீ. 5 மி.மீ. தடிமன் கொண்டவை. சுடுமண் உருவார ஓடுகளோ 5 மி.மீ - 2.5 மி.மீ தடிமனைக் கொண்டிருக்கும். மிகச் சிறிய பொம்மைகள் திண்மை யாகவும், உள்ளீடற்றவை பெரியவையாகவும், யாகவும் இருக்கும். நன்றாக உலர்ந்த களிமண்ணைத் தரையில் பரப்பி, இரவில் நீர் தெளித்துவிடுவர். அது காலை யில் நன்கு ஊறியிருக்கும். காலால் மிதித்தும், கை களால் பிசைந்தும், ஒரே சீரான முக்கால் திண்மப் பதத்தில் அதைத் தயாரிப்பர். இந்தக் கட்டத்தில் தேவையான அளவு மணல் கலந்து பிசைந்து கொள் வர். பண்டங்கள் செய்ய, இந்தப் பதத்திலேயே திரிகையில் திரையாக வைத்து வனைவர். உருவாரங் களுக்கு இம்மண்ணோடு, கம்புக் கதிரில் கம்பு நீக்கிய கொம்மை கலந்து நன்கு பிசைந்து கொள்வர். கொம்மை கிடைக்காத இடங்களில் உமி கலந்து கொள்வர். சூளையில் சுடும்போது கொம்மையும், உமியும் வெந்து சாம்பலாகிவிடுமாதலால், இவை அமைந்திருந்த இடம் வெறுமையாகி. உருவார ஓடுகள் புழை மிகுந்தவையாக இருக்கும். கொம்மை கலந்த மண் புரியாக உருட்டப்பட்டு, தரையில் பலமாகத் தட்டப்படுகிறது. இது பரலை எனப்படும். பரலை ஓரளவு உலர்ந்தவுடன், மற் றொருவர் துணையோடு இதைத் தரையிலிருந்து எடுத்து உருளையாகச் சுருட்டி. இரு முனைகளையும் புது மண்ணால் இணைத்து விடுவர். இது குதிரை யின் கால் ஆகும். அடி வயிற்றுக்காக இன்னொரு பரலை ஆயத்தம் செய்து கொள்வர். நான்கு கால்கள் செய்து அடி வயிற்றுக்கான பரலையும் சேர்த்து, தகுந்த வடிவில் நிறுத்திப் புது மண்ணால் புரியால் இணைத்துக்கொள்வர்.. இவ்வாறு கால்களையும், அடி வயிற்றையும் இணைத்துக் குதிரையின் கீழ்ப் பகுதி உருவாக்கப்படுகிறது. இணைத்த மண் ஓரளவு காய்ந்தவுடன் அடுத்த புரி வைத்து, வயிற்றுப் பகுதியை எழுப்புவர். பின்னர் முதுகையும் மூடி விடுவர். கழுத்துப் பகுதியில் ஒரு ஒரு பெரிய வட்டத் துளையும் வாலுக்குச் சிறிய உருளையும் இருக்கும். இதே வகையில் தலை தனியாக உருவாக்கப்படும். புதுமண் ஓரளவு உலர்ந்தவுடன், இணைப்பு வலியுடன் இருப்பதற்காக உள்ளே கருங்கல்லை ஆதாரமாகப் பிடித்துக்கொண்டு வெளியே தட்டுப் பலகையால் தட்டி இறக்குவர். இதனால் மண் இணைப்புகள் உறுதியாகின்றன. குதிரைக்கான அழகு வேலைகள் பின்னர் புனையப்படும். கடிவாள் வார், மணிமாலை, சங்கிலி அழகுப் பட்டை ஆகிய அனைத்தும் புதிய மண்ணால் ஒட்டப்படுகின்றன. வைத்த இடத்திலேயே இவை உருவாக்கப்படுகின்றன. குதிரை நன்கு வெயிலில் உலரவைக்கப்படும். குதிரையின் துண்டங்களையும் சூளையில் சுடுவர். கால்களில் கயிறு கட்டி அதன் வழியே இரு தண்டுகளை நுழைத்து எண்மர் அதைத் தூக்கிக் கொண்டு செல்லவேண்டும். சுட்ட குதிரைக்கு முதலில் சுண்ணாம்பு பூசி அதன்மேல் சிவப்புக் காவி, மஞ்சள் காவி,கரி,இலைகளைக் கசக்கி வரும் பச்சை ஆகிய வண்ணங்கள் பூசுவர். கண்ணுக்குக் கருவிழி வைப் பது மட்டும் நிறுத்தி வைக்கப்படும். உருவாரங்கள் குதிரையின் தலையைத் தூக்கிக் கழுத்தின் மீது வைப்பர். கயிறு கொண்டு, ஏற்கனவே இரண்டிலும் விடப்பட்ட துளைவழியே கோத்துப் பின்னிக் கட்டு வர். கட்டிய இடத்தில் கயிறு தெரியாவண்ணம், சுண்ணாம்புக் காரைச் சாந்து பூசுவர். அதன் மேலும் வண்ணம் பூசிவிடுவர். சலவையாளரிடமிருந்து பெற்ற வண்ணப்புடவைகள் கொண்டு குதிரையின் இடுப்பை அலங்கரிப்பர். வாலிலும், காதுகளிலும், வாயிலும் வேப்பிலைக் கொத்துகள் செருகுவர். கழுத்துப் பக் கத்தில் இரு வாழைக் கன்றுகளை கட்டுவர். இப் போ து அரண்மனைக் குதிரை பூசைக்கு ஆயத்தமாக இருக்கும். கோயில் விழாவினர் மேளதாளம் தாரை தப்பட்டையோடு வந்து பூசைப்பொருள் வழங்குவர். குதிரை செய்த குயவரே பூசை செய்து கண்ணுக்குக் கறுப்பு விழி வைத்துக் கண் திறப்பார். பண்டைக் காலம் போல ஆடு வெட்டிப் பலியிடும் வழக்கம் தற்போது இல்லை. நீர்ப் பூசணிக்காயை வெட்டிச் சிவப்புப் பூசுவர். குதிரையின் கால்களில் இரு நீளத் தண்டுகளைக் கயிற்றில் கோத்து, ஊர் மக்கள் தூக்கிச் சென்று கோயில் முன் நிறுத்துவர். பதினைந்து அடி உயர முனியப்பன் பொம்மை யும் இவ்வாறே செய்யப்படும், இடுப்புவரை ஒரு