634 உருளளப் புழு
634 உருளைப் புழு தொற்றும் நிலை என்று மேலுறை, உடலுக்குப் பெயர். தோலுரித்த பாதுகாப்பு உறையாக உள்ளது. இத்தகைய உறையுடையவை கூடுடை இளம் உயிரிகள் என அழைக்கப்படுகின்றன. முட்டைச் சவ்வினுள் உள்ளவற்றிற்கு முட்டையுள் இளம் உயிரிகள் என்று று பெயர். வாழ்க்கைச்சுழலின் வகை. நிலவாழ் உருளைப் புழுக்களில் இளம் உயிரிகள் முட்டையிலிருந்து வெளி வந்து, தொடர்ந்து வளர்ச்சியுற்று, சிறு மாற்றங் களைப் பெற்றுத் தோலுரித்து முதிர் புழுக்களா கின்றன. இடைநிலை விருந்தோம்பிகள் இல்லை. இதற்கு நேரடி வாழ்க்கைச் சுழல் என்று பெயர். தாவரங்களின் வேர்ப் பகுதிகளுக்கு அருகில் வாழும் புழுக்களின் இளம் உயிரிகள், வேர்த் திசுக்களைத் துளைத்துச் சென்று சாற்றை உண்டு வாழ்கின்றன. இது தாவர ஒட்டுண்ணியாதலின் தொடக்க நிலை ஆகும். சில புழுக்களின் இளம் உயிரிகள் உயிரிகள் தாவரத் திசுக்களில் தங்கிப் பால்வழி இனப்பெருக்கம் செய் கின் ன்றன. இது தாவர ஒட்டுண்ணியாதலின் பின் நிலையாகும். ஹெட்டிரோடிரா இனப்புழுக்கள் தாவரத் திசுக்களைத் துளைத்து வாழ்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன. இவை தாவரங்களோடு ஒன்றிய ஒட்டுண்ணிகள் ஆகும். தாவரங்கள் இல்லையேல் இனப்பெருக்கம் செய்ய முடியாது. சில நேரங்களில் கன்னி இனப்பெருக்கமும் நடை பெறுகிறது. இது தாவர ஒட்டுண்ணியாதலின் இறுதி நிலையாகும். சில புழுக்களின் இளம் உயிரிகள், பூச்சிகளுக்கு உணவுப்பொருள்களாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை மற்ற உயிரிகளில் தொற்றும் நிலையை அடைகின்றன. இது விலங்கு ஒட்டுண்ணியின் தொடக்க நிலையாகும். சில நிலவாழ் புழுக்களின் இளம் உயிரிகளுக்குப் போதுமான உணவு கிடைக்காதபோது, முதுகெலும் பற்ற வேறு உயிரிகளின் உடலையடைந்து வளர்ச்சி யுற்று அவற்றின் உடலிலேயே தங்கிவிடுகின்றன. ஓம்புயிரி இறந்த பின்னர் அதை உண்டு வளர்ந்து முதிர் நிலையடைகின்றன. இது மட்குண்ணி முறையில் விலங்கு ஒட்டுண்ணியாதலாகும். மெர்ழித்திடு உருளைப்புழுக்கள் இளம் உயிரி நிலையில் மற்ற முதுகெலும்பற்றவையில் ஒட்டுண்ணியாக வாழ் கின்றன. பின்னர் வெளிவந்து பால் முதிர்ச்சி நிலையை அடைகின்றன. இது இளம் உயிரிநிலையில் மட்டும் ஒட்டுண்ணியாதலாகும். சிலவற்றின் வளர் புழுக்களும் ஓம்புயிரியின் உடலில் வளர்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன. ஓம்புயிரி இறந்ததும் அதன் உடலைத் தின்று வாழ்ந்து இனப்பெருக்கம் செய் கின்றன. மூன்றாம் நிலையான கூடுடைய தொற்றும் நிலை இளம் உயிரிகள் வேறு ஓம்புயிரியை அடை கின்றன. இது விலங்கு ஒட்டுண்ணி வளர்புழுவும், மட்குண்ணி இளம் உயிரியும் சேர்ந்த நிலையாகும். சில புழுக்களில் கலவிக்குப்பிறகு ஆண்புழு இறந்துவிடுகிறது. பெண்புழு வேறொரு முதுகெலும் பற்ற விலங்கின் உடலை அடைந்து புதிய தலைமுறை இளம் உயிரிகளை வெளியிடுகிறது. இது பெண் வளர் புழு மட்டும் விலங்கு ஒட்டுண்ணியாதல் நிலையாகும். சிலவற்றில் கருமுட்டைகளையுடைய பெண் புழுக்கள் ஓம்புயிரியின் உடலில் இளம் உயிரிகளை வெளி யேற்றுகின்றன. இளம் உயிரிகள் ஒம்புயிரியின் இள வுயிரிகளை உண்டு வாழும் தாவரங்களில் வெளி யேற்றப்படுகின்றன. புழுக்களின் இளம் உயிரிகள் ஓம்புயிரியின் இளவுயிரிகளின் உடலையடைந்து அவை வளர் உருமாற்றம் அடைந்து பூச்சியாக மாறும் வரை அதனுடலிலேயே தங்கியிருந்து பின்னர் வாழ்க்கைச் சுழலைத் தொடர்கின்றன. இது விலங்கு ஒட்டுண்ணி வளர் புழுவுடன் தாவர ஒட்டுண்ணி இளவுயிரி சேர்ந்த நிலையாகும். சிலவற்றின் இளம் உயிரிகள் தாவர ஒட்டுண்ணிப் பூச்சியின் உடலில் வாழ்கின்றன. சிலகாலம் வாழ்ந்து பின்னர் வெளி யேறித் தாவரத்திசுக்களையடைந்து முதிர்ச்சி அடைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இளம் உயிரிகள் மீண்டும் தாவர ஒட்டுண்ணிப் பூச்சியின் உடலை அடைகின்றன. இது விலங்கு ஒட்டுண்ணி இளம் உயிரிகளுடன் தாவர ஒட்டுண்ணி வளர்புழு சேர்ந்த நிலையாகும். சில பெண் புழுக் கள் பூச்சியின் உடலில் விடும் இளம் உயிரிகள் ஓம் புயிரிப் பூச்சியால் தாவரங்களில் விடப்படுகின்றன. இளம் உயிரிகள் வளர்ந்து கன்னி இனப்பெருக்க முறையில் பெண் புழுக்களாகப் பல தலைமுறைகள் வளர்ந்து இறுதி இறுதியில் பால்வழி இனப்பெருக்கம் செய்யும் தலைமுறை உண்டாகி வாழ்க்கைச் சுழற்சி யைத் தொடர்கிறது. இது கன்னி இனப்பெருக்கத் தாவர ஒட்டுண்ணி நிலையும் விலங்கு ஒட்டுண்ணி நிலையும் சேர்ந்த நிலையாகும். சிலவற்றில் பெண் புழுக்கள் ஓம்புயிரிப் பூச்சியின் உடலில் வாழ்ந்து கன்னி வழி இனப்பெருக்கம் செய்து பெண் புழுக் களை உண்டாக்கிப் பிறகுநிலத்தில் விடுகின்றன. இவை வளர்ந்து முதிர்ச்சியடைந்து கலவி இனப் பெருக்கம் செய்கின்றன. ஆண்புழுக்கள் இறந்து விடு கின்றன; முட்டைகளைக் கொண்ட பெண்புழுக்கள் பூச்சியின் இளவுயிரியை அடைந்து அது வளர் உரு மாற்றம் அடைந்து பூச்சியாக மாறியதும் முட்டை யிலிருந்து வெளியேறி மீண்டும் கலவி இனப்பெருக் கம் செய்து வாழ்க்கைச் சுழற்சியைத் தொடர்கின் றன. இது கன்னி இனப்பெருக்க விலங்கு ஒட்டுண்ணி நிலையும் தாவர ஒட்டுண்ணி நிலையும் சேர்ந்த நிலையாகும். குதிரையில் ஒட்டுண்ணியாக வாழும் புராப்ஸ்ட்மேரியா விவிபாரா பரம்பரையாக ஒரே ஓம்புயிரிலேயே வாழ்கிறது. இது தனித்து வாழும் நிலையற்ற விலங்கு ஒட்டுண்ணி நிலையாகும் சிலவற்றில் புழுவின் இளவுயிரி முதுகெலும்பற்ற அல்லது முதுகெலும்புள்ள ஓம்புயிரியின் உடலில்